லிட்டில் இந்தியா கொள்ளை; இரண்டு பேரும் குற்றவாளிகள்

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் இரண்டு பங்­ளா­தேஷ் ஊழி­யர் களி­டம் $300,000 கொள்ளை யடித்த ஐவ­ரில் கடைசி இரண்டு பேரும் குற்­ற­வா­ளி­கள் என நேற்று தீர்ப்பு அளிக்­கப்­பட்­டது.

சட்­ட­வி­ரோ­தப் பணம் அனுப்­பும் சேவையை வழங்கி வந்த இரு பங்­ளா­தேஷ் ஊழி­யர்­க­ளி­டம் காவல்­துறை அதி­கா­ரி­க­ளைப் போல நடித்து ஐவ­ரும் கொள்ளை யடித்­துள்­ள­னர்.

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளான முஹ­மட் ரிட்­ஸு­வான் முஹ­மட் யூசோப், 32, தவ­கு­ம­ரன் ராம­மூர்த்தி, 37, ஆகிய இரு­வ­ரும் குற்­ற­வாளி என மாவட்ட நீதி­பதி டோ ஹான் லி தனது தீர்ப்­பில் தெரி­வித்­தார்.

கொள்ளை, வீடு புகுந்து திரு­டி­யது போன்ற குற்­றச்­சாட்­டு­கள் அவர்­கள் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

இதே கொள்­ளை­யில் ஈடு­பட்ட நூர் முஹ­மட் அஸ்­ரில் சஜாலி, 29, ஷங்­கர் மகா­லிங்­கம், 32, ஜுரைமி ஜுப்ரி, 43 ஆகிய மூவ­ரும் இதற்கு முன்பு நடந்த வழக்­கில் விசா­ரிக்­கப்­பட்­ட­னர்.

சட்­ட­வி­ரோ­மாக பணம் அனுப்­பும் சேவையை வழங்­கிய சிக்­டர் சுஜன், 46, அலாம்­கிர் முஹ­மட், 49 ஆகி­யோ­ரும் மற்­றொரு வழக்­கில் விசா­ரிக்­கப்­பட்­ட­னர்.

சில பங்­ளா­தேஷ் ஊழி­யர்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக பணம் அனுப்பு வதை கவ­னித்த தவா, 2017 டிசம்­ப­ரில் மற்­றொ­ரு­வ­ரைச் சந்­தித்து அவர்­க­ளி­ட­மி­ருந்து பணத்­தைப் பறிப்­பது குறித்து ஆலோ­சனை நடத்­தி­ய­தாக நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

2017 டிசம்­பர் 10ஆம் தேதி சக ஊழி­யர்­க­ளி­ட­மி­ருந்து திரட்­டிய பணத்தை இரு பங்­ளா­தேஷ் ஊழி­யர்­களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்­க­வி­ருந்­த­னர்.

டிசம்­பர் 11ஆம் தேதி ரோவல் ரோட்­டில் உள்ள கட்­ட­டத்­தின் இரண்­டா­வது மாடி­யில் உள்ள அறை­யில் இரு பங்­ளா­தேஷ் ஊழி­யர்­களும் தங்­கி­யி­ருந்­த­னர். அப்­போது கொள்­ள­யர்­கள் உள்ளே புகுந்­த­னர்.

இரு­வர் உள்ளே நுழைந்­த­தா­க­வும் இரு­வர் வெளியே காவல் காத்­த­தா­க­வும் நீதி­மன்ற விசா­ர­ணை­யில் சுஜன் கூறி­யி­ருந்­தார்.

"தாங்­கள் குற்­ற­வி­யல் விசா ரணைப் பிரி­வி­லி­ருந்து வந்­தி­ருப்­ப­தாக தவா கூறி­னார். ரிட்­ஸு­வான் பின்­னர் அறைக்­குள் நுழைந்­தார். தவா கூறி­யதை நம்பி நாங்­கள் அவர்­க­ளி­டம் அடை­யாள அட்­டை­களை ஒப்­ப­டைத்­தோம்.

"ரிட்­ஸு­வான் அறை முழு­வ­தும் தேடி 300,000 வெள்­ளியை எடுத்­துக்கொண்­டார்," என்று சுஜன் தெரி­வித்­தி­ருந்­தார்.

பின்­னர் கொள்­ளை­யர்­கள் ஐவ­ரும் காரில் ஏறி சென்­று­விட்ட னர்.

சந்­தே­க­ம­டைந்த சுஜன், காவல் துறை­யி­ன­ருக்­குத் தக­வல் தெரி­வித்­தார்.

குற்­ற­வாளி எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட இரு­வ­ருக்­கும் அடுத்த மாதம் தண்­டனை விதிக்­கப்­படும் எனத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!