முயிஸ்: கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் எச்சரிக்கை தேவை

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொடர்­பான விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்டு, புனித ரம­லான் மாதத்­தில் பள்­ளி­வா­சல்­களில் பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் தொட­ரும் வேளை­யில், இத்­தகைய நட­வ­டிக்­கை­களில் பங்­கெடுப்­போர் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்கு­மாறு சிங்­கப்­பூர் இஸ்­லா­மி­யச் சமய மன்­றம் (முயிஸ்) வலி­யுறுத்­தி­யுள்­ளது.

இவ்­வாண்டு கூடு­த­லான சமய நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்­தா­லும், கொவிட்-19க்கு முந்­தைய ரம­லா­னுக்­குத் திரும்­பு­வ­தாக அர்த்­த­மா­காது என்று அது நினைவூட்டி உள்ளது.

ஏப்­ரல் 3 முதல் மே 2ஆம் தேதி­வரை சிங்­கப்­பூ­ரில் உள்ள முஸ்­லிம்­கள் ரம­லான் மாத நோன்பு மேற்­கொள்­வர்.

பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் எளி­மை­யாக்­கப்­ப­டு­வ­தன் பொருட்டு, இவ்­வாண்டு ரம­லான் மாதத்­தில் பள்­ளி­வா­சல்­களில் வழி­பாட்­டில் ஈடு­ப­டு­வதை முஸ்­லிம் சமூ­கத்­தி­னர் எதிர்­பார்க்­க­லாம் என்று முயிஸ் கூறி­யது.

எனி­னும், பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வரு­வோ­ரின் பாது­காப்­பைக் கருத்­தில் ­கொண்டு, பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் தொடர்ந்து நடப்­பில் இருக்­கும் என்­பதை முயிஸ் சுட்­டி­யது.

முஸ்­லிம்­கள் வீட்­டிலேயே நோன்­பைத் துறந்­து­விட்டு தங்­க­ளது குடும்­பத்­தா­ரு­டன் மக்­ரிப் தொழு­கை­யில் ஈடு­பட ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அதன் பின்­னர் அவர்­கள் பள்ளி­வா­ச­லுக்­குச் சென்று இஷா, தரா­விஹ் தொழு­கை­யில் ஈடு­ப­ட­லாம் என்­றது முயிஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!