எட்வின் டோங்: சமுதாய நல்லிணக்கத்தில் மக்களின் பங்களிப்பு அதிகரிக்கும்

சிங்­கப்­பூர்ச் சமு­தா­யம் பன்­ம­யத் தன்­மை­யு­டன் இருந்­தா­லும் வளர்ச்சி­ய­டைந்த இந்­நாட்­டில், வேற்று­மை­க­ளைச் சமா­ளிப்­ப­தில் சமு­தா­யத்­தின் பங்­க­ளிப்பு அதி­க­மாக இருக்­கும் என்று சமூக, கலா­சார இளை­யர் துறை அமைச்­சர் திரு எட்­வின் டோங் தெரி­வித்­துள்ளார்.

இன, சமய அடை­யா­ளங்­களை­யும் நம்­பிக்­கை­க­ளை­யும் பற்றிய ஆக்­க­பூர்வ கலந்­து­ரை­யா­டல்­களை ஊக்­கு­விக்­கும் ஹேஷ்­பீஸ் மன்­றத்­தின் முதல் ஆண்­டி­றுதி கருத்­த­ரங்­கில் பங்கேற்றுப் பேசிய திரு டோங் இத­னைக் கூறி­னார்.

சமு­தாய ஒற்­றுமை குலை­யா­மல் அர­சாங்­கம் விதி­மு­றை­களை உரு­வாக்­கு­கிறது. ஒற்­று­மை­யைப் பேண மக்­களும் தங்­கள் பங்கை ஆற்ற வேண்­டும். ஒற்­று­மையை நிலை­நாட்­டு­வ­தில் மக்­களும் அர­சாங்­க­மும் பங்­கா­ளி­கள். எனவே, இது­போன்ற கலந்­து­ரை­யா­டல்­கள் தேவை என்று திரு டோங் கூறி­னார்.

சகிப்­புத்­தன்மை என்ற நிலை­யைத் தாண்டி அனை­வ­ரை­யும் அர­வ­ணைத்­துச் செல்­லும் நிலைக்கு முன்­னே­ற புரிந்­து­ணர்வு தேவை என்று கூறிய திரு டோங், பல சம­யங்­களில் புண்­ப­டுத்­தும் வித­மா­கப் பேசு­வோர் பகைமை உணர்­வு­டன் அவ்­வாறு செய்­வ­தில்லை என தாம் நம்­பு­வ­தா­கத் தெரிவித்தார்.

அறி­யா­மை­யி­னா­லும் புரி­தல் இல்­லா­த­தா­லும் தங்­க­ளுக்கு ஏற்­படும் பதற்­றத்­தைச் சிலர் தவ­றாக வெளிப்­ப­டுத்­து­கின்­ற­னர். இந்­தப் புரிந்­து­ணர்வை மக்­க­ளிடையே கலந்­து­ரை­யா­டல் வழி­யாக ஏற்­படுத்­து­வது அவ­சி­யம் எனக் கரு­து­வ­தாக அவர் கூறி­னார்.

'ஹியூ­ஒன்' அரங்­கில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இந்த இரண்டு மணி நேர நிகழ்ச்­சி­யில் ஏறக்­கு­றைய 40 பேர் நேர­டி­யா­க­வும் 60 பேர் மெய்­நி­கர் வழி­யா­க­வும் பங்­கேற்­ற­னர். சமு­தா­யத்­தில் சமய நல்­லி­ணக்­கத்தை வளர்க்க ஏழு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் நஸ்­ஹத் ஃபாஹிமா, 36, தொடங்­கிய இயக்­கம் இவ்­வாண்டு ஜூன் மாதம் ஒரு மன்­ற­மாக அதி­கா­ர­பூர்­வ­மா­கப் பதிவு செய்­யப்­பட்­டது.

நல்­லி­ணக்­கம் மீது ஆர்­வம் கொண்­டுள்ள இளை­யர்­க­ளின் ஆறு ஆண்டு உழைப்­பின் அடுத்த கட்ட பரி­ண­ாமமே இந்த மன்­றம் என்று திரு­மதி நஸ்­ஹத் ஃபாஹிமா தெரி­வித்­தார்.

"இணை­யம் மூல­மாக மறை­மு­க­மா­கப் பிற­ரைப் புண்­ப­டுத்­தும் போக்கை மாற்­ற­வேண்­டும் என்ற இலக்­கைக் கொண்­டுள்­ளோம். மக்­களை நேர­டி­யாக சந்­திக்க வைத்து ஆக்­க­பூர்­வ­மான பேச்­சு­வார்த்­தை­களை உரு­வாக்க விரும்­பு­கி­றோம்," என்­றும் நஸ்­ஹத் ஃபாஹிமா கூறி­னார்.

கருத்தரங்குப் பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான பல சமய புரி­தல் நிலை­யத்­தின் தலை­வ­ரான திரு இம்­ரான் முகம்­மது சாகிப், அடை­யா­ளம் சார்ந்த அர­சி­யல் தற்­போ­தைய உல­கில் பெரு­கி­வ­ரும் சூழ­லில் மக்­களா­லேயே வழி­ந­டத்­தப்­படும் நல்­லி­ணக்க இயக்­கங்­கள் அமை­திக்கு முக்­கிய பங்கு வகிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"முப்­பது, நாற்­பது ஆண்­டு­களுக்கு ஒருமுறை வெவ்­வேறு தலை­மு­றை­யி­ருக்கு இடை­யி­லான பதற்­ற­நிலை உரு­வா­வது இயல்பு என்று பிர­பல சமூ­க­வி­யல் அறி­ஞர் கார்ல் மென்­ஹைம் தமது எழுத்து­களில் குறிப்­பிட்­டார். இந்த கால இடை­வெளி, தற்­போது சமூக ஊட­கம் ஆதிக்­கம் செலுத்­தும் இந்த யுகத்­தில் குறை­யும். அனைத்­து­லக சமூ­கத்­தின் மாறு­த­லுக்கு ஏற்றவாறு சமூ­க அமைப்­பு­களை நாம் புதுப்­பிக்­க­வேண்­டும் அல்­லது புதி­தாக உரு­வாக்­க­வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

இந்த அமைப்­பில் தற்­போது 15 பேர் உறுப்­பி­னர்­க­ளா­கப் பதிவு செய்­துள்­ள­னர். இதன் முதன்மைத் திட்­டங்­களில் குறைந்­தது 25 பேர் மும்­மு­ர­மா­கப் பங்­காற்றி வரு­வ­தா­கத் திரு­மதி ஃபாஹிமா தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார். வேலை செய்­யும் இள வய­தி­ன­ரும் பெற்­றோர்­களும் ஆர்­வத்­து­டன் பங்­கு­பெ­றும் இந்த மன்­றத்­தில் இன, சமய நல்­லி­ணக்க முயற்­சி­க­ளின் மீது ஆர்­வம் கொண்­டுள்­ளோர் வர­வேற்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

கி. ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!