மசெக நான்காம் தலைமுறை அணித் தலைவர் லாரன்ஸ் வோங் பற்றி சில தகவல்கள்

சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்.

பிரதமர் லீ சியன் லூங்குக்குப் பிறகு அப்பதவியை வகிக்கக்கூடிய இடத்தில் 49 வயது திரு வோங் இப்போது இருக்கிறார்.

அவரைப் பற்றி சில தகவல்கள்:

ஆரம்பகாலம்:

திரு லாரன்ஸ் வோங் மரீன் பரேட் குடியிருப்புப் பேட்டையில் சாதாரண குடும்பத்தில் வளர்ந்தவர்.

அவருக்கு இரண்டு வயது மூத்த அண்ணன் உண்டு. அவர் விண்வெளியியல் பொறியியலாளராகப் பணிபுரிகிறார்.

ஹேக் தொடக்கப் பள்ளி, தஞ்சோங் காத்தோங் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பின்னர் விக்டோரியா தொடக்கக் கல்லூரிக்குச் சென்றார் திரு வோங்.

அமெரிக்காவின் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம், மிஷிகன் -ஆன் அர்போர் பல்கலைக்கழகங்களில் முறையே பொருளியல் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.

பின்னர் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

அரசாங்கப் பணி:

சிங்கப்பூர் திரும்பியவுடன் வர்த்தக தொழில் அமைச்சசில் சேர்ந்த திரு வோங், நிதி, சுகாதார அமைச்சுகளில் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.

ஒரு கட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங்கின் முதன்மை தனிப்பட்ட செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

மூன்று ஆண்டுகள் கழித்து எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகியானார்.

திரு வோங் அரசாங்கப் பணியில் சிங்கப்பூரர்களுக்கு உதவும் பல கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க உதவினார்.

அரசியல் களம்:

அரசாங்க சேவையில் 11 ஆண்டுகள் பணியாற்றிய திரு வோங் 2011 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறிப்பினர் ஆனார்.

அவர் தற்போது மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

2020ல் அப்போதைய சுகாதார அமைச்சர் கான் கின் யோங், கொவிட்-19ஐ எதிர்த்து போரிடும் ஒரு பணிக்குழுவை அமைக்க முடிவெடுத்தபோது, அவருக்குத் துணையாக இணைத் தலைவராக திரு வோங்கைத் தேர்வு செய்தார்.

திரு வோங் கடந்த 2021 மே மாதம் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமது முதலாவது வரவு செலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அவர் உரையாற்றினார்.

சுவைத்தகவல்கள்:

திரு வோங் புத்தகப் பிரியர். நாய்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். நன்றாக கித்தார் வாசித்து பாடக்கூடியவரும் கூட.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!