நோயும் நிர்கதியும் கற்றுத் தந்த பாடங்கள்

தன் வாழ்க்­கை­யின் ஒரு கட்­டத்­தில் உயிர்­பி­ழைக்­கும் சாத்­தி­யம் 30% மட்­டுமே என்று மருத்­து­வர்­கள் நிஷா­னி­டம் கூறி­யி­ருந்­த­னர்.நிஷா­னின் கல்­லீ­ர­லில் இருந்த கட்டி வெடித்து உட­லெங்­கும் பர­வி­யது. அறுவை சிகிச்­சைக்கு நிஷான் செல்­வ­தற்கு முன்­னர் உயிர்­வா­ழும் வாய்ப்பு குறித்து மருத்­து­வர்­கள் இவ்வாறு அவ­ரைத் தயார்­ப­டுத்­தி­னர்.

ஆனால் உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள், தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் சவால்­கள் என அனைத்­தை­யும் இன்று தாண்டி வந்­துள்­ளார் நிஷான்.

நிதி நிர்­வா­கம் தொடர்­பில் உதவி தேடு­வோ­ருக்­கும் ஆத­ர­வுக்­க­ரம் நீட்டி வரு­கி­றார். சொத்து ஆலோ­ச­க­ரா­கப் பணி­புரியும் நிஷான் குருப், 29, தன் இலக்­கு­களை அடை­வ­தற்­குப் போது­மான ஆத­ர­வின்றி ஒரு காலத்­தில் தள்­ளா­டி­ய­வர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கணக்­கி­யல், நிதித் துறை­யில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்­டி­ருந்த நிஷான், ஒரு­நாள் உறங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென உட­லில் அதிக வலியை உணர்ந்­தார். நடக்க முடி­யா­மல் நண்­பர் ஒரு­வரை உதவிக்கு அழைத்­தார். அந்த நண்­ப­ரு­டன் மற்ற சில நண்­பர்­களும் உடனே நிஷானை மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­னர்.

சாதா­ரண வலி­ என நினைத்த மருத்­து­வர்­கள், நிஷானை வீட்­டுக்கு அனுப்­ப­ இ­ருந்த சம­யத்­தில் நிஷான் ரத்த வாந்­தி­ எ­டுத்­தார். அதன் பின்­னரே நிஷா­னுக்கு 'கார்­சி­னோமா' என்­னும் புற்­று­நோய் இருப்­பது பரி­சோ­தனை மூலம் உறுதியானது.

சிங்­கப்­பூர் திரும்­பிய பிறகு குண­மடை­வதற்­காக சில மாதங்­கள் வீட்­டி­லேயே இருந்­தார் நிஷான்.

சொந்தக் காலில் நின்று சாதிக்க வேண்டும் என்ற வெறி அவ­ருள் எழுந்­த­போது, குடும்­பத்­தாரை விட்­டுப் பிரிந்து வேறொரு வீட்­டில் தனி­யே வசிக்கத் தொடங்­கி­னார். வீட்டு வாட­கை, மாதாந்­தி­ரக் கட்­ட­ணங்­க­ளைச் சமாளிக்க பகு­தி ­நேர வேலை­களில் ஈடு­பட்­டார்.

பகு­தி­நேர வேலை­களில் ஈட்­டிய பணத்தின் ஒரு பகுதியை பங்கு முத­லீ­டு செய்­தார். அதன் மூலம் பல­ன­டைந்த நிஷான், முத­லீடு செய்­வது எப்­படி என்­பது தொடர்­பில் நன்கு ஆராய்ந்­தார்.

இத்­தா­லிய வர்த்­தக சபை­யில் வணிக மேம்­பாட்டு நிர்­வா­கி­யாக முதல் முழு­நேர பணியை மேற்­கொண்ட நிஷான், அங்கு இரு­த­ரப்பு வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­ட­து­டன் இத்­தா­லி­யர்­க­ளோடு இணைந்து சந்­திப்­புக் கூட்­டங்­க­ளி­லும் கலந்­து­கொண்டு பல நிறு­வ­னங்­க­ளின் வரத்­த­கங்­களை ஆராய்ந்­தார். கெப்­பல் நிறு­வ­னத்­தி­லும் அவர் நிதி நிர்­வா­கி­யா­க சுமார் ஒன்­றரை ஆண்டு­களுக்­குப் பணி­பு­ரிந்­த­போது தின­மும் வெவ்வெறு சவால்­க­ளைச் சமா­ளிக்­கும் திறனை வளர்த்­துக்­கொண்­டார்.

அத்­தி­யா­வ­சியத் தேவை­களை மட்­டும் நிறை­வு­செய்­வ­தால் சுக­மாக வாழ்­வது கடினம் என்று உணர்ந்த அவர், ஒவ்­வொரு­வரும் தங்­க­ளது இலக்­கு­களை அடை­வதற்கு நிதித் திட்­ட­மி­டு­த­லில் மும்­மு­ர­மாக இறங்க வேண்­டும் என்று கூறுகிறார்.

"ஆனால், இளை­யர்­கள் இது­போன்ற திட்­டத்­தின் முக்­கி­யத்­து­வத்தை அறி­யா­மல் அதைத் தள்­ளிப்­போ­டு­கிறார்­கள். அவர்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும்," என்று தெரிவித்த நிஷான், தமது நிதி நிர்­வாக அனு­பவத்­தைக் கொண்டு நிதித் திட்­டங்­களை ஆலோ­ச­னை­யாக வழங்கி வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!