கருத்தாய்வு: ஐவரில் இருவருக்கு மனநலப் பிரச்சினைகள் உள்ளன

சிங்­கப்­பூ­ரில் ஐவரில் இரு­வர் மன­நலப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி­யுள்­ள­னர். 15லிருந்து 35 வயதுக்கு உள்­பட்ட இளை­யர்­க­ளைப் பொருத்­த­வரை இரண்­டில் ஒரு­வர் மன­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யிருக்­கின்­ற­னர்.

சென்ற மாதம் மேற்­கொள்­ளப்­பட்ட மன­ந­லம் தொடர்­பி­லான கருத்­தாய்­வில் இந்த விவ­ரங்­கள் தெரி­ய­வந்­துள்­ளன. 607 சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கொண்டு மக்­கள் செயல் கட்­சி­யின் இளை­யர் பிரிவு கருத்­தாய்வை நடத்தி­யது.

மன­ந­லப் பிரச்­சி­னை­கள் குறித்த விழிப்­பு­ணர்வை வளர்ப்­ப­தும் அவற்­றைக் கையாள ஒன்­று­பட்டு நட­வடிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு ஊக்­கு­விப்­ப­தும் கருத்­தாய்­வின் இலக்­கு­கள்.

கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் 70 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மானோர் மன­ந­லம் தொடர்­பில் போது­மான விழிப்­பு­ணர்வு இல்லை எனக் கரு­து­கின்­ற­னர். மன­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வோருக்கு உத­வத் தங்­க­ளி­டம் போது­மான ஆற்­றல் இல்லை என்­றும் 70 விழுக்­காட்­டுக்கு மேலா­னோர் கூறி­னர்.

நேற்று நடை­பெற்ற மக்­கள் செயல் கட்­சி­யின் #பெட்­டர்­டு­கெ­தர் (#BetterTogether) இயக்­கத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் கருத்­தாய்­வின் முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டன. கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், கல்வி, சமூக குடும்ப மேம்பாடு ஆகி­ய­வற்­றுக்­கான துணை அமைச்­சர் சுன் சுவே­லிங், ஜலான் புசார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வான் ரிஸால் வான் ஸக்­கா­ரியா ஆகி­யோர் இந்த இயக்­கத்தை வழி­ந­டத்­து­கின்­ற­னர்.

"நமது இளம் மாண­வர்­களில் பலர் தொடக்­கத்­தி­லேயே மன­நல ஆலோ­ச­கர்­க­ளை­யும் நிபு­ணர்­க­ளை­யும் நாடு­வ­தில்லை. இது இயல்­புக்கு மாறா­னது. பொது­வாக இளை­யர்­கள், தாங்­களோ தங்­க­ளின் நண்­பரோ பிரச்­சி­னையை எதிர்­நோக்­கும்­போது அதைப் பற்றி நண்­பர்­க­ளு­டன்­தான் பகிர்ந்­து­கொள்­கின்­ற­னர்," என்று திரு சான் கூறினார்.

ஒரு­வர் தனது மன­ந­ல­னை­யும் சுற்­றி­யி­ருக்­கும் மற்­ற­வர்­க­ளின் மன­ந­ல­னை­யும் கட்­டிக்­காக்­கும் ஆற்­றலை வளர்த்­துக்­கொள்­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­திப் பேசிய அவர் இவ்­வாறு சொன்­னார்.

"#பெட்­டர்­டு­கெ­தர் இயக்­கம், மன­ந­லன், சவா­லான சூழ­லில் மீள்­தி­ற­னு­டன் தொடர்ந்து முன்­னே­றக்­கூ­டிய சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­வது ஆகி­ய­வற்­றில் மக்­கள் செயல் கட்சி கொண்­டுள்ள அக்­க­றையை மறு­வு­று­திப்­ப­டுத்­து­கிறது," என்று அமைச்சர் சான் குறிப்­பிட்­டார்.

www.bettertogether.com.sg எனும் இணை­யத்­த­ளத்­தில் பொது­மக்­கள் #பெட்­டர்­டு­கெ­தர் இயக்­கம் குறித்த விவ­ரங்­க­ளைப் பெற­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!