மலேசியா செல்ல உட்லண்ட்ஸ் சோதனைச்சவாடியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

புனித வெள்ளி (ஏப்ரல் 15) அன்று தொடங்கிய வாரயிறுதியில் உட்லண்ட்ஸ் சோதனைச்சவாடியில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழி பயணங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முழுமையாகத் திறந்த பின்னர் வந்திருக்கும் முதல் பொது விடுமுறை இது.

காலை எட்டு மணிக்கு உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்குத் தான் சென்றபோது வரிசையில் 200 பேர் இருந்தனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

வரிசைகளை ஒழுங்குபடுத்த குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

சோதனைச்சாவடி அருகே உள்ள பேருந்து நிறுத்துமிடத்தையும் தாண்டி 100 மீட்டர் தூரம் வரை வரிசை நீண்டிருந்தது.

காலை 9 மணிக்கு மழை பெய்தபோதும் வரிசை குறையவில்லை.

பின்னர் காலை 10 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் நண்பகல் 12 மணி அளவில் குறைந்தது.

மழை பெய்தபோதும் ஜோகூர் செல்லும் ஆர்வம் பலரிடம் இருந்தது.

சிலர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா செல்வதாகக் கூறினர்.

மலேசியர்கள் பலரும் வார இறுதியைக் கழிக்க சிங்கப்பூர் நுழைந்த வண்ணம் இருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!