‘கம்ஃபர்ட் டெல்குரோ’வின் புதிய மேம்பட்ட ‘ஸிக்’ செயலி

'கம்­ஃபோர்ட் டெல்­குரோ' நிறு­வ­னம் அதன் கைத்­தொ­லை­பே­சிச் செய­லி­கள் இரண்டை இணைத்து 'சிடிஜி ஸிக்' எனும் ஒரே சேவைத் தள­மாக வெளி­யிட்­டுள்­ளது.

டாக்சி முன்­ப­திவு, உண­வக முன்­ப­திவு, அரு­கில் உள்ள கார் மின்­னூட்ட வசதி பற்­றிய தக­வல்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களைக் கொண்ட புதிய செயலி இன்று முதல் சேவை வழங்­கும்.

நாள­டை­வில் வாட­கை கார்ச் சேவை, வாக­ன­மோட்­டும் பயிற்சி வகுப்­பு­க­ளுக்கு முன்­ப­திவு செய்­தல், தனி­யார் பேருந்­து­களை வாடை­கைக்கு எடுத்­தல், மருத்­து­வப் போக்கு­வ­ரத்­துக்­குத் திட்­ட­மி­டு­தல் போன்ற சேவை­க­ளை­யும் இந்­தச் செயலி வழங்­கும்.

சென்ற ஆண்டு தொடங்­கப்­பட்ட 'ஸிக்' செய­லியை மார்ச் மாதத்­தில் 'கம்­ஃபர்ட் டெல்­குரோ' நிறு­வ­னம் சேவை­யி­லி­ருந்து மீட்­டுக்­கொண்­டது. 'கிரேப்' நிறு­வ­னத்­துக்­குப் போட்டி கொடுக்­கும் என்று கரு­தப்­பட்ட அந்­தச் செயலி பல மில்­லி­யன் வெள்ளி செல­வில் உரு­வாக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும் அந்­தச் செய­லி­யின் மூலம் முக்­கி­ய­மான அனு­ப­வம் பெற்­ற­தா­க­வும் வர்த்­த­கத்­தில் புதிய திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்ள அது உத­வி­ய­தா­க­வும் நிறு­வ­னம் கூறி­யது.

தற்­போது 'கம்­ஃபர்ட் டெல்­குரோ' செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­வோர், அதை மேம்­ப­டுத்­தி­னால் போதும்; புதிய 'சிடிஜி ஸிக்' செய­லி­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

அவர்­க­ளது சலு­கைக் குறி­யீ­டு­களோ ரொக்­க­மில்­லாக் கட்­டண விவ­ரங்­களோ எந்த விதத்­தி­லும் பாதிக்­கப்­ப­ட­மாட்டா என்று 'கம்­ஃபர்ட் டெல்­குரோ' கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!