நிதி ஆலோசகர், பரதக் கலைஞர்

பர­தக் ­க­லை­யில் தேர்ந்த கல்­பனா சிவன், சாதா­ரண அலு­வ­லக வேலை­யில் இருக்க விரும்­ப­வில்லை. சமூ­க­வி­யல் துறை­யில் பட்­டம்­பெற்ற அவர், மக்­க­ளு­டன் உரையாடி அவர்­க­ளது வாழ்க்­கை­யில் ஒரு மாற்றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென முடி­வெ­டுத்­தார்.

கல்­ப­னா­வின் தந்தை கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போது அங்கு தங்­கு­வ­தற்­கும் சிகிச்சை பெறு­வ­தற்­கும் செலுத்­திய கட்­ட­ணம் ஆயி­ரக்­க­ணக்­கா­னது.

மருத்­து­வக் காப்­பு­று­தித் திட்­டம் இல்­லாததால், தன் தந்­தை அவரது சேமிப்பிலிருந்து மருத்துவக் கட்டணத்தைக் கட்ட வேண்­டி­யி­ருந்­தது.

நிதித் திட்­ட­மி­டு­த­லின் முக்­கி­யத்­துவத்தை அந்­தக் கசப்­பான அனு­ப­வம் வழி­யாக உணர்ந்­தார் கல்­பனா.

சமூ­கச் சேவைத் துறை­யில் ஆர்­வம் இருந்­தா­லும் அத்­து­றை­யில் வேலை செய்யத் தனி­யொரு சமூ­கப் பணிப் பட்டப்­படிப்பை முடிக்க வேண்­டும் என்று உணர்ந்­தார்.

எனவே, வேறு வழி­களில் மக்­களுக்கு உத­வ­லாமே என நினைத்­த­போது காப்­பு­றுதி நிறு­வ­னம் ஒன்­றின் மூலம் வாய்ப்பு அவர் கத­வைத் தட்­டி­யது.

நிறு­வ­னத்­தைச் சேர்ந்த மேலா­ளர் ஒரு­வரு­டன் உரை­யா­டி­ய­போது இத்­துறை­யில் சேர்ந்­தால் மக்­களின் வாழ்க்­கை­யில் நிச்­ச­யம் மாற்­றங்­களை ஏற்படுத்த முடி­யும் எனக் கல்­பனா நம்பினார்.

கல்­ப­னா­வின் சேவையை நாடிய வாடிக்­கை­யா­ளர்­கள் பெரும்­பா­லா­னோர் அவ­ரின் நண்­பர்­களும் உற­வி­னர்­களும் ஆவர். தங்­க­ளு­டைய நிதித் திட்­டங்­களை கல்­பனா முறை­யாகச் செய்­வார் என்று நம்பி கல்­ப­னாவை அவர்­கள் அணு­கி­னர்.

இவ்­வாறு தன்னை நம்பி வரு­வோ­ருக்­குச் சிறந்த வகை­யில் நிதித் திட்டங்­களை வகுக்க வேண்­டும் எனத் தன் பணி­யில் கண்­ணும் கருத்து­மாக உள்ளார் கல்­பனா. நிதி ஆலோ­ச­க­ராக மட்­டும் சிறந்து விளங்­கா­மல் 2019ஆம் ஆண்­டில் ‘தில்­லானா’ என்­னும் வசந்­தம் ஒளி­வ­ழி­யின் நாட­கத்­தி­லும் நட­ன­ம­ணி­யாக, முன்னணி நடி­கை­யாக நடித்­தார்.

அதிக நாடக அனு­ப­வம் இல்­லை­யென்­றா­லும் தமக்கு விருப்­ப­மான பர­த­நாட்­டி­யக் கலை தொடர்­பான திற­மையை வெளிக்­கொ­ண­ரும் வகை­யில் அந்­நா­ட­கத்­தின் கதா­பாத்­திரத்­துக்கு கல்­பனா உயி­ரூட்­டினார்.

பல ஆண்­டு­க­ளாக பர­தம் பயின்ற கல்­பனா, தொடர்ந்து தனக்கு வாய்ப்­பு­கள் கிடைக்­கும்­போ­தெல்­லாம் நிகழ்ச்­சி­களில் நட­ன­மா­டி­யுள்­ளார்.

சிங்­கப்­பூரை பிர­தி­நிதித்து வெளி­நாடு ­க­ளி­லும் நட­னம் ஆடி­ உள்­ளார். பர­த­நாட்­டி­யம் கற்­றுக்­கொள்ள விரும்­பு­வோர், முன்பு பர­தம் பயின்று மீண்­டும் இப்­போது பயிற்சி பெற விரும்­பு­வோர் ஆகிய இரு தரப்­பி­ன­ருக்­கும் மூன்று பர­த­நாட்­டிய வகுப்­பு­களை ஆரம்­பித்­துள்­ளார் கல்­பனா.

தன் இரண்டு நண்­பர்­க­ளின் உந்­து­தலால் 2020ஆம் ஆண்­டில் உரு­வெடுத்த திட்­டம் இது.

இவ்­வாறு கலை வழி­யா­க­வும் தன் முழு­நே­ரப் பணி மூலமாக­வும் மற்­ற­வர்­க­ளின் வாழ்க்­கைக்கு மெரு­கூட்டி வரு­கி­றார் இளையர் கல்­பனா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!