உயர்நிலைப் பள்ளிகளில் முழுமையான ஆதரவு

முக­மது ஏரோன் இர்­வா­னுக்கு சக்­கர நாற்­கா­லி­யின் உத­வி­யு­டன்­தான் நட­மாட முடி­யும்.

நான்கு வய­தில் அரி­ய­வகை தசை வலு­வி­ழப்பு நோய்க்கு ஆளான இவர் தொடக்­க­நிலை ஐந்­தாம் வகுப்­பில் இருந்தே செயற்­கைச் சுவா­சக் கரு­வி­யை­யும் பயன்­ப­டுத்­து­கி­றார்.

உயர்­நி­லைப் பள்ளி வாழ்க்கை எப்­படி இருக்­குமோ என்று கவ­லைப்­பட்ட இவ­ருக்கு பள்ளி ஆசி­ரி­யர்­களும் சக மாண­வர்­களும் அதை மகிழ்ச்­சி­க­ர­மான ஒன்­றாக ஆக்­கி­ய­தா­கக் கூறு­கி­றார் ஏரோன்.

புக்­கிட் பாஞ்­சாங்­கில் உள்ள ஸெங்­குவா உயர்­நி­லைப் பள்­ளி­யில் சென்ற ஆண்டு சாதா­ரண நிலைத் தேர்வு எழு­தித் தேர்ச்சி பெற்ற இவர், கல்வி அமைச்­சின் வழக்­க­மான பள்­ளி­களில் பயின்ற மித­மான சிறப்­புத் தேவை­யு­டைய 27,000 மாண­வர்­களில் ஒரு­வர்.

சக்­கர நாற்­கா­லி­யில் நட­மாட்­டத்தை எளி­தாக்­கும் புறச்­சூ­ழல்­கள், உய­ரத்தை மாற்­றி­ய­மைக்­கூ­டிய மேசை­கள் எனப் பள்ளி நிர்­வா­கம் பல வச­தி­க­ளைச் செய்­து­தந்­தா­லும் ஆசி­ரி­யர்­களும் நண்­பர்­களும் தனக்கு மிகப் பெரிய ஊக்­க­ம­ளித்­த­தாக ஏரோன் கூறு­கி­றார்.

இயோ சூ காங் உயர்­நி­லைப் பள்­ளி­யில் பயி­லும் ஃபிடெல் வெங் 'ஆட்­டி­சம்' எனும் மதி­யி­றுக்க நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்.

இவ­ரது தாயார் தாதி­யா­க­வும் தந்தை கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­லும் பணி­பு­ரி­கின்­ற­னர்.

உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­த­வும் சக மாண­வர்­க­ளு­டன் பழ­க­வும் பள்­ளி­யின் ஆசி­ரி­யர்­கள் ஃபிடெலுக்கு வலு­வான ஆத­ர­வைத் தரு­வ­து­டன் வீட்­டில் சிறு­வ­னைக் கையா­ளும் வழி­மு­றை­கள் குறித்­தும் ஆலோ­ச­னை­கள் தரு­வ­தாக அவ­னது தாயார் குறிப்­பிட்­டார்.

நண்­பர்­கள் தன்னை ஏற்­றுக்­கொண்டு ஆத­ரவு தரு­வது குறித்து ஃபிடெல் மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்கு சக மாண­வர்­கள் ஆத­ரவு வழங்­கும் திட்­டங்­க­ளைக் கல்வி அமைச்சு பள்­ளி­களில் நடை­முறைப்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ரின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தி­லும் அவர்­களை ஊக்­கப்­ப­டுத்தி நம்­பிக்கை அளிப்­ப­தி­லும் சக மாண­வர்­களை ஈடு­ப­டுத்­து­வது இதன் நோக்­கம்.

 

பெற்­றோ­ரின் பங்கு

 

இவ்­வே­ளை­யில் சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­க­ளின் பள்ளி வாழ்க்கை சிர­ம­மின்­றிச் செல்­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு பெற்­றோ­ருக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் இடை­யி­லான தொடர்பு முக்­கி­யப் பங்கு வகிப்­ப­தாக சார்­பு­நி­லைக் கல்­வி­யா­ளர்­களும் பள்ளி முதல்­வர்­களும் தெரி­வித்­துள்­ள­னர்.

பெற்­றோர்-ஆசி­ரி­யர் சந்­திப்­பில் மட்­டு­மின்றி பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­க­ளின் தேவை­கள் குறித்து பள்­ளிக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வதை வழக்­க­மாக்­கிக்­கொள்ள அவர்­கள் ஊக்­கு­வித்­த­னர். ஆசி­ரி­யர்­க­ளின் வச­திக்­கேற்ப குறுஞ்­செய்தி, தொலை­பேசி அழைப்பு, மின்­னஞ்­சல் போன்­ற­வற்­றின் மூலம் அவர்­கள் தொடர்­பு­கொள்­ள­லாம்.

அதே­நே­ரத்­தில் பள்­ளி­கள் தங்­கள் பிள்­ளை­கள் சிறப்­பா­கக் கற்­றுக்­கொள்­வ­தில் பங்­கு­வ­கிக்க விரும்­பு­கின்­றன என்ற நம்­பிக்கை பெற்­றோர்க்கு வேண்­டும் என்­கி­றார் இயோ சூ காங் உயர்­நி­லைப் பள்­ளி­யில் சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்­கான பிரி­வின் தலை­வர் திரு­வாட்டி கார்­மெ­லியா டிரெ­ஷியா அரி­யோலா.

பாடம் சார்ந்த, சாராத துறை­களில் தங்­கள் பிள்­ளை­க­ளின் திறன்­கள் குறித்­தும் பெற்­றோர் பள்­ளி­யு­டன் பகிர்ந்­து­கொள்ள வேண்­டும் என்று ஸெங்­குவா உயர்­நி­லைப் பள்­ளி­யின் முதல்­வர் இங் ஹாக் சூன் பரிந்­து­ரைத்­தார்.

பார்­வைத் திறன் குன்­றிய தனது மகள் பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் பள்ளி மாண­வி­யாக இருந்­த­போது ஆசி­ரி­யர்­க­ளு­டன் தொடர்பு ­கொள்­வ­தற்­கான குறிப்­பேடு இருந்­த­தை­யும் தான் அந்­தப் பள்­ளி­யில் தொண்­டூ­ழி­யம் செய்­த­தை­யும் நினைவுகூர்ந்த திருவாட்டி லீ சியூ சோ, பெற்றோர்-ஆசி­ரி­யர் தொடர்­புக்­கான சிறந்த வழி­கள் இவை என்று குறிப்­பிட்­டார்.

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு உதவும் வழிமுறைகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!