துவாஸில் காரை மோதியவர் போதைப்பொருள் வழக்கில் சந்தேகிக்கப்படுபவர்

துவாஸ் சோத­னைச் சாவ­டி­யில் இந்த ஆண்டு ஏப்­ரல் எட்­டாம் தேதி அதி­வே­க­மாக காரை மோதிய ஓட்­டு­நர் போதைப்­பொ­ருள் வழக்­கில் சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர் என்­றும் அவர் சட்­ட­வி­ரோ­த­மாக 2017ஆம் ஆண்டு சிங்­கப்­பூரை விட்டு வெளி­யே­றி­ய­வர் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ர­ரான 47 வயது டியோ தியம் லெங், சம்­பவ நாளில் மலே­சி­யா­வில் பய­ணி­கள் இரு­வரை ஏற்­றிச் சென்­று­கொண்­டி­ருந்­தார். அதி­காலை இரண்டு மணி­ய­ள­வில் மலே­சி­யக் காவல்­து­றைக்­குச் சொந்­த­மான காரைக் கண்­ட­தும் அதி­கா­ரி­கள் தன்­னைச் சோதிப்­பர் என்று பயந்து காரை அதி­வே­க­மா­கச் செலுத்­தி­னார்.

அதை­ய­டுத்து மலே­சி­யக் காவல்­து­றை­யி­னர் அவ­ரைத் துரத்­தவே டியோ­வின் கார் துவாஸ் சோத­னைச் சாவ­டி­யில் மோதி நின்­றது (படம்).

அதில் பய­ணம் செய்த வியட்­னா­மி­யர் ஹோ தி நுங், சீன நாட்­ட­வர் சென் சோங்­சிங் இரு­வ­ரும் சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து தப்­பிக்­கும் பொருட்டு சரக்கு வருகை வட்­டா­ரத்­திற்­குள் ஓடி­னர்.

மூவ­ரும் பின்­னர் கைது­செய்­யப்­பட்­ட­னர். அனு­ம­தி­யின்றி சரக்கு வளா­கத்­தில் நுழைந்த குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட சென், நுங் இரு­வ­ருக்­கும் நேற்று ஐந்து வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. டியோ மீதான வழக்கு தொடர்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!