சிலோசோ கோட்டை இனி தேசிய நினைவுச்சின்னம்

ஜப்­பா­னி­யர்­க­ளுக்கு எதி­ரான போரின்­போது (8-15 பிப்­ர­வரி 1942) சிங்­கப்­பூ­ரின் பாது­காப்­பில் முக்­கிய பங்கு வகித்த சிலோசோ கோட்டை, இன்று அர­சி­த­ழில் தேசிய நினை­வுச்­சின்­ன­மாக அதி­கா­ர­பூர்­வ­மா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சிலோசோ கோட்டை சிங்­கப்­பூர் நிலப்­ப­ரப்­பில் இல்­லாத முதல் நினை­வுச்­சின்­ன­மா­கும்.

ஓர் இடத்­தைச் சேர்ந்த 11 கட்­ட­மைப்­பு­கள் அர­சி­த­ழில் தேசிய நினை­வுச்­சின்­ன­மாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வது இதுவே முதல் முறை­யா­கும்.

ஜப்­பா­னி­யர்­க­ளி­டம் சிங்­கப்­பூர் சர­ண­டைந்த 80ம் ஆண்டு நிறைவை நினை­வு­கூ­ரும் வகை­யில், பிப்­ர­வரி 15ஆம் தேதி இந்த 11 கட்­ட­மைப்பு­கள் தேசிய நினை­வுச்­சின்­ன­மா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்று தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் தெரி­வித்­தது.

"நமது தேசத்­தைப் பாது­காப்­ப­தில் குடி­மக்­க­ளாக நாம் எடுக்­கும் ஒவ்­வொரு முயற்­சிக்­கும் ஃபோர்ட் சிலோசோ அடை­யா­ள­மா­கத் திகழ்­கிறது," என்­றார் தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் தளங்­கள், நினை­வுச்­சின்­னங்­க­ளின் பாது­காப்­புப் பிரி­வின் இயக்­கு­நர் திரு­வாட்டி ஜீன் வீ. இந்த 11 சின்­னங்­களும் சிலோசோ கோட்­டை­யின் பாது­காப்­புச் செயல்­பாட்­டில் வகித்த முக்­கிய பங்­கின் அடிப்­ப­டை­யில் தேர்ந்­தெடுக்­கப்­பட்­ட­தா­கத் திரு­வாட்டி ஜீன் வீ தெரி­வித்­தார்.

நான்கு துப்பாக்கித் தளங்கள், துப்பாக்கிகளுக்குக் கீழே நிலத்தடி தோட்டாக்களாக செயல்பட்ட மூன்று சுரங்கப்பாதை வளாகங்கள் உள்ளிட்டவை இந்த 11 சின்னங்களில் அடங்கும்.

'புலாவ் பிலாக்காங் மத்தி'யின் (இன்­றைய செந்­தோசா) கட­லோ­ரப் பகு­தி­யில் உள்ள கெப்­பல் துறை­மு­கத்­தைப் பாது­காக்க 1878ஆம் ஆண்டு இவ்­வி­டம் கட்­டப்­பட்­டது. சிலோசோ கோட்டை செந்­தோ­சா­வின் மேற்கு முனை­யில் அமைந்­துள்­ளது.

சிலோசோ கோட்­டை­யின் இரண்­டாம் உல­கப் போரைப் பிர­தி­ப­லிக்­கும் விலை­யு­யர்ந்த துப்­பாக்­கி­கள், வலுவான ராணு­வக் கட்­ட­மைப்­பு­கள், சுரங்­கப்­பா­தை­கள் ஆகிய வரலாற்றுச் சின்­னங்­க­ளைக் கொண்­டுள்­ளது. மேலும், ஆஸ்­தி­ரே­லிய, பிரிட்­டிஷ் வீரர்­க­ளுக்­கும், பிற்­கா­லத்­தில் சர­ண­டைந்த ஜப்­பா­னிய வீரர்­க­ளுக்­கும் போர்க் கைதி­களின் முகா­மாக சிலோசோ கோட்டை செயல்­பட்­டது. இவை போரின்­போது சிங்­கப்­பூர் தன்­னைக் காத்­துக்­கொண்ட கதையைச் சித்­திரிக்­கின்­றன.

சிலோசோ வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க கட­லோ­ரத் துப்­பாக்­கி­களை சிங்­கப்­பூ­ரர்­கள் மீண்­டும் பார்­வை­யிட அழைப்­ப­தாக செந்­தோசா வளர்ச்­சிக் கழ­கத்­தின் உதவி தலைமை நிர்­வாகி திரு மைக்­கேல் மாஹ் கூறி­னார்.

சிலோசோ கோட்­டைக்­குச் செல்ல கட்­ட­ணம் இல்லை.

கவின்மொழி கதிரொளி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!