‘அளப்பரிய பங்காற்றிவரும் அறியப்படாத நாயகர்கள்’

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பர­வல் தொடங்­கி­ய­தில் இருந்து, சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள், துப்­பு­ர­வா­ளர்­கள், தொற்­றுப் பரி­சோ­த­னை­யா­ளர்­கள், வீட்­டில் குண­ம­டை­தல் திட்ட ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் உள்­ளிட்ட பலர் பெரும்பங்­காற்றி வரு­கின்­ற­னர்.

அந்த 'அறி­யப்­ப­டாத நாய­கர்­களுக்கு', சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 போராட்­டம் குறித்து விளக்­கும் 'இன் திஸ் டுகெ­தர்: சிங்­கப்­பூர்'ஸ் கொவிட்-19 ஸ்டோரி' நூலுக்­குத் தாம் எழு­தி­யுள்ள அணிந்­து­ரை­யில் பிர­த­மர் லீ சியன் லூங் புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

அவர்­க­ளுள் திரு ஜெயக்­கு­மார் மாணிக்­க­மும் ஒரு­வர்.

இன்­னும் மூன்று மணி நேரத்­தில் இந்­தியா செல்­லும் விமா­னத்­தைப் பிடிக்க வேண்­டும் என்று திரு ஜெயக்­கு­மா­ரி­டம் சொல்­லப்­பட்­டது. அதன்­படி பெங்களூர் சென்று, ஒன்­பது நாள்­களை அங்கு கழித்­தார் இவர்.

மறு­நாளே மீண்­டும் இந்­தியா செல்­லு­மாறு இவர் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டார்.

அதற்­கு­முன், 'எஸ்டி லாஜிஸ்­டிக்ஸ்' நிறு­வன மேலா­ள­ராக இவர் 27 ஆண்­டு­களில் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்­ற­தில்லை. ஆனா­லும், தம்­மைக் கேட்­டுக்­கொண்­ட­தும் உட­ன­டி­யாக இந்­தியா செல்ல இவர் தயா­ரா­னார்.

"என் நாட்­டிற்­காக இதைச் செய்­வேன்," என்று அப்­போது தாம் சொன்­ன­தாக அந்­நூ­லுக்கு அளித்த நேர்­கா­ண­லின்­போது திரு ஜெயக்­கு­மார் நினை­வு­கூர்ந்­தார்.

கடந்த 2020 ஜன­வரி 20ஆம் தேதி பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் பைனி­யர் சாலை­யில் உள்ள தமது அலு­வ­ல­கத்­தில் இருந்த இவர், முகக்­க­வ­சங்­களை ஆய்­வு­செய்­வதற்­காக விடி­காலை 3 மணிக்கு பெங்­களூ­ரு நகரில் இருக்கும் ஒரு தொழிற்­சா­லை­யைச் சென்­ற­டைந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!