‘தொடர்ந்து நீக்குப்போக்கை விரும்பும் ஊழியர்கள்’

முத­லா­ளி­கள் தங்­க­ளின் கருத்­து­களைக் கேட்டு, தங்­க­ளு­டன் தகுந்த முறையில் தொடர்­பு­கொண்டு தங்­க­ளின் விருப்­பங்­களுக்கு ஏற்­ற­வாறு வேலை ஏற்­பாடு­க­ளைச் செய்து தர­வேண்­டும் என்று சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் விரும்­பு­கின்­ற­னர். எந்த நாள்­களுக்கு எத்­தனை மணி நேரம் வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­பது அல்­லது அலு­வ­ல­கத்­தில் வேலை செய்வது ஆகிய அம்­சங்­கள் அவற்­றில் அடங்­கும்.

பெரும்­பா­லான நாள்­களில் அலு­வ­ல­கத்­திற்கு வரு­மாறு முத­லா­ளி­கள் தங்­க­ளைக் கட்­டா­யப்­ப­டுத்­தினால் நீக்­குப்­போக்கை விரும்­பும் ஊழி­யர்­கள் வேறு வேலை­யைத் தேடிக்­கொள்ள நினைக்கலாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொள்கை ஆய்­வுக் கழ­கம் நடத்­திய கருத்­தாய்­வில் இந்த விவ­ரங்­கள் தெரி­ய­வந்­துள்­ளன. கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் வேலை­யைப் பொருத்­த­வரை தங்­களின் விருப்­பங்­க­ளுக்கு முக்­கியத்­து­வம் தந்து முடி­வெ­டுக்­கும் அணுகு­முறை ஊழி­யர்­க­ளி­டையே அதி­க­ரித்­தி­ருப்­பது கருத்­தாய்­வில் தெரி­ய­வந்­துள்ளது.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒன்­பது மாதங்­களில் அந்­தக் கருத்­தாய்வு நடத்­தப்­பட்­டது. அர­சாங்­கம், தொழிற்­சங்­கங்­கள், நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்றை அடக்­கும் முத்­த­ரப்­புக் குழு, நிறு­வ­னங்­கள் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­களை நிரந்­த­ர­மா­கச் செய்து தர­வேண்­டும் என்று கூறி வரு­கிறது. கருத்­தாய்­வின் முடி­வு­கள் அதை வலி­யு­றுத்­தும் வண்­ணம் அமைந்துள்­ளன.

இன்று முதல் இது­வரை வீட்­டி­லி­ருந்து வேலை பார்த்­துக்­கொண்­டி­ருந்த அனைத்து ஊழி­யர்­களும் மீண்­டும் வேலை­யி­டங்­க­ளுக்­குச் சென்று வேலை செய்­ய­லாம்.

"கொவிட்-19 கிரு­மிப் பர­வலை சகித்­துக்­கொண்டு வாழும் நிலையை சிங்­கப்­பூர் கிட்­டத்­தட்ட அடைந்­து­ள்ளது. எவ்­வாறு மீண்­டும் வேலை­யி­டங்­க­ளுக்­குச் செல்­வது என்­பதை ஆலோ­சிக்­கும்­போது, ஆக்­க­க­ர­மான முறை­யில் வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­க­மு­டிந்­த­தால் ஏற்­பட்ட நன்­மை­களை நாம் நினை­வில் கொள்­ள­வேண்­டும். இது­தான் நாம் சிங்­கப்­பூ­ருக்­குத் தெரி­யப்­படுத்த விரும்­பும் முக்­கி­ய­மான அம்­சம்," என்று கருத்­தாய்­வுக்­குத் தலைமை தாங்­கிய டாக்­டர் மேத்­தியூ மேத்­தி­யூஸ் கூறி­னார்.

ஆக்­க­க­ர­மான முறை­யில் வீட்டி­லி­ருந்து வேலை பார்க்­க­மு­டி­ந்தது மட்­டு­மன்றி ஊழி­யர்­க­ளால் தங்­க­ளின் தனிப்­பட்ட வாழ்க்­கை­யை­யும் மேலும் நன்­றா­கக் கவ­னித்­துக்­கொள்­ள­மு­டிந்­ததைக் கொள்­ளை­நோய்ப் பர­வல் காட்­டி­ய­தாக கருத்­தாய்வை நடத்­திய குழு தெரி­வித்­தது. 2,000க்கும் அதி­க­மா­னோ­ரைக் கொண்டு கருத்­தாய்வு நடத்­தப்­பட்டது. இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை சுமார் 500 பேரைக் கொண்டு ஒரு கருத்­தாய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இவ்­வாறே 19 முறை கருத்­தாய்வு­கள் நடத்­தப்­பட்­டன. ஊழி­யர்­க­ளின் மனப்­போக்­கில் ஏற்­ப­டக்­கூ­டிய மாற்­றங்­களை அறிய கருத்­தாய்வு பல­முறை மேற்­கொள்­ளப்­பட்­டது.

கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் 73 விழுக்­காட்டுப் பெண்­களும் 66 விழுக்­காட்டு ஆண்­களும் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­கள் நிரந்­த­ர­மாக இருப்­பதை விரும்­பு­வதா­கத் தெரி­வித்­த­னர்.

பிள்ளைகள் மற்றும் தங்களைச் சார்ந்திருக்கும் மூத்த குடிமக்களைக் கவனித்துக்கொள்ளும் பெண்களில் 94 விழுக்காட்டினர் நீக்குப்போக்கை விரும்புகின்றனர். இதே சூழலைக் கையாளும் ஆண்களில் 86 விழுக்காட்டினர் நீக்குப்போக்கை விரும்புகின்றனர்.

"வெவ்­வேறு பிரி­வு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் மாறு­பட்ட சூழல்­களைக் கையாள்­வது கருத்­தில்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும் என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­ய­வந்­தது. முத­லா­ளி­கள் ஊழி­யர்­க­ளின் கருத்­து­களைத் தெரிந்­து­கொள்­வ­தோடு அவர்­க­ளைப் புரிந்­து­கொள்­ள­வேண்­டும்," என்று டாக்­டர் மேத்­தி­யூஸ் குறிப்­பிட்­டார்.

அடுத்த ஆண்டு மேலும் ஓர் அறிக்கை வெளியிடப்படலாம் என்று டாக்டர் மேத்தியூஸ் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!