தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவு ஜூன் 29 முதல் தொடங்கும்

பிள்­ளை­கள் அடுத்த ஆண்டு தொடக்­க­நிலை ஒன்­றில் சேர்­வ­தற்­கான பதிவுக் காலம், அடுத்த மாதம் 29ஆம் தேதி முதல் தொடங்­கும் என்று கல்வி அமைச்சு அறி­வித்து உள்­ளது.

கடந்த ஈராண்­டு­க­ளைப்போல இந்த ஆண்­டும் இணை­யம் வழி­யாக பதிவு நடை­பெ­றும் என்று அமைச்­சின் இணை­யப்­பக்­கத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இம்­முறை, முன்­னு­ரிமை அடிப்­படை­யில் பள்­ளி­யில் இடம் கிடைக்­கத் தகு­தி­பெ­றாத பிள்­ளை­க­ளுக்கு அடுத்த பதி­வுக் கட்­டத்­தின்­கீழ் இடம் கிடைக்­கச் செய்ய, மேலும் அதி­க­மான இடங்­கள் ஒதுக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது.

இந்­தப் பிரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­படும் இடங்­கள் 40ஆக இரட்­டிப்பாக்­கப்­படும் என்று அமைச்சு கடந்த ஆண்டு அறி­வித்­தி­ருந்­தது.

இந்த மாற்­றங்­க­ளின் அடிப்­ப­டை­யில் பள்­ளி­யு­டன் எந்த ஒரு தொடர்­பும் இல்­லாத பிள்­ளை­க­ளுக்கு ஒவ்­வொரு தொடக்­கப்­பள்­ளி­யும் '2சி' பதி­வுக் கட்­டத்­தின்­கீழ் 40 இடங்­களை ஒதுக்க வேண்­டும்.

இந்த '2சி' பதி­வுக் கட்­டத்­தின்­கீழ், பள்­ளிக்கு அரு­கில் வசிப்­போருக்கு முன்­னு­ரிமை தரப்­படும்.

இந்­தக் கட்­டத்­தின்­கீழ் 2014ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சு ஆண்­டுக்கு 20 இடங்­களை ஒதுக்­கத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து போட்டி அதி­க­ரித்­து­விட்­ட­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

பள்­ளிக்கு ஒரு கிலோ­மீட்­டர் தொலை­வுக்­குள் வசிக்­கும் சிங்­கப்­பூர் பிள்­ளை­கள், கடந்த ஆண்டு '2சி' கட்­டத்­தின்­கீழ் பதிவு செய்­திருந்­த­போது குலுக்­கல் முறை­யில் மாண­வர்­களைத் தேர்ந்­தெ­டுக்­கும் மூன்­றில் ஒரு பள்ளிக்குக் நிலை ஏற்­பட்­டது.

இதே பிரி­வில் 2014ல் நான்­கில் ஒரு பள்­ளி­யில் குலுக்­கல் நடந்­தது.

இந்­நி­லை­யில் அமைச்சு இவ்­வாண்டு 2'ஏ'(1), 2'ஏ'(2) இரண்­டை­யும் சேர்­க்­க­வுள்­ளது.

இதன்­படி, பெற்­றோர் அல்­லது சகோ­த­ரர்­கள் படித்த பள்­ளி­யில் பிள்­ளை­க­ளைப் பதிவு செய்­யும் அதே கட்­டத்­தின்­கீழ் முன்­னாள் மாண­வர் சங்­கத்­தில் உள்ள பெற்­றோர்­க­ளின் பிள்­ளை­க­ளுக்­கும் இடம் ஒதுக்­கப்­படும்.

பெற்­றோர்­க­ளுக்­குக் கல்வி அமைச்சு முடி­வு­க­ளைக் குறுந்­தகவல் வாயி­லா­கத் தெரி­விக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!