ஆய்வு: பெருந்தொற்று காலத்தில் தாம்பத்திய உறவில் அதிகம் ஈடுபட்ட மணமான தம்பதியர்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 காலத்­தில் மண­மான மாதர்­கள் உடலுறவில் அதி­க­ம் ஈடு­பட்­ட­னர் என்று ஓர் ஆய்வு தெரி­விக்­கிறது. இதன் கார­ண­மாக குழந்தைப் பிறப்பு விகிதம் அதி­க­ரிக்க வழி ஏற்­படும் வாய்ப்பு இருப்­ப­தாக அந்த ஆய்வு தெரி­வித்து உள்­ளது.

அந்த ஆய்வு, மண­மான 409 மாதர்­களை உள்­ள­டக்கி நடத்­தப்­பட்­டது. அவர்­க­ளுக்குச் சரா­சரி வயது 2020ல் 32.

அவர்­கள் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்லது சிங்­கப்­பூ­ரரை திரு­ம­ணம் செய்­த­வர்­கள். அவர்­கள் சரா­ச­ரி­யாக ஆறாண்­டு­க­ளுக்கு முன் திரு­ ம­ணம் செய்­து­கொண்­ட­வர்­கள்.

லீ குவான் இயூ பொதுக்­கொள்கை பள்ளி அந்த ஆய்­வுக்கு நிதி­யு­தவி வழங்­கி­யது. ‘நெக்­சஸ் லிங்க்’ என்ற நிறு­வ­னம் தக­வல்­களைத் தொகுத்­தது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உள்ள இந்­தப் பள்­ளி­யின் இணைப் பேரா­சி­ரி­ய­ரான டாக்­டர் டான் போ லின் ஆய்­வுக்­குத் தலைமை தாங்­கி­னார்.

டாக்­டர் டானின் ஆய்வு உத­வி­யா­ள­ரான ஸ்கூட் சுவா லீ, இந்த ஆய்­வில் டாக்­டர் டானுக்கு உத­வி­னார். ஆய்வு முடி­வு­கள் ‘செக்­ஷுவல் மெடி­சன் ஜெர்­னல்’ என்ற சஞ்­சி­கை­யில் சென்ற மாதம் வெளி­யி­டப்­பட்­டது.

திரு­ம­ண­மான தம்­ப­தி­யர் தாம் பத்திய உறவில் ஈடுபடும் போக்கில் கொரோனா தொற்று கார­ணமாக ஏற்­பட்ட மாற்­றங்­கள் பற்றி ஆராய்­வதற்­காக முதன்­மு­த­லாக நடத்­தப்­பட்ட சிங்­கப்­பூர் ஆய்வு இது­தான்.

கால­வோட்­டத்­தில் தம்­ப­தி­ய­ரின் தாம்பத்திய உறவு போக்கு எப்படி பரி­ண­மித்துள்ளது என்­பது பற்றிய கண்­ணோட்­டத்தை இந்த ஆய்வு தரு­கிறது.

ஆய்வு 2018 முதல் நடத்­தப்­பட்­டது. 2020ல் பொரு­ளி­யல் முடக்­கம் நடப்­பில் இருந்­த­போது மண­மான மாதர்­கள் தாம்பத்திய உறவில் அதி­கம் ஈடு­பட்­ட­தாக ஆய்வு தெரி­விக்­கிறது. முடக்­கம் முடிந்த பிற­கும் இந்­தப் போக்கு தொடர்ந்­த­தாக டாக்­டர் டான் தெரி­விக்­கி­றார்.

குறை­வான உட­லு­ற­வுக்கும் கர்ப்­ப­மா­வ­தற்குமான கால அள­விற்­கும் இடை­யில் தெள்­ளத்­தெளி­வான தொடர்பு இருக்­கிறது என்­பதை டாக்­டர் டான் சுட்­டினார்.

சிங்­கப்­பூ­ரின் கரு­வள விகி­தம் வர­லாற்­றில் இல்­லாதபடி 2020ல் சிங்­கப்­பூர்­வா­சி­யான பெண் ஒரு­வ­ருக்கு 1.1 குழந்­தைப் பிறப்பு என்ற அள­வுக்­குக் குறைந்­தது.

ஆய்­வில் கலந்­து­கொண்ட பெண்­க­ளி­டம் முதன்­மு­த­லாக 2018ல் விவ­ரங்­கள் திரட்­டப்­பட்­டன.

16 வார காலத்­தில் அவர்­கள் தாம்பத்திய உறவில் ஈடு­பட்ட தேதிகள், மன­உ­ளைச்­ச­லின் சரா­சரி அளவு போன்ற விவ­ரங்­கள் திரட்­டப்­பட்­டன. அவர்­க­ளி­டம் 2020ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்­களில் அதே போன்ற கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன.

மண­மான தம்­ப­தி­யர் 2020ல் ஒரு வாரத்­தில் சரா­ச­ரி­யாக 0.78 முறை உட­லு­ற­வில் ஈடு­பட்­ட­னர். இது 2018ல் ஒரு வாரத்­தில் 0.68 முறை­யாக இருந்­தது. இந்த அதி­கரிப்பு புள்­ளி­வி­வர ரீதி­யில் மிக­வும் குறிப்­பி­டத்­தக்க ஒன்று என்று டாக்­டர் டான் விளக்­கி­னார். வாரம் குறைந்­த­பட்­சம் ஒரு முறை­யா­வது தாம்பத்திய உறவில் ஈடு­ப­டாத தம்­பதி­ய­ரின் விகி­தாசாரம் 2018ல் 54% ஆக இருந்­தது. இது 2020ல் 50% ஆகக் குறைந்­து­விட்­டது.

தாம்பத்திய உறவில் ஈடு­பட்ட நாட்­களும் ஒரு வாரத்­தில் பரந்த அள­வில் இருந்­தது. கிரு­மித்­தொற்­றுக்கு முன்­ன­தாக வெள்­ளிக்­கிழமை­கள் முதல் ஞாயிற்­றுக்­கி­ழமை வரை தாம்பத்திய உறவில் தம்­ப­தி­யர் அதி­கம் ஈடு­பட்ட போக்கு காணப்­பட்­டது. திங்­கள்கி­ழ­மை­களில் இது குறை­வாக இருந்­தது.

மன­உ­ளைச்­சல், களைப்பு, திரு­மண வாழ்க்கை மன­நி­றைவு போன்றவை தாம்பத்திய உறவில் தொடர்ந்து முக்­கி­ய­மான அம்­சங்­களாக இருக்­கின்­றன என்று டாக்­டர் டான் குறிப்­பிட்­டார்.

பொரு­ளி­யல் முடக்­கத்­தின்­போது வீட்­டில் இருந்து வேலை செய்­யும் நடை­முறை நடப்­புக்கு வந்­தது. இருந்­தா­லும் இது மண­மான தம்­ப­தி­யர் இடை­யில் அதிக உட­லு­ற­வுக்­கான முக்­கிய கார­ண­மாக தெரி­ய­வில்லை என்று டாக்­டர் டான் கூறு­கி­றார்.

அதிக நீக்­குப்­போக்­கு­டன்­கூ­டிய வேலை ஏற்­பா­டு­கள், பயண நேரம் குறைந்­தது ஆகி­யவை தம்­ப­தி­யர் தாம்பத்திய உறவில் அதி­கம் ஈடு­பட கார­ண­மாக இருந்­தி­ருக்­கக்­கூடும் என்று அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் கரு­வ­ளம் மிக­மிக குறை­வாக இருப்­பது பற்­றி­யும் டாக்­டர் டான் ஆராய்ந்து வரு­கி­றார். தனது ஆய்­வின் முடி­வு­கள் கரு­வள விகி­தத்­தில் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தாக்­கம் பற்றி இன்­ன­மும் இவர் ஆராய்ந்து வரு­கி­றார்.

இருந்­தா­லும் வருங்­கா­லத்­தில் குழந்­தைப் பிறப்பு கூடு­வ­தற்­கான சாத்­தி­யம் அவ்­வ­ள­வா­கத் தெரி­ய­வில்லை என்­றார் அவர்.

தொற்று கார­ண­மாக பொரு­ளி­யல் நெருக்­க­டி­கள் ஏற்­பட்டு இருப்­ப­தும் எதிர்­கா­லம் பற்றி நிச்­ச­ய­மில்­லாத நில­வ­ரங்­கள் நில­வு­வ­துமே இதற்­கான கார­ணங்­கள். இத்­த­கைய சூழ­லில் உல­கம் முழு­வ­துமே பல தம்­ப­தி­யர் குழந்­தை பெற்­றுக்­கொள்ள அவ்­வ­ள­வாக நாட்­டம் காட்­டு­வ­தில்லை என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!