உன்னதத் தொழில்நுட்பப் படைப்புகளுக்கு உயரிய விருது

மோன­லிசா

 

பயிற்றுவிப்பாளர்கள் உத­வி­யின்றி உடற்­ப­யிற்சி செய்­வ­தற்­கான கைப்­பே­சிச் செயலி, பயிர்­களில் என்ன குறை­பாடு உள்­ளது என்­ப­தைக் கண்­ட­றி­யும் கருவி ஆகிய படைப்பு­களை உரு­வாக்­கிய மாண­வர்­கள் உள்­பட பல்­வேறு துறை­களில் சிறந்து விளங்­கி­யோரை அங்­கீ­கரிக்க, தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் அண்­மை­யில் விரு­து­கள் வழங்­கி­யது.

பயிற்றுவிப்பாளர் தேவைப்­ப­டாத நிலை­யில், ஏழு வயது முதல் 70 வயது வரை­யிலானோர் உடற்­ப­யிற்­சி­களை முறை­யா­கச் செய்ய உத­வு­கிறது 'ஃபிட்சீ' (Fitsee) எனும் கைப்­பேசி­ச் செயலி.

இதனை தொழில்­நுட்­பக் கல்­விக் கழக (மத்­திய கல்­லூரி) மாண­வர்­க­ளான ஆர்­னெஷ் ராயன், 18, இஷா இலக்கி கன­க­சபை, 20, ஆகிய இரு­வ­ரும் நால்­வர் அடங்­கிய தங்­கள் குழு­வி­ன­ரு­டன் உரு­வாக்கி 'லீ குவான் இயூ தொழில்­நுட்ப விருது' பெற்­ற­னர்.

"கொவிட்-19 நோய்த்­தொற்று காலத்­தில் உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்­குச் செல்ல முடி­யாத சூழ­லில் சிலர் வீட்­டில் இருந்­த­வாறே உடற்­பயிற்சி செய்­து­வந்­த­னர். ஆனால் நாம் செய்­வது சரியா என்று அறி­யா­ம­லேயே அவர்­கள் யூடி­யூப் காணொ­ளி­கள் மூலம் உடற்­ப­யிற்சி­யில் ஈடு­பட்­ட­னர்.

"இவ்­வாறு சரி­யான கண்­காணிப்பு இல்­லா­மல் உடற்­ப­யிற்­சி­கள் செய்­யப்­ப­டும்­போது காயங்­கள், தசை இழுப்­பு­கள் உள்­ளிட்ட பாதிப்பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும். அத்­த­கைய பாதிப்­பு­க­ளைத் தடுக்­கவே இயக்­க­வி­யல் தொழில்­நுட்­பம் (Kinematic Technology) என்ற ஒன்­றைப் பயன்­ப­டுத்தி இந்­தச் செய­லியை உரு­வாக்­கி­னோம்," என்று ஆர்­னெஷ் ராயன் விளக்­கி­னார்.

"இந்தச் செய­லி­யைப் பயன்­படுத்­து­வ­தற்­குக் கைப்­பேசி இருந்­தால் போதும். உடற்­ப­யிற்சி செய்ய விரும்பு­ப­வர், தன் உரு­வம் முழு­வ­து­மாக தெரி­யும் வகை­யில் ஒரு குறிப்­பிட்ட தூரத்­தில் தன் கைப்­பே­சி­யைப் பொருத்­தி­விட்டு அதன் முன்­னால் உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்­ள­லாம். செயற்கை நுண்­ண­றி­வின் உத­வி­யு­டன் தவ­றா­கச் செய்­யப்­படும் உடற்­ப­யிற்­சி­யைச் செயலி சுட்­டிக்­காட்­டி­வி­டும்," என்று இஷா இலக்கி கன­க­சபை கூறி­னார்.

செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­ப­வ­ரின் உணவு, ஊட்­டச்­சத்து தொடர்­பா­கக் கண்­கா­ணித்து அதற்­குத் தகுந்­த­வாறு அறி­வுரை வழங்­கும் அம்­சத்­தை­யும் எதிர்­கா­லத்­தில் இந்­தச் செய­லி­யில் இணைத்து மேம்­படுத்­தத் தாங்­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் குழு­வி­னர் கூறி­னர்.

'லீ குவான் இயூ தொழில்­நுட்ப விருது' பெற்ற மற்­றொரு குழு, பயிர்­க­ளின் குறை­பாட்­டைக் கண்­டறி­யும் கருவி ஒன்றை உரு­வாக்கி­ இருந்­த­னர்.

குழு­வில் இடம்­பெற்ற தொழில்­நுட்­பக் கல்­விக் கழக (கிழக்கு கல்­லூரி) மாண­வரான 17 வயது பிர­வின் நாகேந்­தி­ரன், கரு­வி­யின் நோக்­கம் குறித்து விளக்­கி­னார்.

"தொடர் ஆய்­வு­க­ளின் மூலம் பயிர்­க­ளின் குறை­பாட்டை ஆரம்­ப­கட்­டத்­தி­லேயே கண்­ட­றிந்­தால்­தான், தகுந்த நட­வ­டிக்­கை­களை உடனே மேற்­கொண்டு பயிர்­க­ளைக் காப்­பாற்ற முடி­யும்," என்­றார்.

கரு­வி­யைப் பயிர்­கள் உள்ள இடத்­தில் இட்டு அதைக் கைப்­பேசி அல்­லது 'டேப்லெட்' (Tablet) சாத­னங்­க­ளு­டன் இணைத்­துக்­கொள்­ள­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"இயந்­தி­ரக் கற்­றல் (machine learning) என்­னும் செயற்கை நுண்­ண­றிவு நுணுக்­கம் கொண்டு இந்­தக் கருவி, பயிர்­க­ளின் நிலையை ஆராய்ந்து குறை­பா­டு­கள் இருந்­தால் அவற்­றைத் தொடக்­கத்­தி­லேயே அடை­யா­ளங்­கண்டு இணைக்­கப்­பட்ட சாத­னங்­க­ளின் வழி தெரி­வித்­து­வி­டும்," என்று கூறி­னார்.

மொத்­தம் 408 மாண­வர்­க­ளைச் சிறப்­பித்த இவ்­வி­ருது விழா, கடந்த மாதம் 26ஆம் தேதி­யன்று தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தின் மத்­திய கல்­லூரி வளா­கத்­தில் நடை­பெற்­றது.

இவர்­களில் லீ குவான் இயூ விரு­தினை 'மாண­வர்/பயிற்­சி­யர்', 'இணைப்­பா­டம்', 'தொழில்­நுட்­பம்' ஆகிய பிரி­வு­க­ளின்­கீழ் 49 பேர் பெற்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!