உடன்பிறந்தோர் ஒன்றாக தடுப்பூசி போட ஏற்பாடு

கொவிட்-19 தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்­துள்ள சிறு­வர்­கள் தங்­க­ளுடைய உடன்­பி­றந்­தோ­ரு­டன் ஒன்றாக தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­தற்­காக புதிய ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இனி தனித்­த­னி­யாக தடுப்­பூ­சிக்­குப் பதிந்­து­கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மி­ருக்­காது.

இம்­மா­தம் 10ஆம் தேதி­யி­ல் இருந்து இந்­தப் புதிய ஏற்­பாடு நடை­மு­றைக்கு வரு­கிறது என்று கல்வி அமைச்சு நேற்று தெரி­வித்­தது. சிறார்­க­ளுக்­கான தடுப்­பூசி நிலை­யங்­களில் வார நாட்­களில் திங்­கள் முதல் வியா­ழன் வரை உடன்­பி­றந்­தோர் ஒன்­றாக தடுப்­பூசி போட்­டுக் கொள்­ள­லாம் என்று அது கூறி­யது.

ஒன்­றுக்கு மேற்­பட்ட சிறார்­க­ளின் பெற்­றோ­ருக்­கும் காப்­பா­ளர்­ க­ளுக்­கும் புதிய ஏற்­பாடு வச­தி­யாக இருக்­கும் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் அமைச்சு தெரி­வித்­தது.

இந்த ஏற்­பாட்­டின் மூலம் பெற்­றோர் அல்­லது காப்­பா­ளர்­கள் தங்­க­ளு­டைய பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போட விரும்­பி­னால் இரவு ஏழு மணிக்­குள் தடுப்­பூசி நிலை­யத்­துக்கு வர வேண்­டும். தடுப்­பூசி போடும் அனைத்து சிறு­வர்­க­ளின் மாண­வர் அடை­யாள அட்டை அல்­லது பிறப்­புச் சான்­றி­தழ், கட­வுச்­சீட்டு, சிங்­பாஸ் போன்ற இதர அடை­யாள ஆவ­ணங்­க­ளைக் கொண்டு வரு­வது அவ­சி­யம்.

உடன்­பி­றந்­த­வர்­கள் தனித்­தனி யாக தடுப்­பூ­சிக்கு முன்­ப­திவு செய்­தி­ருந்­தால் அவற்­றில் ஒன்றை ரத்து செய்து ஒரே நேரத்­தில் தடுப்­பூசி போட்­டுக்கொள்­வதை ஊக்­கு­விக்­கி­றோம் என்று அமைச்சு தெரி­வித்­தது.

தேசிய தடுப்­பூசி முன்­ப­திவு இணை­யத்­த­ளம் வழி­யாக இத­னைச் செய்ய முடி­யும்.

அடுத்த சில வாரங்­களில் தடுப்­பூ­சிக்கு அதி­க­மா­னோர் பதிவு செய்­துள்­ள­தால் வெள்­ளிக்­கி­ழமை முதல் ஞாயிறு வரை உடன்­பி­றந்­தோர் ஒன்­றாக தடுப்­பூசி போட்­டுக் கொள்ள முடி­யாது.

நேற்று மேலும் ஏழு சிறார்­க­ளுக்­கான தடுப்­பூசி நிலை­யங்­கள் தொடங்­கப்­பட்­டன. இவற்­று­டன் சேர்த்து சிறு­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி நிலை­யங்­க­ளின் எண்­ணிக்கை 14க்கு அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி ஏழு நிலை­யங்­கள் செயல்­ப­டத் தொடங்­கின.

இந்­நி­லை­யில் 15வது சிறு­வர்­ களுக்­கான தடுப்­பூசி நிலை­ய­மும் இம்­மா­தம் 11ஆம் தேதி யூசோஃப் இஷாக் உயர்­நி­லைப் பள்­ளி­யில் தொடங்­கப்­ப­டு­கிறது.

இவ்­வே­ளை­யில் புதிய ஏற்­பாட்­டின் மூலம் மாண­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட விரும்­பும் பெற்­றோர் அல்­லது காப்­பா­ளர்­கள் பள்­ளிக்கு மாைல ஏழு மணிக்­குப் பதி­லாக ஐந்து மணிக்கே வர வேண்­டும் என்று கல்வி அமைச்ச நினை­வூட்­டி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!