அன்பளிப்புப் பைகள்; குறைந்த வருவாய் குடும்பங்கள் பெற்றன

உடல்­ந­லத்­திற்கு உகந்த உண­வுப்­பொ­ருள்­க­ளு­டன் கூடிய அன்­பளிப்புப் பைகளைக் குறைந்த வருமான குடும்­பங்­கள் நேற்று பெற்றுக்­கொண்­டன.

உடல்­ந­லத்­திற்கு ஏற்ற உண­வுப்­பொ­ருள்­களை உட்­கொள்­ளும் பழக்கத்தை மக்­க­ளி­டையே பேணி வளர்க்­கும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக சுமார் 700 குடும்­பங்­க­ளுக்கு அந்­த அன்பளிப்புப் பைகள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

சுகா­தார மேம்­பாட்­டு வாரியத் திற்­கும் 42 சமூ­கப் பங்­காளி நிறு­வனங்­க­ளுக்­கும் இடைப்­பட்ட ஒரு கூட்டு முயற்­சி­யான இந்த இயக்­கம் கெம்­பாங்கா­னில் உள்ள முகம்­ம­தியா சங்­கத்­தில் நேற்று நடந்­தது.

ரமலான் மாதத்­தின்­போது சர்க்­கரையைக் குறைத்­துக்கொள்­வது போன்ற உடல்­ந­ல­னுக்கு ஏற்ற வாழ்க்கைப் பாணியை மேற்­கொள்ளும்­படி மலாய்ச் சமூ­கத்­திற்கு ஊக்­க­மூட்­டும் நோக்­கத்­துடன் இந்­த வாரியம் இரண்டு மாத கால இயக்­கம் ஒன்றை மேற்­கொண்­டது. அந்த இயக்­க­மும் நேற்று முடி­வ­டைந்­தது.

நிகழ்ச்­சி­யில் பேசிய சுகா­தார அமைச்­சுக்­கான நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மக்­ஸாம், ரமலான் மாதத்­தின்­போது சமூ­கத்­திற்கு உண­வுப்­பொட்­ட­லங்­களை வழங்­கு­வது வழக்­க­மான ஒன்று என்று தெரி­வித்­தார்.

இப்­படி வழங்­கும்­போது மக்­களின் உடல்­ந­ல­னுக்கு ஏற்ற நல்ல உண­வுப்­பொ­ருள்­களை வழங்க வேண்­டும் என்­ப­தில் நாம் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

சர்க்­க­ரையைக் குறைத்து இனிப்புப் பல­கா­ரத்தை, பானத்தைக் குடும்­பத்­தி­னர் எப்­படி செய்­ய­லாம் என்­பது பற்­றிய தக­வல்­களும் நேற்று வழங்­கப்­பட்ட அன்­ப­ளிப்­புப் பைகளில் இடம்­பெற்றுள்ளன.

புகைக்­கும் பழக்­கம் உள்­ள­வர்­கள் அந்­தப் பழக்­கத்தை நிறுத்த உத­வும் குறிப்­பு­கள் அடங்­கிய கையேடும் அந்­தப் பையில் இருக்­கிறது. அன்­ப­ளிப்­புப் பை விநி­யோகம் ஏப்­ரல் 9ஆம் தேதி தொடங்­கி­யது. மொத்­தம் 8,500 குடும்­பங்­க­ளுக்கு அவை வழங்­கப்­படும். ரம­லான் மாதம் வரை அது தொட­ரும்.

இது­வரை 5,900 குறைந்த வரு­மானக் குடும்­பங்­கள் அவற்றைப் பெற்று இருக்­கின்­றன.

அன்­ப­ளிப்­புப் பைகளை நேற்று பெற்­றுக்­கொண்ட 700 குடும்­ப­த் தினரில் முகம்­மது தாஃபிக் முகம்­மது ரஹிம், 32, என்­ப­வ­ரும் ஒரு­வர்.

பிடோக்­கில் தன் மனைவி, மூன்று பிள்­ளை­க­ளு­டன் ஓரறை வாடகை வீட்­டில் வசிக்­கும் இவர், விநி­யோக ஊழி­ய­ரா­கப் பணி­யாற்று­கி­றார். "இப்­போது எனக்கு பண சிர­மம் அதி­க­மாக இருக்­கிறது. இந்த அன்­பளிப்புப் பை கிடைத்து இருப்­ப­தால் இந்த மாதம் சீராக ஓடி­வி­டும். என் பிள்­ளை­க­ளுக்கு ஜவுளி வாங்க எனக்கு எளி­தா­ன­தாக இருக்­கும்," என்று இவர் கூறி­னார்.

அன்­ப­ளிப்­புப் பையைப் பெற்­றுக்­கொண்ட திரு­வாட்டி ஃபாசியா ஏவி, 46, என்ற பகு­தி­நேர விநி­யோக ஊழி­யர், இந்த அன்­ப­ளிப்­புப் பை என்­னு­டைய பணப் பிரச்­சி­னையை ஓர­ள­வுக்கு சமா­ளிக்க உத­வும் என்­றார். பல­வற்­றுக்­கும் தான் பணம் கட்ட வேண்­டிய சூழ்­நிலை இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இதர அமைப்­பு­களும் நேற்று அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்­கின.

சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் 450க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்­கி­யது. $120 மதிப்­புள்ள மளி­கைப்­பொ­ருள் பற்­றுச்­சீட்­டை­யும் அந்­தக் குடும்­பங்­கள் பெற்றுக்கொண்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!