பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டாடும் புதிய கண்காட்சி

சிங்­கப்­பூர் பெண்­க­ளின் முன்­னேற்­றத்­தை­யும் முயற்­சி­க­ளை­யும் கொண்­டா­டும் கண்­காட்சி ஒன்று பிளாசா சிங்­கப்­பூ­ரா­ கடைத் தொகுதியில் தொடங்­கப்­பட்­டுள்­ளது. பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று தொடங்கி வைத்த இந்­தப் புதிய கண்­காட்சி, மே 3ஆம் தேதி வரை நடை­பெ­றும். வெவ்ேவறு கருப்பொரு­ளைக் கொண்டு 3 பிரி­வு­களில் கண்­காட்சி நடை பெறும். கண்­காட்­சிக்கு வரு­வோர் பெண்­க­ளின் முன்­னேற்­றத்தை ஆத­ரிக்­கும் சொந்­தக் கருத்­து­களை அங்­குப் பதி­வி­ட­லாம்.

மே 3ஆம் தேதிக்­குப் பின்­னர் சிங்­கப்­பூ­ரின் நான்கு நக­ரப் பகுதி­ களில் இக்­கண்­காட்சி நடத்­தப்­படும்.

சிங்­கப்­பூர் பெண்­க­ளின் முன்­னேற்­றம் தொடர்­பாக கடந்த மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் வெள்ளை அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட்­டது. அதன் தொடர் நட­வ­டிக்­கை­யாக, பெண்­க­ளின் சாத­னை­களை விளக்­கும் இந்­தக் கண்­காட்­சிக்கு சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு ஏற்­பாடு செய்­துள்­ளது.

முன்­னோ­டித் தலை­மு­றைப் பெண்­கள் நாட்­டுக்கு ஆற்­றிய பணி­களை விளக்­கும் புகைப்படங்­களும் ஆவ­ணங்­களும் கண்­காட்­சி­யில் இடம்­பெற்­றுள்­ளன.

அவற்­று­டன் பாலின சமத்­து­வத்தை வலுப்­ப­டுத்­தும் வருங்காலத் திட்­டங்­களை விளக்­கும் அம்­சங்­களும் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தக் கண்­காட்சி பற்றி பின்­னர் பிர­த­மர் லீ தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார்.

"சிங்­கப்­பூர் பெண்­கள் பெரும் முன்­னேற்­றங்­களை அடைந்­தி­ருக்­கும் வேளை­யில் அதனை நோக்கி இன்­னும் நிறைய செய்ய வேண்டி உள்­ளது. நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒன்­றி­ணைந்து நமது பங்கை ஆற்­று­வோம்.

"நமது வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்கு நியா­ய­மான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சிங்­கப்­பூரை உரு­வாக்­கித் தரு­வோம்," என்று அந்­தப் பதி­வில் திரு லீ குறிப்­பிட்­டுள்­ளார்.

கண்­காட்சி தொடக்க நிகழ்­வில் பேசிய சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங், வெள்ளை அறிக்கை சமர்ப்­பிக்­கும் அள­வுக்கு இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­கள், பெண்களை­யும் சிறு­மி­க­ளை­யும் தனிப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ரும் ஆத­ரிக்க வேண்­டிய அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!