நான்கு கிலோகிராம் போதைப் பொருள் பறிமுதல்; ஆடவர் கைது

போதைப் பொரு­ளைக் கடத்­தி­ய­தாகச் சந்­தே­கிக்­கப்­படும் சிங்­கப்­பூரைச் சேர்ந்த 31 வயது ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். பிராஸ் பசார் பகுதியில் உள்ள ஹோட்­டல் ஒன்றின் அறை­யில் நான்கு கிலோ­கி­ரா­முக்­கும் அதி­க­மான எடை­கொண்ட போதைப் பொருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து அவர் கைது செய்­ய­ப்­பட்­டார்.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப் பொருளின் மதிப்பு 177,000 வெள்ளி என்று மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப் பொருளில் 2.155 கிலோ­கி­ராம் எடை­கொண்ட கஞ்­சா­வும் அடங்­கும். அது, போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யான 307 பேருக்கு வழங்குவதற்குப் போது­மா­ன அளவு என்று போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு சுட்­டி­யது.

500 கிரா­முக்­கும் அதி­க­மான போதைப் பொரு­ளைக் கடத்­திய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்குக் கட்­டாய மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

கைதான சந்­தேக நபர், தான் இருந்த ஹோட்­டல் அறை­யின் கத­வைத் திறக்க மறுத்­த­தால் போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் வலுக்­கட்­டா­ய­மாக அறைக்­குள் நுழைய வேண்­டி­யி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அறை­யின் கழி­வறை­யில் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

கழி­வ­றை­யில்­தான் அவர் போதைப் பொருளை அப்­பு­றப்­ப­டுத்த முயன்­ற­தா­கச் சந்­தே­கிக்­கப்­படுகிறது. அறை­யின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து போதைப் பொருள் கண்­டெ­டுக்­கப்­பட்டு பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!