முழுமைத் தற்காப்பைக் கடைப்பிடித்து பெருமை சேர்த்த சிங்கப்பூரர்கள்

முழு­மைத் தற்­காப்பு நட­வ­டிக்கை மூலம் கொள்­ளை­நோய்க்கு எதி­ராக நாட்­டைத் தற்­காப்­ப­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளது பங்­கைச் சரி­வர ஆற்றி இருப்­ப­தா­க­வும் அதன் கார­ண­மாக உலக அள­வில் ஆகக் குறை­வான கொவிட்-19 மர­ணங்­கள் நிக­ழும் நாடு­களில் ஒன்­றாக சிங்­கப்­பூர் திகழ்­வ­தா­க­வும் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹெங் தெரி­வித்து உள்­ளார்.

முழு­மைத் தற்­காப்பு தினத்­தை­யொட்டி அவர் நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில், "நாட்­டின் பொரு­ளி­யல் பெரிய தொய்­வின்றி அப்­ப­டியே தொட­ரு­கிறது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு கட்­ட­மைப்பு தளர்ந்­து­வி­ட­வில்லை. மக்­கள் ஒன்­று­பட்டு உள்­ள­னர்," என்று குறிப்­பிட்டு உள்­ளார்.

சிங்­கப்­பூர் இன்று (பிப்­ர­வரி 15) தனது முழுமைத் தற்­காப்பு தினத்­தைக் கடைப்­பி­டிக்­கிறது. 1984ஆம் ஆண்­டு இது அறி­மு­கம் கண்­டது.

சுமார் 40 ஆண்டு காலம் இங்கு ஆதிக்­கம் செலுத்­திய பிரிட்­டிஷ் படை 1942ல் இரண்­டாம் உல­கப் போரின்­போது ஜப்­பா­னி­யப் படை­யி­டம் முறைப்­படி சர­ண­டைந்த தினம் இது.

முழு­மைத் தற்­காப்­பின் பின்­ன­ணியை விளக்கி தமது பதி­வில் குறிப்­பிட்ட டாக்­டர் இங், "சிங்­கப்­பூர் வர­லாற்­றின் இருண்ட அத்­தி­யா­யம்" 80 ஆண்­டு­க­ளைத் தொடு­வ­தா­கக் கூறி­னார்.

மேலும், இந்த ஆண்டு சிங்­கப்­பூர் தேசிய சேவை­யின் 55 ஆண்டு நிறை­வும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது.

ராணு­வத் தற்­காப்பு நாட்­டின் தூண் என்று குறிப்­பிட்ட அமைச்­சர், முழு­மைத் தற்­காப்பு என்­பது ஒவ்­வொரு சிங்­கப்­பூர­ரின் முயற்சி­ யை­யும் உள்­ள­டக்­கி­யது என்­றார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் அச்­சு­றுத்­த­லைச் சமா­ளிப்­ப­தில் முழு­மைத் தற்­காப்பு கடைப்­பி­டிக்­கப்­பட்­டது நாட்­டின் நிலைத்­தன்­மைக்­குப் பெரி­தும் உத­வி­ய­தா­க­வும் டாக்­டர் இங் தமது பதி­வில் தெரி­வித்து உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!