செய்திக்கொத்து

சுழல்வதைத் தற்காலிகமாக நிறுத்திய சிங்கப்பூர் ராட்டினம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிங்கப்பூர் ராட்டினச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்புப் பணியின்போது அந்தத் தொழில்நுட்பப் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டது என்று ராட்டினத்தை இயக்கும் ஸ்ட்ராக்கோ லெஷர் நிறுவனம் தெரிவித்தது. தேவையான ஆய்வு, பழுதுபார்ப்பு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கட்டட, கட்டுமான ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது. ராட்டினம் மீண்டும் எப்போது சுழலத் தொடங்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

கரப்பான்பூச்சி மொய்ப்பு: உணவு நிறுவனத்தின்மீது நடவடிக்கை

'பீன் கர்ட்' எனும் 'கெட்டித் தவ்வு' தயாரிக்கும் பகுதியில் கரப்பான்பூச்சிகள் மொய்த்ததால் தனது செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி 'ஹென்சின் ஃபுட்' உணவு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாண்டான் லூப் பகுதியில் அமைந்துள்ள அந்நிறுவன வளாகம் தூய்மையின்றி இருந்ததை நேற்று முன்தினம் சோதனையிட்ட போது கண்டுபிடித்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளையும் தனது வளாகத்தில் தூய்மையையும் மேம்படுத்தும்படி அந்நிறுவனம் அறிவுறுத்தப்பட்டது.

வேலையிடத்தில் காயமடைவதைத் தடுக்க புதிய காணொளி வெளியீடு

வேலையிடத்தில் விபத்து நிகழாமல் அறவே தடுப்பதை இலக்காகக் கொள்ள, நிறுவனங்கள், ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் (டபிள்யூஎஸ்எச்) புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. 'விஷன் ஸீரோ' என்ற அக்காணொளி, ரிசார்ட்ஸ் வேர்ல்டு மாநாட்டு மையத்தில் நேற்று நடந்த முதலாவது 'டபிள்யூஎஸ்எச்' தலைமைத்துவ மாநாட்டில் வெளியிடப்பட்டது. ஊழியர் நலம், பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் விபத்து நிகழ்வதை எப்படித் தடுக்கலாம் என்பதையும் அது குறிப்பிடுகிறது. மாநாட்டில், தங்களது ஊழியர்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான வேலையிடச் சூழலை வழங்க கடப்பாடு கொண்டுள்ளதாக முன்னணி வேதி நிறுவனங்கள் உறுதியளித்தன.

இரட்டிப்பான ஓமிக்ரான் பாதிப்பு

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் புதிதாக 1,185 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது, அதற்கு முதல்நாள் செவ்வாய்க்கிழமை பதிவான 589 பாதிப்புகளைப் போல கிட்டத்தட்ட இருமடங்காகும். புதிதாக ஓமிக்ரான் தொற்றியோரில் 965 பேர் உள்ளூர்வாசிகள்; 220 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒட்டுமொத்தமாக, வெளிநாடுகளில் இருந்து வந்த 410 பேர் உட்பட நேற்று முன்தினம் 1,615 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்து விட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!