போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது

போதைப் பொருள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தன் சந்­தே­கத்­தின் பேரில் முப்­பது வய­து­களில் உள்ள மூன்று சிங்­கப்­பூர் ஆட­வர்­களை மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி) கைது செய்­துள்­ளது.

18 எக்ஸ்­டசி மாத்­தி­ரை­கள், 2 கிராம் 'ஐஸ்', போதைப் பொருள் உட்­கொள்­வ­தற்­கான சாத­னங்­கள் ஆகி­யவை அப்­பர் புக்­கிட் தீமா ரோட்­டில் உள்ள ஒரு குடி­யி­ருப்­பில் கடந்த புதன்­கி­ழமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதே வீட்­டில், குறிப்­பி­டத்­தக்க அள­வில் மின் சிக­ரெட்­டு­கள், அது தொடர்­பான உதிரி பாகங்­கள் ஆகி­ய­வற்­றை­யும் சிஎன்பி அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்து, அது குறித்து சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­டம் தெரி­யப்­ப­டுத்­தி­னர்.

அந்த வீட்­டில் போதைப் பொருள் தவிர்த்து கைப்­பற்­றப்­பட்ட பொருள் களின் மதிப்பு கிட்­டத்­தட்ட $700,000 என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தெரி­வித்­தது.

மொத்­தம் 1,461 மின் சிக­ரெட்­டு­கள், 94,572 மின் சிக­ரெட் உதிரி பாகங்­கள், 78,091 புகை­யி­லைக் குச்­சி­கள் ஆகி­ய­வற்றை சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் கைப்­பற்­றி­யது.

அந்த மூவர் (வயது 30, 32, 37) மேற்­கொண்ட சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­கள் குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

புகை­யிலை (விளம்­ப­ரக் கட்­டுப்­பாடு, விற்­பனை) சட்­டத்­தின்படி, செயற்கை புகை­யி­லைப் பொருள்­களின் இறக்­கு­மதி, விநி­யோ­கம், விற்­பனை ஆகி­ய­வற்­றுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய குற்­றத்தை முதல் முறை புரிந்த ஒரு­வ­ருக்கு $10,000 வரை அப­ரா­தம், ஆறு மாதம் வரை­யி­லான சிறை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

மீண்­டும் அதே குற்­றத்­தைப் புரிபவ­ருக்கு $20,000 வரை அப­ரா­தம், 12 மாதம் வரை­யி­லான சிறை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

இது­போன்ற தடை செய்­யப்­பட்ட பொருள்­களை வைத்­தி­ருப்­போர், விற்­ப­வர் அல்­லது பயன்­ப­டுத்­து­ப­வ­ரின் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு $2,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தெரி­வித்­தது.

தடை செய்­யப்­பட்ட பொருள்­கள் அனைத்­தும் பறிமு­தல் செய்­யப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!