கழிவுப்பொருள் நிர்வாக ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு, போனஸ்

கழி­வுப்­பொ­ருள் நிர்­வாக ஊழி­யர்­

க­ளா­கப் பணி­பு­ரி­யும் மொத்­தம் 3,000 பேருக்­குப் புதிய படிப்படியாக உயரும் சம்பள முறையின்­கீழ் வரு­டாந்­திர சம்­பள உயர்வு கிடைக்­கும். அத்­து­டன் அவர்­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் போனஸ் வழங்க வேண்­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், அவர்­க­ளுக்கு வாழ்க்­கைத் தொழில், திறன் மேம்­பாட்­டுப் பாதை வகுத்­துத் தரப்­பட வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்­தி­லி­ருந்து நடப்­புக்கு வரும் என்று கழி­வுப்­பொ­ருள் நிர்­வா­கத்­துக்­கான முத்­த­ரப்­புக் குழு­மம் நேற்று கூறி­யது.

இந்த முத்தரப்புக் குழுமத்தில் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சு­டன் முத­லா­ளி­களும் மற்ற பங்­கு­தா­ரர்­களும் இடம்­பெ­று­கின்­ற­னர்.

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து 2029ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை சம்­பள உயர்­வு­கள் வழங்­கப்­படும். ஒவ்­வோர் ஆண்­டும் கழி­வுப்­பொ­ருள் நிர்­வாக ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் ஆறு விழுக்­காட்­டி­லி­ருந்து எட்டு விழுக்­காடு வரை உய­ரும். அவர்­க­ளது பணி­யைப் பொறுத்து சம்­பள உயர்வு நிர்­ண­யிக்­கப்­படும்.

இத்­து­றை­யைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்கு குறைந்­த­பட்ச மிகை­வேலை சம்­ப­ளம் தரப்­படும்.

2024ஆம் ஆண்டு முதல் அவர்­

க­ளுக்­குக் குறைந்­தது ஒரு மாத சம்­ப­ளத்­துக்கு ஈடான வரு­டாந்­திர போனஸ் வழங்­கப்­படும்.

இந்த போன­சைப் பெற அவர்­கள் அந்த நிறு­வ­னத்­தில் குறைந்­தது ஓர் ஆண்­டுக்கு வேலை செய்­தி­ருக்க வேண்­டும். ஊழி­யர்­க­ளின் செயல்­பாட்­டைப் பொறுத்து வழங்­கப்­படும் போன­சாக இது இருக்­காது. இந்­தப் பரிந்­து­ரை­களை மனி­த­வள அமைச்சு நேற்று ஏற்­றுக்­கொண்­டது.

"எதிர்­வ­ரும் ஆண்­டு­களில் கழி­வுப்­பொ­ருள் நிர்­வா­கத் துறை ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் ஏறத்­தாழ 50 விழுக்­காடு ஏற்­றம் காணும். தொழிற்­சங்­க­வா­தி­களும் முத­லா­ளி­களும் சேர்ந்து நல்ல முடிவு எடுத்­துள்­ள­னர்.

"அதே நேரத்­தில் கழி­வுப்­

பொ­ருள் நிர்­வா­கத் துறை அர்த்­த­முள்ள, நீடித்த நிலைத்­தன்மை கொண்ட துறை­யாக மாற வேண்­டும் என்­பதே எங்­கள் விருப்­பம்," என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­தார்.

புதிய படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் தங்­கள் சம்­ப­ளம் உயர்த்­தப்­ப­டு­வதை கழி­வுப்­பொ­ருள் நிர்­வாக ஊழி­யர்­கள் வர­வேற்­றுள்­ள­னர்.

ஆனால் அத்­து­றை­யைச் சேர்ந்த முத­லா­ளி­கள் இத்­திட்­டத்­தால் தங்­கள் செல­வு­கள் அதி­க­ரிக்­கும் என்று தெரி­வித்­துள்­ள­னர்.

கூடு­தல் செலவு ஏற்­பட்­டா­லும் அதன் விளை­வாக ஊழி­யர்­க­ளின் தரம் அதி­க­ரிக்­கும் என முத­லா­ளி­கள் கூறி­னர்.

திறன்­மிக்க ஊழி­யர்­க­ளால் சேவைத் தரம் உய­ரும் என்­றும் தொழில்­நுட்ப அறி­மு­கத்­தால் உற்­பத்­தித்­தி­றன் அதி­க­ரிக்­கும் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!