கண் நோயைக் கண்டறியும் புதிய முறைக்கு தங்க விருது

கண் நோய்­க­ளைக் குறைந்த நேரத்­தில் கண்­ட­றி­யும் முறைக்கு நாட்­டின் உய­ரிய தொழில்­நுட்ப புத்­தாக்க விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

டிஎல்­எஸ் என்று அழைக்­கப்­படும் செயற்கை நுண்­ண­றிவு, ஆழ்ந்த கற்­றல் முறை, கண்­நோய் கண்­ட­றி­யும் நேரத்தை 30 நிமி­டங் களில் இருந்து 8.5 நிமி­டங் களுக்கு குறைத்­துள்­ளது.

நேற்று நடை­பெற்ற வரு­டாந்­திர டெக்­பி­ளே­சர் விருது நிகழ்ச்­சி­யில் மிக­வும் நம்­பிக்­கையளிக்கும் புத்­தாக்­கப் பிரி­வில் அந்­தப் புதிய முறைக்கு தங்க விருது வழங்­கப்­ பட்­டது. 2021ஆம் ஆண்­டின் விரு­து­ க­ளுக்கு மொத்­தம் 440 நிய­ம­னங்­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இது, 2020ஆம் ஆண்­டின் 403 நிய­மனங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் அதி­கம்.

சன்­டெக் சிட்டி மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் தொடர்பு, தக­வல் அமைச்­சர் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு விரு­து­களை வழங்கி கௌர­வித்­தார்.

உள்­ளூர் சுகா­தார தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான 'EyRIS' உரு­வாக்­கிய பகுப்­பாய்வு முறை கண்­ க­ளின் புகைப்­ப­டங்­களை ஆராய்ந்து கண்­நோய் பற்றி தக­வல்­க­ளைத் தெரி­விக்­கிறது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய அந்­நி­று­வ­னத்­தின் வர்த்­தக மேம்­பாட்­டுப் பிரி­வின் மூத்த உதவி தலை­வர் ஸ்டீ­வன் ஆங், 47, வழக்­க­மாக இத்­த­கைய நடை ­மு­றைக்கு குறைந்­தது ஒரு நாள் தேவைப்­படும் என்­றார்.

"எங்­க­ளு­டைய தொழில்­நுட்­பத்­தில் படங்­களை இணை­யம் வழி­யா­கவே அனுப்­பி­னால் நோயா­ளி­க­ளுக்கு 15 முதல் 20 விநா­டி­களில் முடி­வு­களை அனுப்பி வைப்­போம்," என்­றும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!