புதிய கொவிட்-19 அலை: உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொள்ள 10 வழிகள்

சிங்­கப்­பூ­ரில் தற்­போது கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டை­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. புதிய கொவிட்-19 அலை ஏற்­பட்­டுள்­ள­தால் இந்த எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­க­ப்படு­கிறது.

தற்­போது பர­வி­வ­ரும் பிஏ.4 மற்றும் பிஏ.5 ஓமிக்­ரான் கிரு­மி­

வ­கை­கள் முதன்­மு­த­லாக இவ்­வாண்டு தொடக்­கத்­தில் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் தலை­தூக்­கி­ன. தற்­போது இந்­தக் கிரு­மி­வ­கை­கள் உல­கெங்­கும் மிக விரை­வா­கப் பரவி வரு­கின்­றன.

இந்த கிரு­மி­வ­கை­கள் உரு­மா­றும் தன்மை கொண்­டவை என்­றும் மிக எளி­தில் பர­வக்­கூ­டி­ய­தாக உள்­ளன என்­றும் மருத்­துவ

நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­த­னர். மேலும், அவை நோய் எதிர்ப்­பு­சக்­தி­யை­யும் மீறி பாதிப்பு ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை என்­றும் தெர­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வாரம் சமூக அள­வில் ஏற்­பட்ட கிரு­மிப் பர­வ­லில் 45 விழுக்­காட்­டி­ன­ருக்கு பிஏ.4 மற்­றும் பிஏ.5 கிரு­மி­வ­கை­க­ளால் பாதிப்பு ஏற்­பட்­டது. அதற்கு முந்­திய வாரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 30 விழுக்­காடு அதி­கம்.

இதற்கு முன்பு பர­விய ஓமிக்­ரான் கிரு­மி­வ­கை­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோருக்கும் இந்த இரண்டு கிரு­மி­வ­கை­களும் எளி­தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இருப்­பி­னும், இதற்கு முன் பர­விய ஓமிக்­ரான் கிரு­மி­வ­கை­க­ளை­விட இவை கடு­மை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தில்லை என்று தற்­

போ­தைய தர­வு­கள் காட்­டு­கின்­றன. இப்­பு­திய கிரு­மி­வ­கை­களை எதிர்­கொள்ள ஃபைசர், மொடர்னா, நோவா­வேக்ஸ் ஆகிய தடுப்­பூ­சி­களை உற்­பத்தி செய்யும் நிறு­

வ­னங்­கள் புதிய தடுப்­பூ­சி­க­ளைச் சோத­னை­யிட்டு வரு­கின்­றன.

பிஏ.4 மற்­றும் பிஏ.5 கிரு­மி­

வ­கை­க­ளி­ட­மி­ருந்து நம்­மை­யும் நமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் பாது­காத்­துக்­கொள்ள பத்து வழி­மு­றை­களை மருத்­துவ நிபு­ணர்­கள் பட்­டி­ய­லிட்­டுள்­ள­னர்.

1. முகக்­க­வ­சம் அணி­தல்

வெளிப்­பு­றங்­களில் இல்­லாது அலு­வ­ல­கம், பள்ளி, மின்­தூக்கி, பேருந்து, எம்­ஆர்டி ரயில் போன்ற இடங்­களில் இருக்­கும்­போது முகக்­க­வ­சம் அணிந்­து­கொள்ள வேண்­டும்.

2. நோய்­வாய்ப்­பட்­டால் பிற­ரு­டன் நேருக்கு நேர் தொடர்­பு­

கொள்­வ­தைத் தவிர்க்கவும்

உடல்­ந­லம் பாதிப்­பட்­டால் முன்­னெச்சரிக்கை நட­வ­டிக்­கை­யாக மற்­ற­வர்­களை நேருக்கு நேர் சந்­திப்­பதை, அவர்­க­ளு­டன் தொடர்­பு­ கொள்­வதைத் தவிர்த்­திட வேண்­டும். கொவிட்-19 பரி­சோ­தனை செய்து கிரு­மித்­தொற்று ஏற்பட வில்லை என்று முடி­வு­கள் தெரி­வித்­தா­லும் மற்­ற­வர்­கள் அரு­கில் செல்­லா­மல் இருப்­பது நல்­லது.

3. சுத்­தம் சுகம் தரும்

கைகளை அடிக்­கடி சவர்க்­

கா­ரம் பயன்­ப­டுத்­திக் கழுவ வேண்­டும். அத்­து­டன் சுத்­த­மாக இருக்க வேண்­டும்.

4. ஏஆர்டி கரு­வி­க­ளைக் கொண்டு சுயப் பரி­சோ­தனை செய்ய

வேண்­டும்

ஏண்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை (ஏஆர்டி) கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்தி அடிக்­கடி சுயப் பரி­சோ­தனை செய்­து­கொள்­வது

நல்­லது. குறிப்­பாக, உடல்­ந­ல­ம்

இல்­லா­த­போது அல்­லது எளி­தில் பாதிப்படை­வோ­ரைச் சந்­திப்­ப­தற்கு முன்பு அவ்­வாறு செய்­து­கொள்ள பொது­மக்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். இம்­மா­தம் 18ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­போஸ்ட் மூலம் ஒவ்­வொரு வீட்­டுக்­கும் பத்து ஏஆர்டி கரு­வி­கள் விநி­யோ­கிக்­கப்­படும்.

5. கொவிட்-19 அறி­குறி இருந்­தால் தொடர்ந்து பரி­சோ­தனை செய்­து கொள்­ள­வும்

கொவிட்-19 அறி­கு­றி­கள் இருந்­தும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்று பரி­சோ­தனை முடி­வு­கள் காட்டினாலும் ஏஆர்டி கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்தி தொடர்ந்து சுயப் பரி­சோ­தனை செய்­துக்­கொள்­ள­வும்.

6. பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வும்

நீங்­கள் இன்­னும் பூஸ்­டர் எனப்­படும் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளா­த­வ­ராக இருந்­தால் அதை உட­ன­டி­யா­கப் போட்­டுக்­கொள்­ள­வும். குறிப்­பாக, 60

வய­தும் அதற்­கும் மேற்­பட்­டோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள

வேண்­டும்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு குண­ம­டைந்­த­வர்­களும் கூடு­தல் தடுப்­பூசி

போட்­டுக்­கொள்­ள­ வேண்­டும். கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு குறைந்­தது 28 நாள்­கள் கழித்து, கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள

வேண்­டும்.

7. இரண்­டா­வது பூஸ்­டர் தடுப்­பூ­சி­போட்­டுக்­கொள்ள வேண்­டும்

80 வய­தும் அதற்­கும் மேற்­பட்­டோர், முதி­யோர் இல்­லத்­தில் வசிப்­போர், 18 வய­தும் அதற்­கும் மேற்­பட்­டோ­ராக இருந்து மருத்­துவ ரீதி­யாக எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டி­ய­வர்­கள் ஆகி­யோர் முதலாவது கூடு­தல் ஊசி போட்டு ஏறத்­தாழ ஐந்து மாதங்­கள் கழித்து இரண்­டா­வது கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

8. உடல் ஆரோக்­கி­யத்­தைக்

கண்­கா­ணிக்­க­வும்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் வீட்­டை­விட்டு வெளி­யே­று­வ­தற்கு முன்பு சுயப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

9. உச்­ச­வே­ளை­களில் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம்

செய்­வ­தைத் தவிர்க்கவும்

காலை, மாலை உச்­ச­வே­ளை­

க­ளின்­போது பொதுப் போக்­கு­

வ­ரத்­தில் பய­ணி­கள் கூட்­டம் அதி­க­மாக இருக்­கும்.

அத்­த­கைய சூழல்­களில்

பய­ணம் செய்­வ­தைத் தவிர்க்க வேண்­டும். கூட்­டம் அதி­க­மில்லா நேரங்­களில் பய­ணம் செய்­வது நன்று.

10. பேருந்து, எம்­ஆர்டி ரயில்­களில் பய­ணம் செய்­யும்­போது பேசு­வ­தைத் தவிர்க்­க­வும்

பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­தும்­போது பேசு­வ­தைத் தவிர்க்க வேண்­டும். பேருந்து, ரயில்­கள் ஆகி­ய­வற்­றில் பய­ணம் செய்­ப­வர்­கள் பேசும்­போது அவர்­

க­ளி­ட­மி­ருந்து வெளி­யே­றும் சுவாச நீர்த்­து­ளி­கள் மூலம் கொவிட்-19 கிருமி பர­வக்­கூ­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!