எம்பிளாய்மண்ட், எஸ்-பாஸ் குறைந்தபட்ச சம்பளம் கூடும்

செப்டம்பர் முதல் முறையே $5,000ஆகவும் $3,000ஆகவும் அதிகரிக்கும்

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­தும் முத­லாளிகள், அத்­த­கைய ஊழியர்க­ளுக்கு விரை­வில் குறைந்­த­ பட்­சமாக அதிக சம்­ப­ளத்தைக் கொடுக்க வேண்டியிருக்­கும்.

புதிய எம்­பி­ளாய்­மண்ட் பாஸ் விண்­ணப்­பங்­க­ளுக்­குத் தகுதி பெற குறைந்­த­பட்ச சம்­ப­ளம் இவ்வாண்டு செப்­டம்­பர் முதல் $5,000ஆக உய­ரும். இப்­போது இந்­தச் சம்­ப­ளம் $4,500ஆக இருக்­கிறது.

நிதிச் சேவைத் துறை­க­ளைப் பொறுத்­த­வரை இந்­தக் குறைந்­த­பட்ச சம்­பள அளவு $5,000லிருந்து $5,500ஆகக் கூடும்.

ஆற்­றல் மிகுந்த, பொருத்­த­மா­ன­வர்­கள் எம்­பி­ளாய்மண்ட் பாஸ் அனு­ம­தி­யைப் பெறு­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் அப்­போ­தைக்கு அப்­போது அவர் ­க­ளுக்­கான தொடக்க சம்­ப­ளம் சரி­செய்­யப்­ப­டு­கிறது.

ஓர் ஊழி­ய­ரின் ஆற்­ற­லைப் பொறுத்தே அவ­ருக்கு அதிக சம்­ப­ளத்­தைக் கொடுக்க முத­லாளி முன்­வ­ரு­வார் என்­பது நடை­முறை என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் குறிப்பிட்டார்.

புதிய வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாக்­கல் செய்­த­போது அவர் இதனைத் தெரிவித்தார்.

"எம்­பி­ளாய்மண்ட் பாஸ் அனு­மதி பெற்று சிங்­கப்­பூர் வரு­ப­வர்­கள் நிபு­ணத்­து­வர்­க­ளாக, மூத்த நிர்­வாகி­ க­ளாக இருக்­க­வேண்­டும்.

"அவர்­கள் நம் பொரு­ளி­ய­லுக்கு உதவ முடி­யும். தங்­க­ளு­டன் வேலை பார்ப்­போ­ரின் தேர்ச்­சி­க­ளைக் கூர்­தீட்ட முடி­யும். நம் ஊழி­யர் அணி­யைப் பலப்­ப­டுத்­த­வும் அவர்­க­ளால் முடி­யும்," என்­றார் அமைச்­சர்.

குறைந்­த­பட்ச சம்­ப­ளம் ஒரு­பு­றம் இருக்க, எம்­பி­ளாய்மண்ட் பாஸ் விண்­ணப்­பங்­களை மதிப்­பி­டும் முறை­யும் சீர­மைக்­கப்­படும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டத்­தில் முத­லீடு செய்­யும் அதே­ வே­ளை­யில், நாம் தொடர்ந்து திறந்த நிலை­யில் இருந்து, உல­கம் முழு­வ­தி­லும் இருந்து ஆற்­றல்­மிக்­க­வர்­க­ளை ஈர்க்க வேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

எஸ்-பாஸ் அனு­மதி மூலம் வரும் ஊழி­யர்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச சம்­ப­ள­மும் உயர்த்­தப்­ப­டு­கிறது.

இந்­தச்சம்­ப­ளம் இப்­போது $2,500ஆக இருக்­கிறது. இது இந்த ஆண்டு செப்­டம்­பர் முதல் $3,000 ஆகும்.

நிதிச் சேவை­யில் இவர்களுக்­கான புதிய சம்­ப­ளம் புதிய குறைந்­த­பட்ச சம்­ப­ளம் $3,500 ஆக இருக்­கும். எஸ்-பாஸ் ஊழி­யர்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச சம்­ப­ளம் மீண்­டும் அடுத்த ஆண்டு செப்­டம்­ப­ரி­லும் 2025 செப்­டம்­ப­ரி­லும் உயர்த்­தப்­படும். இது பற்றி பின்­னர் அறி­விக்­கப்­படும். புதுப்­பிக்கப்படும் விண்­ணப்­பங் ­க­ளைப் பொறுத்­த­வரை இந்த மாற்றங்­கள் ஓராண்டு தாம­த­மாக 2023 செப்­டம்­ப­ரில் இருந்து நடப்­புக்கு வரும்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை அதி­கம் சார்ந்­தி­ருக்­கும் கட்­டு­மா­னம், பத­னீட்டு தொழில்­து­றை­க­ளுக்­கான 'ஒர்க்­பர்­மிட்' கொள்­கை­கள் சரி­செய்­யப்­படும்.

எடுத்­துக்­காட்­டாக 2024 ஜன­வரி­யில் இருந்து சார்ந்­தி­ருப்­போர் விகித வரம்பு அல்­லது ஒரு நிறு­வ­னம் நிய­மிக்­கக்­கூ­டிய வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வரம்பு 87.5%லிருந்து 83.3%ஆகக் குறைக்­கப்­படும்.

மனி­த­வள அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தின்­போது பல்­வேறு வெளி­நாட்டு ஊழி­யர் கொள்கை மாற்­றங்­கள் பற்­றிய மேல்­வி­வ­ரங்­கள் அறி­விக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!