காமன்வெல்த் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்க ருவாண்டா செல்கிறார் பிரதமர் லீ

பிர­த­மர் லீ சியன் லூங் இன்று முதல் வரும் திங்­கட்­கி­ழமை வரை ஆப்­பி­ரிக்க நாடான ருவாண்­டா­வின் தலை­ந­கர் கிகா­லிக்கு பணி­நி­மித்­த­மாக செல்­கி­றார். பிர­த­மர் அலு­வ­ல­கம் இதை நேற்று தெரி­வித்­தது.

இன்று தொடங்கி நாளை மறு­தி­னம் வரை அங்கு நடை­பெ­றும் காமன்­வெல்த் அர­சாங்­கத் தலை­வர்­கள் சந்­திப்­பில் பிர­த­மர் லீ கலந்து­கொள்­வார்.

பின்­னர், அதி­கா­ரத்­துவ இரு­நாட்­டுத் தலை­வர்­களின் சந்­திப்­பில் பங்­கேற்க ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும் திங்­கட்­கிழமை­யும் அவர் கிகா­லி­யில் இருப்­பார். ருவாண்டா அதி­பர் பால் ககா­மேவை பிர­த­மர் லீ சந்திப்­பார்.

பொது­வாக ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை காமன்­வெல்த் அர­சாங்கத் தலை­வர்­கள் சந்­திப்பு நடை­பெ­றும்.

ஆனால் இம்­முறை நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இச்­சந்­திப்பு நடை­பெ­று­கிறது. கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக அது இரு­முறை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. கடை­சி­யாக 2018ல் பிரிட்­ட­னில் நடை­பெற்ற இந்­தச் சந்­திப்­பி­லும் பிர­த­மர் லீ கலந்­து­கொண்­டார்.

பிற காமன்­வெல்த் நாட்­டுத் தலை­வர்­க­ளை­யும் பிர­த­மர் லீ சந்­திப்­பார் என்று பிர­த­மர் அலு­வ­லகம் தெரி­வித்­தது.

இம்­முறை நடை­பெ­றும் சந்­திப்­பில் 54 நாடு­க­ளைச் சேர்ந்த தலை­வர்­கள் பங்­கேற்­க­வுள்­ள­னர். அர­சாங்க அதி­கா­ரி­கள், தொழி­ல­தி­பர்­கள் உட்­பட 5,000க்கும் அதி­க­மா­னோர் இதில் கலந்­து­கொள்­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிர­த­மர் லீயு­டன் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னும் பிர­த­மர் அலு­வ­ல­கம், வெளி­யு­றவு அமைச்சு அதி­கா­ரி­களும் ருவாண்­டா­வுக்­குச் செல்­கின்­ற­னர்.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான திரு லாரன்ஸ் வோங், இன்று முதல் வரும் செவ்­வாய்க்­கி­ழமை வரை தற்­கா­லி­கப் பிர­த­ம­ராக இருப்­பார் என்று பிரதமர் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!