இரு நாடுகளுக்கும் பலன் தரும் உடன்பாடுகள்

பிந்தானில் இருந்து

இர்ஷாத் முஹம்மது

துணைச் செய்தி ஆசிரியர்

பல ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் - இந்­தோ­னீ­சி­யா­விற்கு இடை­யி­லான உற­வு­க­ளைப் பற்­றிய கலந்­து­ரை­யா­டல்­களில் முக்­கிய அங்­கம் வகித்து­வந்த நீண்­ட­கா­லப் பிரச்­சி­னை­களுக்கு உடன்­பாடு கண்­ட­தில் மகிழ்ச்சி அடை­வ­தா­கக் கூறி­னார் பிர­த­மர் லீ சியன் லூங்.

நேற்று பிந்­தான் தீவில் நடந்த இரு­நாட்­டுத் தலை­வர்­க­ளின் ஓய்­வுத்தளச் சந்­திப்­பில் கையெ­ழுத்­தான மூன்று உடன்­பா­டு­களும் இரு தரப்பிற்கும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த தனித்­தனி அம்­சங்­கள் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

தப்­பி­யோ­டி­ய­வர்­களை ஒப்­ப­டைப்­ப­தற்­கான உடன்­பா­டும் தற்­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பா­டும் கடந்த 2007ஆம் ஆண்­டி­லேயே மேற்கொள்ளப்பட்டன என்­றா­லும் அதன்­பின்­னர் அவற்றை ஏற்றுச் செயல்­ப­டுத்த முடி­ய­வில்லை என்று ஓய்­வுத்­த­ளச் சந்­திப்­பின் முடி­வில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசியபோது பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

"ஆனால் இன்று, தப்­பி­யோ­டி­ய­வர்­களை ஒப்­ப­டைக்­கும் உடன்­பாட்­டில் சிறிய மாற்­றத்­து­டன் அந்த உடன்­பா­டு­களைச் செயல்படுத்த உறுதி­யேற்றுள்ளோம்," என்­றார் அவர்.

இனி அவற்றை ஏற்­றுச் செயல்­படுத்த ஆவன செய்­வோம் என்ற திரு லீ, அவை பிரச்­சி­னை­க­ளுக்கு நீண்­ட­கா­லத் தீர்­வைத் தரும் என்று கூறி­னார்.

சரி­வரத் தீர்க்­கப்­ப­டா­விட்­டால் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­விற்­கும் இடை­யி­லான பிரச்­சி­னை­களுக்கு மிகுந்த சிரமங்­களை அவை உண்­டாக்­கும் என்­றார் அவர்.

"ஆனால், அவற்றை ஒழுங்­கா­கத் தீர்த்து, ஒரு தெளி­வான புரிந்­து­ணர்வு கொண்­டால் நாம் மேலும் பல வழி­களில் ஒத்­து­ழைப்பை முன்­னெ­டுத்­துச் செல்ல முடி­யும்," என்று பிரதமர் சொன்­னார்.

நேற்று கையெ­ழுத்­தான தப்­பி­யோ­டி­ய­வர்­களை ஒப்­ப­டைக்­கும் உடன்­பாடு, சில பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு இரு­நாட்டு சட்­டங்­க­ளின்­படி ஒப்­ப­டைக்­கக் கூடிய சட்­ட­வி­ரோ­தச் செயல்­க­ளின் பரந்த பட்­டி­ய­லைக் கொண்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே சிங்­கப்­பூர் இது­போன்ற உடன்­பாட்டை பிரிட்­டன் போன்ற இதர நாடு­க­ளு­டன் கொண்­டுள்­ளது. மலே­சியா, புரு­ணை­யு­டன் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அடை­யா­ளம் கண்டு தப்­பி­யோ­டி­ய­வர்­கள்மீது கைதாணை பிறப்­பிக்­கும் முறை­யும் செயல்­பாட்­டில் உள்­ளது.

குற்­றச் செயல்­களை எதிர்­கொள்­வ­தில் ஒத்­து­ழைப்பை மேம்­படுத்­த­வும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்­குத் தெளி­வான சமிக்ஞையை வழங்­கும் வித­மா­க­வும் இந்த உடன்­பாடு வழி­செய்­யும் என்று திரு லீ சுட்­டி­னார்.

இரு தலை­வர்­க­ளின் முன்­னி­லை­யில் 2007ஆம் ஆண்­டின் தற்­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பா­டும் இந்­தோ­னீ­சிய ராணு­வப் பயிற்­சித் தளத்­தைப் பயன்­ப­டுத்த சிங்­கப்­பூர் - இந்­தோ­னீ­சிய ஆயு­தப் படை­களுக்கு இடை­யி­லான ஏற்­பாட்டை நடை­மு­றைப்­ப­டுத்­தும் கூட்­ட­றிக்­கை­யும் கையெ­ழுத்­தா­கின.

"தற்­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாடு இரு ஆயு­தப் படை­க­ளுக்­கும் இடை­யில் ஒத்­து­ழைப்பை வலுப்­படுத்­து­வ­தோடு தற்­காப்பு உறவை முன்­னேற்­றும்," என்று திரு லீ கருத்­து­ரைத்­தார்.

இரு ஆயு­தப் படை­க­ளுக்­கும் இடை­யில் நெருக்­க­மான கலந்­து­ற­வா­டலை ஊக்­கு­விக்­கும் இந்த உடன்­பாடு 25 ஆண்­டு­க­ளுக்­குச் செயல்­பாட்­டில் இருக்­கும்.

இந்த உடன்­பாட்­டின்­படி, இந்­தோ­னீ­சி­யா­வின் ராணு­வப் பயிற்­சித் தளங்­களில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளும். அதே வேளை­யில், இந்­தோ­னீ­சிய எல்­லை­கள், அதன் தீவு­க­ளின் எல்­லை­கள், நீரி­ணை­கள், ஆகா­ய­வெளி போன்­ற­வற்றை மதித்துச் செயல்­படும்.

நீடித்த நிலைத்­தன்மை, பசு­மைப் பொரு­ளி­யல், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல், மனித மூல­தன மேம்­பாடு போன்ற புதிய அம்­சங்­களில் சிங்­கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் ஒத்­து­ழைக்­கும் வழி­கள் ஆரா­யப்­படும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

ஓய்­வுத்­த­ளச் சந்­திப்­புக்கு முன்­னர் கையெ­ழுத்­தான ஆறு புரிந்­து­ணர்­வுக் குறிப்­பு­களை இரு தலை­வர்­களும் ஏற்­றுக்­கொண்­ட­னர்.

சிங்கப்பூர் $12.4 பி. முதலீடு

இத­னி­டையே, இந்­தோ­னீ­சி­யா­வில் பசுமை முத­லீட்டை ஆத­ரிக்­க­வும் தள­வாட நடு­வம் ஒன்றை அமைக்­க­வும் சிங்­கப்­பூர் 9.2 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$12.4 பி.) முத­லீடு செய்­யும் என்று அதி­பர் ஜோக்­கோவி தெரி­வித்­துள்­ளார்.

பாத்­தாம், சும்பா தீவு, கிழக்கு நூசா தெங்­காரா மாநி­லத்­தின் மேற்கு மங்­கா­ராய் ஆகிய பகு­தி­களில் புதுப்­பிக்­கத்­தக்க ஆற்­றல் திட்­டங்­க­ளுக்­கும் ஜகார்த்­தா­வின் தஞ்­சுங் பிரி­யோக் துறை­மு­கத்­தில் தள­வாட நடு­வத்தை அமைப்­ப­தற்­கும் சிங்­கப்­பூர் நிதி­யா­த­ரவு அளிக்­கும் என்று அவர் கூறினார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் ஆகப் பெரிய வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர் சிங்­கப்­பூர்­தான் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். 2021 ஜன­வரி-செப்­டம்­பர் கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூர் 7.3 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை அங்கு முத­லீடு செய்­தது.

'சிங்கப்பூர் கௌரவிப்பு'

இவ்­வாண்டு இந்­தோ­னீ­சி­யா­வில் நடக்­கும் 'ஜி20' மாநாட்­டில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தன் மூலம் சிங்­கப்­பூர் கௌர­விக்­கப்­பட்­டுள்­ளது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார்.

அம்­மா­நாட்­டில் நடக்­கும் கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கேற்க தன்­னால் ஆன சிறந்த முயற்­சி­க­ளைச் சிங்­கப்­பூர் எடுக்­கும் என்று அவர் கூறி­யுள்­ளார்.

பிந்­தா­னில் நேற்று நடந்த சிங்­கப்­பூர் - இந்­தோ­னீ­சி­யத் தலை­வர்­கள் ஓய்­வுத்­த­ளச் சந்­திப்­பின்­போது ஜி20 மாநாட்­டில் கலந்­து­கொள்­ளும்­படி அதி­பர் ஜோக்­கோவி சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு விடுத்­தார்.

வரும் அக்­டோ­பர் அல்­லது நவம்­ப­ரில் பாலித் ­தீ­வில் ஜி20 மாநாட்டை இந்­தோ­னீ­சியா தலை­மை­யேற்று நடத்­தும்.

'ஒன்­றாக மீள்­வோம், வலு­வாக மீள்­வோம்' என்­பது அம்­மா­நாட்­டின் கருப்­பொ­ருள். நாடு­களை ஒன்­று­தி­ரட்டி, இணைந்து பணி­யாற்­று­வதன்மூலம் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லில் இருந்து வலு­வா­க­வும் நீடித்து நிலைக்­கத்­தக்க விதத்­திலும் மீண்­டெழ முடி­யும் என்று இந்­தோ­னீ­சியா நம்­பு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!