உள்ளூர் பள்ளிகளைப் பல்வகைப்படுத்த அழைப்பு

சிங்­கப்­பூர் அதன் பள்­ளி­க­ளைப் பல்­வ­கைப்­ப­டுத்தி பல­த­ரப்­பட்ட மாண­வர்­க­ளுக்குப் பல்­வேறு பாதை­களை வழங்க வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் அழைப்பு விடுத்­துள்­ளார்.

ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும் வெவ்­வேறு பலம், ஆர்­வம், இலட்­சி­யம், கற்­றல் தேவை­கள் ஆகி­யவை இருப்­பதை அமைச்­சர் சான் சுட்­டி­னார்.

இது­தான் வெற்­றிக்­கான பாதை என்று அனை­வ­ருக்­கும் ஒரே வழி­யைக் காட்­டக்­கூ­டாது என்­றார் அவர்.

நான் சியாவ் தொடக்­கப்­பள்ளி, நான் சியாவ் உயர்­நி­லைப்­பள்ளி ஆகி­ய­வற்­றின் 75வது ஆண்டு விழா­வில் கலந்­து­கொண்டு திரு சான் பேசி­னார்.

இந்த விழா செங்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள நான் சியாவ் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் நடை­பெற்­றது. சிங்­கப்­பூ­ருக்­குப் போதிய வளங்­கள் இல்­லா­த­தால், இருக்­கும் வளங்­களை முழு­மை­யா­க­வும் துரி­த­மா­க­வும் பயன்­ப­டுத்த நாட்­டின் கல்வி முறை வடி­வ­மைக்­கப்­பட்­ட­தாக திரு சான் தெரி­வித்­தார்.

ஆனால் பல­த­ரப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கான தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய பல்­வகை அணு­கு­மு­றை­க­ளைப் பயன்­ப­டுத்­தா­மல் அனை­வ­ருக்­கும் ஒரே மாதி­ரி­யான அணு­கு­மு­றை­யைப் பல பள்­ளி­கள் கடைப்­பி­டித்­த­தாக அவர் கூறி­னார்.

"தற்­போது நமக்குக் கூடு­தல் வளங்­கள் இருக்­கின்­றன. மாண­வர்­கள் தேர்ந்­தெ­டுக்க பல்­வகை தெரி­வு­களை வழங்க வேண்­டும். ஒவ்­வொரு தெரி­வும் வித்­தி­யா­ச­மா­ன­தாக இருக்க வேண்­டும். அவற்­றின் மூலம் மாண­வர்­கள் தங்­கள் திற­மைகளை அடை­யா­ளம் காண முடி­யும்," என்று திரு சான் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் விளை­யாட்­டுப் பள்ளி, நார்த்­லைட் பள்ளி, சிங்­கப்­பூர் கலை­கள் பள்ளி போன்ற சிறப்­புப் பள்­ளி­க­ளை­யும் நான் சியாவ் உயர்­நி­லைப்­பள்ளி போன்ற சிறப்பு உத­வித் திட்ட பள்­ளி­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்த சிங்­கப்­பூர் செயல்­பட்டு வந்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

1979ஆம் ஆண்­டில் முதல் ஒன்­பது சிறப்பு உத­வித் திட்ட பள்­ளி­கள் அறி­விக்­கப்­பட்­ட­போது அவற்­றுக்­கான பட்­டி­ய­லில் நான் சியாவ் உயர்­நி­லைப்­பள்ளி இடம்­பெ­ற­வில்லை. ஆனால் 2012ஆம் ஆண்­டில் அப்­பட்­டி­ய­லில் அது சேர்க்­கப்­பட்­டது.

சிறப்பு உத­வித் திட்ட பள்­ளி­கள் பட்­டி­ய­லில் இடம்­பெ­றும் தொடக்­கப்­பள்ளி, உயர்­நி­லைப்­பள்ளி ஆகி­ய­வற்­றில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு சீன­மொழி, சீனக் கலா­சா­ரம் ஆகி­ய­வற்­று­டன் இரு­மொ­ழித் திறன் பெற ஆங்­கி­லம் கற்­பிக்­கப்­ப­டு­கிறது.

ஆண்டு விழா­வின்­போது மர­பு­டை­மைக் கலைக்­கூ­டம் ஒன்றை அமைச்­சர் சான் திறந்­து­வைத்­தார். முப்­ப­ரி­மாண அச்சு இயந்­தி­ரங்­கள் போன்ற சாத­னங்­கள் அங்கு காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!