மூப்படைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் வாழ்க்கையின் இறுதிக்காலப் பராமரிப்பும் விரைவில் உருமாற வேண்டும்: நிபுணர்கள்

அண்­மை­யில் தொடங்­கப்­பட்ட ஹோஸ்­பிஸ் பகல்­நே­ரப் பரா­ம­ரிப்பு சேவை நிலை­யம், மர­ணத்தை எப்­படி எதிர்கொள்வது எனும் தலைப்­பில் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­ய­போது, பல­வி­த­மான கருத்­து­கள் குவி­யத் தொடங்­கின.

மர­ணம் தேடி வரும்­வரை காத்­தி­ருப்­பதை விட்­டு­விட்டு ஒரு­வ­ரது ஆத­ர­வு­டன் அது வரும் வரை வாழ்வதையே பல­ரும் விரும்­பு­கிறார்­கள் எனத் தெரிய வந்­தது.

ஊட்­ரம் சமூக மருத்­து­வ­ம­னை­யில், 'எச்­சிஏ' (HCA) வலி­கு­றைப்பு பரா­ம­ரிப்பு நிலை­யம் நடத்­தும் ஓய­சிஸ்@ஊட்­ரம் பிரி­வில் அந்­தி­ம­கால பகல்­நே­ரப் பரா­ம­ரிப்­பில் உள்ள நோயா­ளி­கள் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள பொழு­து­போக்கு அறை­யில் மாஜோங் போன்ற விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வது, குடும்ப உறுப்­பி­னர் அல்­லது நண்­ப­ரு­டன் பானம் அருந்­து­வது போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார்­கள்.

முன்பு இருந்­த­து­போல், ஒரு குறிப்­பிட்ட அட்­ட­வ­ணை­யைப் பின்­பற்றி தங்­கள் அந்திம காலத்தைக் கழிக்­கும் முறை­யி­லி­ருந்து மாறு­பட்டு, தங்­கள் அந்திமகாலத்தை எப்­படி கழிப்­பது என்று தேர்ந்­தெடுக்­கும் சுதந்­தி­ரம் அவர்­களுக்கு வழங்­கப்­ப­டு­கிறது.

இது குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கருத்­து­ரைத்த அந்திமகாலப் பராமரிப்பு மருத்துவர்களும் ஊழியர் களும் அங்கு பராமரிப்பு மேம்பட்டு வருவதாகக் கூறினர்.

மேலும், மர­ணம், மர­ணத்தை நெருங்­கு­தல் போன்ற மன­அ­ழுத்­தத்­தைக் கொடுக்­கக்­கூ­டி­ய­வற்­றைப் பற்றி பேசு­வ­தைத் தவிர்த்து, அந்திமகாலப் பரா­ம­ரிப்பு பற்றி சமூக அள­வில் விழிப்­பு­ணர்வை அதி­கரிப்பது, அதற்கு தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்துவது போன்ற அம்­சங்­க­ளைப் பிர­ப­லப்­ப­டுத்­த­லாம் என்­றும் அவர்­கள் கூறி­னர்.

கடந்த டிசம்­ப­ரில் நடந்த ஒரு கருத்­த­ரங்­கில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், அந்­தி­ம­கால பரா­ம­ரிப்­புத் துறைக்கு அர­சாங்­கம் ஆத­ர­வ­ளிக்­கும் என்­றார்.

அந்­தி­ம­காலப் பரா­ம­ரிப்­பா­ளர்­களுக்கு ஆத­ரவு, வலி­கு­றைப்புப் பரா­ம­ரிப்பு மற்­றும் இல்ல அந்­தி­ம­காலப் பரா­ம­ரிப்­பின் திறன், இத்­து­றை­யில் உள்ள நிபு­ணர்­க­ளின் ஆற்­றலை அதி­கப்­ப­டுத்­து­தல் போன்­றவை அர­சாங்­கத்­தின் ஆத­ர­வில் அடங்­கும்.

16 படுக்­கை­க­ளு­டன் முத­லா­வது அந்­தி­ம­கால இல்­லம் 1985ல் செயின்ட் ஜோச­ஃப்ஸ் கன்­னி­மார்­களால் தொடங்­கப்­பட்­டது.

அன்­றி­லி­ருந்து இது, சமூக திட்­டங்­க­ளின் உத­வி­யு­டன் படிப்­ப­டி­யாக வளர்ச்­சி­ய­டைந்து அந்­தி­ம­காலப் பரா­ம­ரிப்பு வழங்­கும் நிபு­ணர்­கள் கொண்ட கட்­ட­மைப்­பாக உரு­வெ­டுத்­தது என்­றார் சிங்­கப்­பூர் அந்­தி­ம­கால மன்­றத்­தின் தலை­வர் டாக்­டர் பெட்­ரி­ஷியா நியோ.

'டோவர் பார்க் ஹோஸ்­பிஸ்', 'அசிசி ஹோம் அண்ட் ஹாஸ்­பைஸ்' போன்ற நோக்­கத்­திற்­காக கட்­ட­மைக்­கப்­பட்ட அந்­தி­ம­கால இல்­லங்­கள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் மருத்­து­வ­மனை வலி­ கு­றைப்பு சிகிச்சை சேவை­கள் தொடர்ந்து வந்­தன. வலி­கு­றைப்பு மருத்­து­வம் மருத்­துவ மாண­வர்­களுக்­கான அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சிறப்­புப் பாட­மாக மாறி­யது.

வலி­கு­றைப்பு சிகிச்­சை­யா­னது புற்­று­நோ­யா­ளி­க­ளிடம் கவ­னம் செலுத்­தும் அதே வேளை­யில், இப்­போது இறுதி நிலை நுரை­யீ­ரல் நோய், இதய செய­லி­ழப்பு, சிறு­நீ­ரக செய­லி­ழப்பு, கடு­மை­யான மூத்­தோர் மற­தி­நோய் உள்­ள­வர்­க­ளுக்­கும் உத­வு­கிறது.

ஆனா­லும் இதில் சவால்­கள் இருக்­கின்­றன. இறப்­பைப் பற்றி விவா­திக்க தயக்­கம் காட்­டு­வது அதில் ஒன்று.

மற்­றொன்று, அவர்­கள் விரும்­பும் இடத்­தில் அவர்­கள் மர­ணத்­தைச் சந்­திக்க எப்­படி உத­வ­லாம் என்­பது.

2014ஆம் ஆண்டு லியன் அறக்­கட்­ட­ளை­யால் நடத்­தப்­பட்ட ஓர் ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 77 விழுக்­காட்­டி­னர் தங்­கள் வீட்­டி­லேயே இறக்க விருப்­பம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

ஆனால் 2020ல் 25 விழுக்­காட்டு இறப்­பு­கள் மட்­டுமே வீட்­டில் நிகழ்ந்­தன.

குறைந்து வரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­கள், சிறிய குடும்­பங்­கள், வய­தான மக்­கள்­தொகை, அதி­க­ரித்து வரும் நாள்­பட்ட நோய்ச் சுமை ஆகி­ய­வற்­று­டன் இணைந்து, எதிர்­கால வலி­கு­றைப்­புப் பரா­ம­ரிப்­புத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய மறு உத்­தி­கள், திட்­ட­மி­டல் ஆகி­யவை அவ­ச­ர­மா­கத் தேவைப்­ப­டு­கிறது என்­ப­தைத் தெளி­வாகப் புரிய வைக்­கிறது என்­றார் டாக்­டர் நியோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!