ஜிஎஸ்டி உயர்வை சமாளிக்க $6.6 பில்லியன் உதவி ரொக்க வழங்கீடு, ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, சிடிசி பற்றுச்சீட்டு, மெடிசேவ் பணம் நிரப்புதல்

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 2023, 2024 இரண்டு கட்டங் களாக 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக அதிகரிக்கப்பட உள்ளது.

இந்த அதி­க­ரிப்­பின் பாதிப்­பைக் குறைக்க அர­சாங்­கம் உத­வித் திட்­டங்­களை அறி­வித்­துள்­ளது. $6.6 பில்­லி­யன் உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டம் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு கூடு­தல் ஜிஎஸ்டி வரிச் செலவை ஈடு­செய்­யும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்­றுத் தெரி­வித்­தார்.

கடந்த 2020 வரவுசெலவுத் திட்டத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் $6 பில்லியன் மதிப்பிலான உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார். நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று இத்திட்டத்துக்கு $640 மில்லியன் ஒதுக்கியுள்ளார்.

அத்­து­டன், மேம்­ப­டுத்­தப்­பட்ட நிரந்­தர ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­ட­மும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டத்­தில் இருந்து வழங்­கு­தொகை 2026ல் முடி­வ­டைந்த பின்­ன­ரும், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்க ளுக்கு ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­டம் ஆத­ர­வ­ளிக்­கும்.

இத்­திட்­டத்­தின்­கீழ் ஜிஎஸ்டி ரொக்­கப் பற்­றுச்­சீட்டு வழங்­கு­தொகை $250க்கும் $500க்கும் இடைப்­பட்ட தொகை­யாக உய­ரும். ஒரு­வ­ரது வீட்டு மதிப்­பைப் பொறுத்து தொகை நிர்­ண­யிக்­கப்­படும். தற்­போது இந்த வழங்­கு­தொகை $150க்கும் $300க்கும் இடைப்­பட்­டி­ருக்­கிறது. ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெறு­வ­தற்­கான வரு­மான வரம்­பும் $28,000லிருந்து $34,000ஆக உயர்த்­தப்­படும். இதன்­மூ­லம், கூடு­த­லான சிங்­கப்­பூ­ரர்­கள் இத்­திட்­டத்­திற்­குத் தகு­தி­பெற முடி­யும். 21 வயது அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­துள்ள ஏறக்­கு­றைய 1.5 மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­கள் இந்த வழங்­கு­தொ­கை­யைப் பெறு­வர்.

மேலும், குழந்­தை­க­ளின் கல்­விக்­காக தொகை நிரப்­பு­தல், குடி­யிருப்பு வட்­டா­ரக் கடை­களில் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான பற்­றுச்­சீட்­டு­கள் ஆகி­ய­வற்­றின் மூலம் குடும்பங்களின் அன்­றாட அத்­தி­யா­வ­சி­யத் தேவை­க­ளுக்கு உதவி கிட்டும்.

அனைத்து வயது வந்த சிங்கப்பூரர்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் S$1,600 வரை ரொக்கத்தை எதிர்பார்க்கலாம்.

குறைந்த வருமானம் பெறும் முதியவர்களும் S$900 வரையிலான கூடுதல் வழங்கீடுகளுக்குத் தகுதி பெறுவர்.

21 வயதும் அதற்கு மேல் உள்ள அனைத்து சிங்கப்பூரர்களும் S$1,600 வரை ரொக்கப் பணம் பெறுவார்கள், இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்படும்.

ரொக்கம், பற்றுச்சீட்டுகள் தவிர, மேம்படுத்தப்பட்ட உத்தர வாதத் தொகுப்புத் திட்டம் குடி மக்கள் ஆலோசனைக் குழுக்களுக் கும் சுய உதவி குழுக்களுக்கும் அதிக நிதியுதவியை வழங்கும்.

"உத்தரவாதத் தொகுப்புத் திட் டம் பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதல் ஜிஎஸ்டி செலவினங்களை குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்ட உதவும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அதிக உதவி கிடைக்கும். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு கூடுதல் ஜிஎஸ்டி செலவினங்களை ஈடுகட் டும் உதவியைப் பெறுவார்கள்," என்று அமைச்சர் வோங் கூறினார்.

எல்லா சிங்­கப்­பூர் குடும்­பங்­களும் $200 சிடிசி (சமூக மேம்­பாட்டு மன்ற) பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெறும்.

இதனை, திட்­டத்­தில் பங்­கு­பெற்­றுள்ள கடை­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் இவ்­வாண்டு இந்­தப் பற்­றுச்­சீட்டை அந்­தக் குடும்­பம் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

இவற்றை அறி­வித்த திரு வோங், ஒட்­டு­மொத்த பொரு­ளி­யல் நில­வ­ரம் சாத­க­மாக இருப்­பி­னும் சில துறை­க­ளின் பொரு­ளி­யல் இன்­னும் சிர­மத்தை எதிர்­நோக்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"குடும்­பங்­கள், வர்த்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றில் எழுந்­துள்ள கவலை­களை ஏற்கி­றேன். தற்­போ­தைய விலை­யேற்ற காலத்­தில் அவர்­க­ளுக்கு இந்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின்மூலம் கணி­ச­மான அள­வுக்­குக் கூடு­தல் ஆதரவு வழங்கப்படும்," என்­றார் அவர்.

இந்த உத­வித் தொகுப்­பின் மூலம், தகு­தி­யுள்ள வீவக வீடு­களில் வசிக்­கும் குடும்­பங்­க­ளுக்­கான ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டும் இவ்­வாண்டு ஏப்­ரல், ஜூலை மற்­றும் அக்­டோ­பர் மாதங்­களில் வழங்­கப்­பட இருக்­கும் பய­னீட்­டுக் கட்­ட­ணக் கழி­வும் இரட்­டிப்­பா­கும்.

உதா­ர­ணத்­திற்கு, மூவறை வீட்­டில் வசிக்­கும் குடும்­பம் இந்த மூன்று மாதங்­களில் கூடு­த­லாக $85 கட்­ட­ணக் கழி­வைப் பெறும்.

பொருள், சேவை வரி அதி கரிப்பை ஈடுசெய்யும் உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் வழங்­கப்­படும் $85 கட்­ட­ணக் கழி­வுக்­குக் கூடு­த­லாக அக்­கு­டும்­பம் இத­னைப் பெறும். கூடு­தல் ஆத­ரவு மூலம், ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு, பய­னீட்­டுக் கட்­ட­ணக் கழிவு ஆகி­யவை மூலம் இதற்கு முன்­னர் $425ஆக இருந்த உத­வித் தொகை 2022 நிதி ஆண்­டில் $680க்கு உய­ரும்.

கிட்­டத்­தட்ட 950,000 சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் கூடு­தல் கட்­ட­ணக் கழி­வைப் பெறும்.

21 வய­துக்­குக் கீழ் உள்ள சிறு­வர்­கள் தங்­க­ளது குழந்தை மேம்­பாட்­டுக் கணக்கு, எடு­சேவ் கணக்கு அல்­லது உயர்­நி­லைக்­குப் பிந்­திய கல்­விக் கணக்கு ஆகி­ய­வற்­றில் தலா $200 நிரப்­பு­தொகை பெறு­வர். ஏற்­கெ­னவே வழங்­கப்­பட்டு வரும் வரு­டாந்­திர எடு­சேவ் நிரப்­பு­தொ­கை­யு­டன் கூடு­த­லாக இது வழங்­கப்­ப­டு­கிறது.

1. அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் ரொக்­கம்

அனைத்து வயது வந்த சிங்கப்பூரர்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிசம்பர் 2022 முதல் 2026 வரை ரொக்கப் பணம் பெறுவார்கள். வருமானம், சொத்து உடைமையைப் பொறுத்து அவர்கள் பெறும் மொத்தத் தொகை S$700 முதல் S$1,600 வரை இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஆண்டுக்கு $34,000 அல்லது அதற்கும் குறைவான வருமானத்தை ஈட்டுபவர்கள், ஒரு சொத்து அல்லது சொத்தே இல்லாதவர்கள், ஆண்டுக்கு $200 முதல் $400 வரை யிலும் மொத்தமாக $1,600 வரையிலும் பெறத் தகுதி உடையவர்கள். ஆண்டுக்கு $100,000க்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஆண்டுக்கு S$100 முதல் $200 வரை பெறுவார்கள், மொத்தம் $700. ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கும் தனிநபர்களுக்கும் அவர்களின் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் இதேபோன்ற தொகை வழங்கப்படும்.

கிட்டத்தட்ட 2.8 மில்லியன் வயது வந்த சிங்கப்பூரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு முதியோர் போனஸ்

வரும் 2023 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டுகளில் குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்கள் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, ரொக்கம் (மூத்தோர் போனஸ்) திட்டத்தின் மூலம் $600 முதல் $900 வரையிலான கூடுதல் ரொக்க வழங்கீடுகளைப் பெறுவர்.

$34,000, அதற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட ஏறக்குறைய 850,000 முதியவர்கள் போனஸைப் பெறுவர்.

$13,000, அதற்கும் குறைவான ஆண்டு மதிப்புள்ள வீடுகளுக்கு, 2025ஆம் ஆண்டு வரை $250 (55 முதல் 64 வயது வரை உள்ளவர்கள்) அல்லது $300 (65 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள்) பெறுவார்கள்.

$13,000க்கு மேல் $21,000க்குக் குறைவான மதிப்பு உள்ள வீடுகளைக் கொண்ட முதியவர்கள் வயது வேறுபாடின்றி $200 ரொக்கம் பெறுவர்.

3. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு- சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவு

சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவு, ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின் நிரந்தர பகுதியாக அமையும். வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணக் கழிவுகள் கிடைக்கும். ஏப்ரலில் தொடங்கி நான்கு கட்டங்களாக இவை வழங்கப்படும் தகுதியுடைய வீவக குடும்பங்கள், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டத்தின்கீழ் தற்போது பெறும் தள்ளுபடிகளுக்கு மேல், ஜனவரி 2023 முதல் 2026 வரை அதிகமான சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவு (யு-சேவ்) பற்றுச்சீட்டுகளைப் பெறுவார்கள். நான்கு ஆண்டு காலத்தில் ஓரறை, ஈரறை கொண்ட குடும்பங்கள் $570 வரை பெறுவர். எக்ஸிகியூடிவ் வீடுகள் அல்லது பல தலைமுறை வீடுகளில் வசிப்பவர்களுக்கு $330 வரை கிடைக்கும்.

ஏறக்குறைய 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் இந்த உதவியைப் பெறுவார்கள். இதன்மூலம் 1.5க்கும் 3.5 மாதத்திற்கும் இடைப்பட்ட சேவை, பராமரிப்புக் கட்டணங்களை ஈடுசெய்ய முடியும்.

4. மெடிசேவ் கணக்கில் பணம் நிரப்புதல்

இரண்டு மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு 2023 முதல் 2025 வரை தங்கள் மத்திய சேமநிதி மெடிசேவ் கணக்கில் ஆண்டுதோறும் $150 பணம் நிரப்பப்படும். இதற்கு 20 வயதும் அதற்குக் குறை வான சிங்கப்பூரர்களும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் தகுதி பெறுவர்.

5. சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டு

அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் 2023, 2024ஆம் ஆண்டுகளில் $200 மதிப்புடைய சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இந்தப் பற்றுச்சீட்டுகளை பங்குபெறும் கடைகள், வணிக மையங்கள், பிரதான பலபொருள் அங்காடிகளில் பயன்படுத்தப்படலாம்.

6. குடிமக்கள் ஆலோசனைக் குழு, சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி

குடிமக்கள் ஆலோசனைக் குழு காம்கேர் நிதி ஐந்து ஆண்டுகளில் $5 மில்லியன் நிதி பெறும். இந்த நிதியானது அந்தந்த குடிமக்கள் ஆலோசனைக் குழுக்களை அணுகும் அவசரத் தேவைகளைக் கொண்ட குடும்பங்களுக்குப் பயனளிக்கும். கூடுதலாக, சீன மேம்பாட்டு உதவிக் குழு, யூரேஷியன் சங்கம், மெண்டாக்கி, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) நான்கு சமூக சுய உதவி குழுக்களுக்கு நான்கு ஆண்டுகளில் 12 மில்லியன் நிதி உதவி வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!