16 வேலையிட மரணங்கள்

வேலை­யி­டங்­களில் இவ்­வாண்டு இது­வரை 16 ஊழியர்கள் மர­ண­மடைந்­த­னர். இம்­மா­தம் மட்­டுமே வேலை­யி­டங்­களில் மாண்ட ஏழு பேரும் அவர்­களில் அடங்­கு­வர்.

நேற்று முன்­தி­னம் மட்­டும் வேலை­யி­டங்­களில் இரு­வர் மாண்­டதை மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது சுட்டி­னார். இதன் தொடர்பில், சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதத்­திற்­குப் பிறகு இம்­மா­தம்­தான் நிலைமை ஆக மோச­மாக இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

இதைத் தொடர்ந்து சென்ற காலாண்டு மேற்­கொள்­ளப்­பட்ட வேலை­யி­டப் பாது­காப்­புச் சோதனை­க­ளை­விட இந்­தக் காலாண்­டில் 25 விழுக்­காடு கூடு­தலான சோத­னை­கள் நடத்­தப்­படும் என்று திரு ஸாக்கி தெரி­வித்­தார். அதற்­கான வளங்­களை மனி­த­வள அமைச்சு ஒதுக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

'மரீனா பொலிவார்ட்'டில் உள்ள 'என்­டி­யுசி சென்­டர்' நிலை­யத்­தில் நேற்று நடை­பெற்ற இவ்­வாண்­டுக்­கான தேசிய வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார இயக்­கத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் கலந்துகொண்டு பேசி ஸாக்கி இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

"குறிப்­பாக அடிப்­ப­டைப் பாது­காப்பு அம்­சங்­க­ளைக் கடைப்­பி­டித்­தி­ருந்­தால் இந்த விபத்­து­களில் பெரும்­பா­லா­ன­வற்­றைத் தவிர்த்­திருக்­க­லாம் என்­பதை நினைக்­கும்­போது தற்போதைய நிலைமை கவலை­ தரு­கிறது," என்று அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.

போது­மான கட்­டுப்­பா­டு­கள் செயல்­ப­டுத்­தப்­ப­டா­த­தும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படா­த­தும் அண்­மை­யில் நிகழ்ந்த வேலை­யிட மர­ணங்­கள் குறித்த முதற்­கட்ட விசா­ர­ணை­களில் தெளி­வா­கத் தெரியவந்ததாக திரு ஸாக்கி குறிப்­பிட்­டார்.

"வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரத்­தைப் பொருத்­த­வரை கடந்த சில மாதங்­களில் நாம் கூடு­தல் கவ­னத்­து­டன் இருந்­தி­ருக்­க­லாம், இருந்­தி­ருக்­க­வேண்­டும். மேலும், வேலை­யி­டப் பாது­காப்பை சரி­யாகக் கடைப்­பி­டிக்­க­வேண்­டும் என்­பதை இந்த விபத்­து­கள் நினை­வூட்­டு­கின்றன," என்று அவர் சொன்­னார்.

பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை நிறு­வ­னங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கச் செய்ய மனி­த­வள அமைச்சு தான் மேற்­கொள்­ளும் முயற்­சி­களை மேம்­ப­டுத்தி வரு­கிறது. தேவைப்­பட்­டால் சரி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­காத நிறு­வ­னங்­க­ளுக்­கு தண்­டனை­யும் விதிக்­கப்­படும் என்று அமைச்சர் ஸாக்கி கூறி­னார்.

மேலும், வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரத்­தைப் பொருத்­த­வரை நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­நர்­க­ளுக்­கான பொறுப்­பு­களை விவ­ரிக்­கும் வழி­மு­றை­களை வரைய மனி­த­வள அமைச்­சும் வேலை­டி­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­ற­மும் தேசி­யத் தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மேளனம், தொழில்­து­றைச் சங்­கங்­கள் ஆகி­ய­வற்­றைக் கொண்ட முத்­த­ரப்­புக் குழு­வின் ஆலோ­ச­னை­யைப் பெறும் முயற்­சி­யில் இறங்கியுள்ளன.

விபத்­து­க­ளைத் தடுக்க உத­வும் எளி­தில் செயல்­ப­டுத்­தக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களும் அந்த வழி­முறை­களில் அடங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!