விலங்குகள் கற்றுத்தந்த வாழ்க்கைப்பாடம்

கி. ஜனார்த்­த­னன்

ஒரு காலத்­தில் திரும்­பத் திரும்­பக் குற்­றம் புரிந்­து­வந்த நரேஷ்குமார் ரவிச்சந்திரன், ஐந்­தறிவு படைத்த உயிர்­கள் மீது தான் கொண்ட அன்­பால் திருந்தி இன்று புது மனி­த­னாக வாழ்­கி­றார். உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான குதி­ரைச் சவாரி சங்­கத்­தில் குதி­ரைப்­பாகனாக வேலை பார்க்­கும் நரேஷ், 31, தற்­போது சரி­யான வாழ்க்­கைப் பாதை­யில் செல்­வ­தைத் தான் உணர்­வ­தாகப் பகிர்ந்­து­கொண்­டார்.

குதி­ரைப் பிரி­யர்

மூன்­றரை ஆண்டு கால­மாக விலங்கு­க­ளு­டன் பணி­யாற்­றி­வ­ரும் நரேஷ், வாரத்­தின் ஆறு நாள்­களுக்கு உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான குதி­ரைச் சவாரி சங்­கத்­தி­லும் வாரம் இரு­முறை பகு­தி­நே­ரப் பரா­ம­ரிப்பு அதி­கா­ரி­யாக சிங்­கப்­பூர் விலங்குவதைத் தடுப்­புச் சங்­கத்திலும் பணியாற்றி வரு­கி­றார்.

தற்­போது அவ­ரது பரா­ம­ரிப்­பின்­கீழ் ஆறு குதி­ரை­கள் உள்­ளன.

"மென்மை, கம்­பீ­ரம் இரண்­டுமே குதி­ரை­க­ளி­டம் உள்ளன. சிறு வய­தில் பந்­த­யக் குதி­ரை­களை ரசித்த நான், விலங்­கு­க­ளின் மீது அலாதி பிரி­யம் கொண்­டேன்," என்று அவர் கூறி­னார். நரேஷ் தான் விரும்­பும் துறை­யில் கடு­மை­யாக உழைத்து தற்­போது நற்­பெ­ய­ரு­டன் வாழ்ந்து வந்­தா­லும் அவ­ரின் இள­மைப்­ப­ரு­வம் கற்­றுத்­தந்த பாடத்தை இன்­னும் மற­வா­மல் இருக்­கி­றார்.

இருண்ட காலம்

பெற்­றோ­ரின் மண­மு­றி­வுக்­குப்­பின் தன் தாயா­ரு­ட­னும் தம்பி, தங்­கை­யருடனும் வளர்ந்­தார் நரேஷ் குமார். தீய நண்­பர்­க­ளின் நட்பு கிடைத்­ததை அடுத்து குண்­டர் கும்­பல் ஒன்­றி­லும் சேர்ந்­தார்.

பதின்ம வய­தில் குடி­போதை­யில் வீட்­டுக்­குத் திரும்பி அடா­வ­டித்­தனம் செய்து தன் தாயாரை அவ­ம­தித்­தார். தனது 16வது வய­தில் போதைப்­பொ­ருள் உட்­கொள்­ளத் தொடங்­கிய நரேஷ், எந்த ஒரு வேலை­யி­லும் நிரந்தரமாக இல்­லாமல் சட்­ட­விரோதச் செயல்­கள் மூலம் கிடைத்த பணத்­தைத் தன் போதைப்­பொ­ருள் புழக்­கத்­திற்­கா­கப் பயன்­படுத்­திக்­கொண்­டார்.

நான்கு முறை சிறைவாசம்

நரேஷ் 2011, 2016, 2018 ஆண்­டு­களில் மொத்­தம் நான்கு முறை சிறைக்­குச் சென்­றார். அந்த கால­கட்­டத்­தில் தான் மீண்­டும் மீண்­டும் தவறு செய்ய நேர்ந்­த­தை நினை­வு­கூர்ந்­தார்.

"மற்­ற­வர்­கள் என்­னைத் தாழ்­வாக நடத்­தி­ய­போ­தெல்­லாம் நான் மன­மு­டைந்து போனேன். எனக்கு வேலை­யும் சரி­வர அமை­யா­த­தால் அந்­நே­ரத்­தில் தீய நண்­பர்­கள் மீண்­டும் என்னை நாடி வந்­த­போது நான் மீண்­டும் வழி­த­வ­றிச் செல்ல நேரிட்­டது," என்று அவர் கூறி­னார்.

முதன்­மு­த­லாகத் தான் வேலை செய்­யத் தொடங்­கிய இடத்­தில், பலர் தன்னை மதிக்­கா­த­து­டன் எப்­போ­தும் சந்­தே­கக் கண்­ணோடு தன்­னைப் பார்த்­த­தா­க­வும் நரேஷ் குறிப்­பிட்­டார். 2015ல் தொழில்நுட்பக் கல்­விக் கழ­கத்­தில் கட்­டட நிர்­வாகத் துறை­யில் சான்­றி­தழ் பெற்ற நரேஷ், கட்­டு­மான நிறு­வ­னம் ஒன்­றில் பணித்­திட்ட ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றி­னார். ஆனால் 2016ல் மீண்­டும் சிறை சென்­றார்.

சிறைக்­குப் பல­முறை சென்­ற­போ­தும் திருந்­தி­ய­தற்­கான உணர்வு தனக்கு ஏற்­ப­ட­வில்லை என்­றார் நரேஷ். மற்­ற கைதி­க­ளு­டன் சண்டை­போட்ட தரு­ணங்­க­ளைக் குறிப்­பிட்ட நரேஷ், தனது மரி­யாதை­யைக் காப்­பாற்­றிக்­கொள்ள வேண்­டும் என்று மட்­டுமே அப்போது தான் எண்­ணி­ய­தா­கக் கூறி­னார்.

முன்­ன­தாக காவல்­து­றை­யி­ன­ரைக் கண்­டாலே தான் நடுங்கியதா கக் கூறி­னார் நரேஷ்.

திருந்த வேண்டும் என்ற வெறி

இறு­தி­யில் நரேஷ், தன் போக்கை மாற்­றிக்­கொள்ள வேண்­டி­யி­ருந்­ததை உணர்ந்­தார்.

"நான் திருந்தி வாழ்­வது பிற­ருக்­காக அல்ல, எனக்­கா­கத்­தான் என்­பதை உணர்ந்­த­போது அந்த எண்­ணமே எனக்­குள் நிலைத்­து­விட்­டது," என்று அவர் கூறி­னார்.

இழிச்­சொற்­க­ளால் ஆவே­ச­மடைந்து உடனே பதி­லடி கொடுக்­க­வேண்­டும் என்­ப­தற்­காக மட்­டும் தன்னை மாற்­றிக்­கொள்­ளக்­கூ­டாது என்­பதை உணர்ந்­தார். அதற்­குப் பதி­லாக எத்­த­கைய மாற்­றங்­கள் தன் வாழ்­வில் தேவை, எவை நீண்­ட­கால நன்­மை­க­ளுக்கு வித்­தி­டும் என்­பதை நரேஷ் ஆராய்ந்­தார்.

விலங்கு ஆர்­வ­ல­ராக இருந்த நண்­பர் ஒரு­வ­ரின் மூலம் தானும் ஒரு விலங்கு விரும்பி என்­பதை நரேஷ் உணர்ந்து இறு­தி­யில் அந்­தக் குறிப்­பிட்ட துறை­யில் வேலை செய்ய முடி­வெ­டுத்­தார்.

'மஞ்­சள் நாடா' திட்­டத்­தின்­கீழ் பல்­வேறு வேலை­வாய்ப்­பு­கள் தன்­னைத் தேடி­வந்­த­போ­தும் விலங்கு­களு­டன் வேலை செய்­ய வேண்டும் என்ற தீர்­மா­னத்­து­டன் அது தொடர்­பான வேலை விண்­ணப்­பங்­களை அவர் அனுப்பினார்.

கைகொடுத்த சமுதாயம்

சிங்­கப்­பூர் விலங்­கு­வ­தைத் தடுப்­புச் சங்­கத்­தி­லும் தற்­போ­தைய வேலை இடத்­தி­லும் தான் பாகு­பாடு ஏதுமின்றி நடத்தப்படுவது ஆறுதலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். 'மஞ்­சள் நாடா' திட்­டத்­தின் ஆத­ர­வு­டன் தற்­போது விலங்கு மருத்­து­வத் தொழில்­நுட்­பத் துறை­யில் பட்­ட­யப் படிப்பையும் நரேஷ் மேற்­கொண்டு வரு­கி­றார்.

அத்­து­டன், தொழி­லி­யல் மற்­றும் சேவை­கள் கூட்­டு­ற­வுச் சங்­கம் (ISCOS) மூலம் இல­வ­ச­மாக வாக­ன­மோட்­டும் பயிற்­சி­களை மேற்­கொள்­ளும் வாய்ப்­பும் அவ­ருக்­குக் கிட்­டி­யது.

சிங்­கப்­பூர் போதைப்­பொ­ருள் தடுப்­புச் சங்­கத்­தின் மூலம் இல­வச மன­நல ஆலோ­சனையும் பெற்­றார் நரேஷ். இவ்­வாறு தனது நல­னுக்­கா­க­வும் பரா­ம­ரிப்­புக்­கா­க­வும் சமு­தா­யம் பெரும் பங்­கு வகித்து வருவதாக நரேஷ் சுட்­டி­னார்.

தன்னை 'அண்­ணன், தம்பி' என்று கூறி அழைத்த நண்­பர்­கள், தான் சிறை­யில் இருந்­த­போது வந்து பார்க்­கவே இல்லை.

தான் தவறு செய்­த­போ­தெல்­லாம் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தன்­னு­டைய குடும்­பத்­தார்­தான் என்­பதை நரேஷ் உணர்ந்­தார்.

'இந்த நண்­பர்­க­ளுக்­கா­கவா என் வாழ்க்­கை­யில் இத்­தனை தியா­கம் செய்­தேன்?' என்ற எண்­ணம் இவ­ரை இந்நாள்வரை வருத்­து­கிறது.

குதி­ரை­க­ளைப் பார்த்­துக்­கொள்­வ­தில் சிர­மங்­கள் இருக்­க­லாம். ஆனால் அதை விரும்­பிச் செய்­வ­தால் வேலை செய்­கி­றோம் என்ற அலுப்­பும் சலிப்­பும் தனக்கு ஏற்­ப­ட­வில்லை என்­றார் நரேஷ்.

இளையர்களுக்கு அறிவுரை

தங்­க­ளுக்கு விருப்­ப­மான வாழ்க்­கைத்­தொ­ழில் என்ன என்­பதை இளை­யர்­கள் நன்கு ஆராய வேண்­டும். அதன் பின்னர் எடுக்கும் முடி­வு, அவர்களின் வாழ்க்­கை­யில் சாத­க­மான ஒரு திருப்­பு­முனையாக அமையும் என்­றார் அவர்.

தீய பழக்­கங்­க­ளுக்கு அடிமை யாகித் தற்­கா­லிக இன்­பங்­களை நாடா­மல் மன­நல ஆலோ­சகர்­க­ளை­யும் வழி­காட்­டக்கூடிய பெரி­ய­வர்­களை­யும் அணு­கு­மாறும் அவர் அறிவுறுத்துகிறார்.

"வாழ்க்கை அழ­கா­னது. பலன் தராத எண்­ணங்­களால் அதைச் சிதைக்க வேண்­டாம்," என முகத்­தில் புன்­னகை மல­ரக் கூறி­னார் இளை­யர் நரேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!