‘இரண்டு மாதங்களில் ஓமிக்ரான் ஆதிக்கம்’

அதி­கம் பர­வ­வல்ல ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி, சிங்­கப்­பூ­ரில் அடுத்த இரு மாதங்­களில் டெல்டா திரி­பின் இடத்­தைப் பிடித்து, ஆதிக்­கம் செலுத்­தும் திரி­பாக உரு­வெ­டுக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக தொற்­று­நோ­யி­யல் வல்­லு­நர் டேல் ஃபிஷர் தெரி­வித்து இருக்­கி­றார்.

அந்­நிலை ஏற்­பட்­டா­லும், ஒட்டு­மொத்த தொற்று பாதிப்­பைக் காட்­டி­லும் எத்­தனை பேர் கடு­மை­யாகப் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்­ப­தில்­தான் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று திரு ஃபிஷர் கூறி­னார்.

பலர் கடு­மை­யான பாதிப்­புக்கு ஆளா­கும் பட்­சத்­தில், மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தும் தீவிர சிகிச்­சைப் பிரிவு படுக்­கை­களுக்­கான தேவை­யும் கூடி, நாட்­டின் சுகா­தா­ரக் கட்­ட­மைப்­பிற்கு நெருக்­கு­தலை ஏற்­ப­டுத்­தி­வி­ட­லாம்.

"கணிப்­பு­கள் மெய்­யா­னால், இலே­சான நோய்த்­தொற்­றால் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­ட­லாம். ஆனா­லும், இப்­போ­தைக்கு அதை உறு­தி­யா­கச் சொல்­வ­தற்­கில்லை," என்­றார் மூத்த ஆலோ­ச­க­ரான பேரா­சி­ரி­யர் ஃபிஷர்.

"நாட்­டைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தி­லும் பய­ணங்­கள், சமூக, பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றி­லும் ஒரு சம­நி­லை­யைப் பேணு­வ­தைச் சிங்­கப்­பூர் தொடர வேண்­டி­யுள்­ளது," என்று அவர் சொன்­னார்.

உல­கில் மற்ற கொவிட்-19 திரிபு­களை எல்­லாம் ஓமிக்­ரான் பின்­னுக்­குத் தள்­ளி­வ­ரும் நிலை­யில், அடுத்த சில வாரங்களில் சிங்கப்பூரில் தொற்று பாதிப்பு உயரக்கூடும் என்று தேசிய பல்­கலைக்­கழகத்தின் சோ சுவீ ஹாக் பொதுச் சுகா­தாரக் கழ­கத்­தின் தொற்­று­நோயியல் வல்­லு­ந­ரும் இணைப் பேரா­சி­ரி­யரு­மான சு லி யாங் கூறி­னார்.

வரும் மாதங்­க­ளி­லும் ஓமிக்­ரான் கவ­லை­ய­ளிக்­கக்­கூ­டிய கிருமி­யாக நீடிக்­கும் என்று டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வக் கழக இணைப் பேரா­சி­ரி­யர் ஆஷ்லி செயின்ட் ஜான் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!