சேவைத் துறையை உருமாற்ற 9 முக்கிய நடவடிக்கைகள்

சேவைத் துறை எதிர்­நோக்­கும் மிக மோச­மான ஊழி­யர் பற்­றாக்

குறையை எதிர்­கொள்­ள­வும் அத்

துறையை உரு­மாற்றி அதில் நீடித்த நிலைத்­தன்­மை­யுள்ள வளர்ச்­சியை மேம்­ப­டுத்­த­வும் கொள்கை அறிக்­கை­யில் சிங்­கப்­பூர் வர்த்­த­கச் சம்­மே­ள­னம் பல பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ளது.

சேவைத் துறை­யில் வேலை செய்­யக்­கூ­டிய வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை மறு

பரி­சீ­லனை செய்­வ­தும் பல்­வேறு பின்­ன­ணி­க­ளைக் கொண்­ட­போ­தி­லும் சேவைத் துறை­யில் பணி­பு­ரிய விருப்­ப­முள்­ள­வர்­களை வேலை­யில் அமர்த்­து­வ­தும் அவற்­றில் அடங்­கும். சேவைத் துறை­யில் நீடித்த நிலைத்­தன்­மை­யுள்ள பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு திறமை, குழு வேலை, விதி­முறை ஆகிய மூன்­றும் முக்­கி­ய­மா­னவை என்று கொள்கை அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சேவைத் துறையை உரு­மாற்ற ஒன்­பது முக்­கிய நட­வ­டிக்­கை­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யின்­கீழ் மூன்று பிரி­வு­கள் உள்­ளன. சேவைத் துறை­யில் நில­வும் ஊழி­யர் பற்­றாக்

குறையை எதிர்­கொள்ள வர்த்­த­கங்­கள், தொழிற்­சங்­கங்­கள், தொழிற்

­ச­பை­கள், அர­சாங்க அமைப்­பு­கள், சங்­கங்­கள், உயர் கல்வி நிலை­யங்­கள் ஆகி­யவை இவற்­றைக் கடைப்­பி­டிக்­க­லாம்.

தற்­போது நடப்­பில் இருக்­கும் அர­சாங்­கக் கொள்­கை­களை மேம்

­ப­டுத்­த­வும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய, எதிர்­கால

மனி­த­வ­ளத் தேவை­க­ளுக்கு ஏற்­ப நட­வ­டிக்­கை­கள் இருக்க வேண்­டும்.

"மீண்­டும் திறந்­து­வி­டப்­பட்­டுள்ள எல்­லை­கள், மீண்­டும் தொடங்­கி­உள்ள சுற்­றுப்­ப­யண, சமு­தாய, வணிக நட­வ­டிக்­கை­கள் ஆகி­யவை வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்த நிறு­

வ­னங்­க­ளுக்கு கிடைத்­துள்ள

நல்­ல­தொரு வாய்ப்பு.

"இருப்­பி­னும் வர்த்­த­கங்­கள் முழு­வீச்­சு­டன் செயல்­பட ஊழி­யர்­கள் உட­ன­டி­யா­கத் தேவைப்­ப­டு­கின்­ற­னர். அப்­போ­து­தான் சிங்­கப்­பூ­ரர்­களும் வெளி­நாட்­டி­ன­ரும் எதிர்­பார்க்­கும் சேவைத் தரத்தை எட்ட முடி­யும். ஊழி­யர் பற்­றாக்­கு­றையை எதிர்­கொள்­வதன் மூலம் வளர்ச்சி அடை­ய­வும் உரு­மா­ற­வும் நிறு­வ­னங்­கள் திட்­ட­மி­ட­லாம்," என்று சிங்­கப்­பூர் வர்த்­த­கச் சம்­மே­ள­னம் கூறி­யது. மனி­த­வ­ளக் கொள்­கை­கள் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யின் மாறி­வ­ரும் கட்­ட­மைப்­பைப் பிர­தி­ப­லிக்­க­வேண்­டும். அதி­க­ரித்து வரும் குடும்ப வரு­மா­னம், இளை­யர்­க­ளி­டையே கூடு­தல் கல்­வித் தகுதி ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்கொள்ள வேண்­டும்," என்று சிங்­கப்­பூர் உண­வ­கங்­கள் சங்­கத்­தின் தலை­வர் ஆண்ட்ரூ குவான் தெரி­வித்­தார்.

கொள்கை அறிக்கை தொடர்­பாக சிங்­கப்­பூர் வர்த்­த­கச் சம்­மே­ள­னத்­து­டன் சிங்­கப்­பூர் சுற்­றுப்­புற நிர்­வா­கச் சங்­கம், சிங்­கப்­பூர் நில­

வ­னப்­புத் துறை சங்­கம், சிங்­கப்­பூர் உண­வ­கங்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் ஹோட்­டல்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் இர­வு­நேர கேளிக்கை வர்த்­த­கங்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் சில்­லறை வர்த்­த­கச் சங்­கம், சிங்­கப்­பூர் கழிவுப்­பொ­ருள் நிர்­வாக, மறு­சு­ழற்சி சங்­கம் ஆகிய எட்டு சங்­கங்­கள் இணைந்து செயல்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!