குரங்கம்மைப் பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்கும் சிங்கப்பூர் தேசிய பொதுச் சுகாதார ஆய்வுக்கூடம்

சிங்­கப்­பூ­ரில் குரங்­கம்­மைப் பர­வல் ஏற்­பட்­டால் அதை எதிர்­கொள்ள தேசிய பொதுச் சுகா­தார ஆய்­வுக்­கூ­டம் தயா­ராக இருப்­ப­தாக அதன் இயக்­கு­ந­ரான துணைப் பேரா­சி­ரி­யர் ரேமண்ட் லின் உறுதி அளித்­துள்­ளார்.

தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின்கீழ் இந்த ஆய்­வுக்­கூ­டம் செயல்­ப­டு­கிறது.

குரங்­கம்மை நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களை அடை­யா­ளம் காண பிசி­ஆர் பரி­சோ­தனை முறை­களை ஆய்­வுக்­கூ­டம் தயார்­நிலை யில் வைத்­துள்­ள­தாக மூத்த மருத்­து­வத் தொழில்­நுட்ப நிபு­ணர் நெட்­ட­லின் டாங் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் இரண்டு ஆண்­டு­ க­ளுக்கு முன்பு முதல்­மு­றை­யாக ஒரு­வ­ருக்­குக் குரங்­கம்மை பாதிப்பு ஏற்­பட்­டதை ஆய்­வுக்­கூ­டம் பரி­சோ­தனை மூலம் அடை­யா­ளம் கண்­டது.

"எனது கருத்­தின்­படி குரங்­கம்மை அபா­ய­க­ர­மான நோயல்ல. ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய சின்­னம்மை போல குரங்­கம்மை உரு­வெ­டுத்­தா­லும் அதை எதிர்­கொள்ள நாங்­கள் தயா­ராக இருக்­கி­றோம். ஆனால் அத்­த­கைய நிலை ஏற்­

ப­டக்­கூ­டாது என வேண்­டிக்­கொள்­கி­றோம்," என்று துணைப் பேரா­சி­ரி­யர் லின் கூறி­னார்.

தேசிய பொதுச் சுகா­தார ஆய்­வுக்­கூ­டத்­துக்கு இரண்டு முக்­கிய பொறுப்­பு­கள் உள்­ளன.

சமூக அள­வில் பாதிப்பை ஏற்­

ப­டுத்தி வரும் நோய்­க­ளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதைப் பற்றி தெரிந்­து­கொள்­வது அதில் ஒன்­றா­கும்.

இதன்­மூ­லம் நிலைமை மோச­

ம­டைந்­தாலோ அல்­லது கிரு­மி­வகை மாறி­னாலோ முன்­கூட்­டியே

எச்­ச­ரிக்கை விடுக்­க­லாம் என்றும் அவ்வாறு செய்தால் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்கு அது உதவும் என்றும் துணைப் பேராசிரியர் லின் கூறினார்.

ஆய்வுக்கூடத்தின் ஊழியர்கள் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம், வாரத்துக்கு ஐந்து நாள்கள் கிருமிவகைகளை ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!