எதிர்கால மாணவர்களுக்கு நல்வழிகாட்டியாக விரும்பும் கிரண்

மாதங்கி இளங்­கோ­வன்

 

வருங்­கா­லத்­தில் ஆசி­ரி­ய­ராக வேண்­டும் என்ற இலக்­கு கொண்­டுள்­ளார் பொதுச் சேவை ஆணை­யத்­தின் உப­கா­ரச் சம்­ப­ளத்தை நேற்று வென்ற கிரண் காசி­நா­தன், 19.

விக்­டோ­ரியா தொடக்­கக் ­கல்­லூ­ரி­யில் பயின்ற கிரண், மேல்நிலை தேர்­வில் 90 புள்­ளி­களைப் பெற்றார். அவருக்கு பு­வியி­யல் பாடத்­தில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்ள ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இடம் கிடைத்துள்ளது.

பொதுச் சேவைப் பிரிவின் உபகா­ரச் சம்­ப­ளத்தை நேற்று பெற்ற 66 மாண­வர்­களில் கிரணும் ஒருவர்.

மற்­ற­வர்க­ளுக்கு உத­வும் மனப்­பான்­மையைச் சிறு வய­தி­லி­ருந்தே பெற்றோரிடமிருந்து கற்ற கிரண், கல்­வி­க்கு அப்­பால் சமு­தா­யத்­திற்கு நன்மை பயக்­கும் முயற்­சி­க­ளி­லும் ஈடு­பட்டு வந்­தார்.

அவர் 'புக்ஸ் பியோண்ட் பார்­டர்ஸ்' எனும் ஏற்கெனவே பயன்­ ப­டுத்­தப்­பட்ட புத்­த­கங்­களைச் சேக­ரித்து குறைந்த விலைக்கு விற்­கும் அமைப்­போடு இணைந்து பள்­ளி­யில் புத்­தகத் திரட்டு ஒன்றை நண்­பர்­ க­ளோடு நடத்­தி­னார்.

இவர்கள் சுமார் 200 நூல்­களை சேக­ரித்து 'புக்ஸ் பியோண்ட் பார்­டர்ஸ்' சமூக நிறு­வ­னத்­தி­டம் தந்தனர். இந்த ­புத்­த­கங்­களை மீண்­டும் விற்­பனை செய்து, அதில் கிடைத்த தொகையை நேப்பாளத்தில் உள்ள மாண­வர்­க­ளின் கல்­விக்கு 'புக்ஸ் பியோண்ட் பார்­டர்ஸ்' நன்­கொ­டை­யாக அனுப்­பி­யது,

தொடக்­கக் ­கல்­லூ­ரி­யின் மாண­வர் சங்­கத்­தில் சேர்ந்த கிர­ணுக்கு பல்­வேறு பள்ளி நிகழ்ச்­சி­களை திட்­ட­மி­ட­வும் மாண­வர்­க­ளிடையே பிணைப்பை வலுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் ஏற்­பாடு செய்­ய­வாய்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

மாண­வர் சங்­கத்தை மேற்­பார்­வை­யி­ட்ட இவ­ரு­டைய ஆசி­ரி­யர்­கள் ஒவ்­வொரு சிறு விஷயத்துக்கும் மாண­வர்­க­ளை வழி­காட்­டா­மல் தாமாகச் செயல்படவிட்டனர். தோல்­வி ஏற்பட்டால் அதி­லி­ருந்து கற்­றுக்­கொள்ள வேண்­டிய பாடங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளித்தனர்.

ஆசி­ரி­யர்­கள் வழி­காட்­டிய விதம் ஊக்­கம் தந்ததால் தாமும் ஒரு சிறந்த ஆசி­ரி­ய­ராக வேண்­டும் என்று கிரண் தீர்­மா­னித்­தார்.

"மாண­வர்­கள் வெற்­றியை நோக்கிச் செல்­வது முக்­கி­யம் என்­றா­லும் தோல்­வியில் அவர்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருக்க விரும்­பு­கிறேன். தோல்­வி­யைக் கண்டு துவண்­டு­போ­கா­மல் அதி­லி­ருந்து மீண்டுவந்து கற்க வேண்­டிய பாடங்­களை வலி­யு­றுத்தி, அவர்­களின் உணர்வு­க­ளை­ என்­னோடு பகிர்ந்து­ கொள்ளவும் இடங்­கொ­டுப்­பேன்," என்­றார் கிரண்.

உயர்­நி­லைப்­பள்ளி முதல் சுற்­றுச்­சூ­ழல் நிலைத்­தன்­மை­யில் ஈடு­பாட்டைக் காட்­டி­வ­ருகிறார் கிரண்.

2019ஆம் ஆண்­டில் 'எஸ்­ஜி­ கிளைமெட் ரேலி' என்ற சுற்­றுச்­ சூ­ழல் கேடுகளுக்கான தீர்­வு­க­ளைப் பற்றி ­கலந்­து­ரை­யா­டும் நிகழ்ச்சியில் கிரண் பங்­கெ­டுத்­தார். அங்கு இயற்­கை­யை­ அன்­போடு அர­வ­ணைக்­கும் மற்றவர்களைக் கண்ட அவர், ஒவ்­வொருவரும் பூமியைக் காக்க பங்­க­ளிக்க வேண்­டும் என்­பதைக் கற்­றுக்­கொண்­டதாகக் கூறினார்.

தம் சமூக ஊட­கப் பக்­கங்­களில் சுற்­றுச்­சூ­ழலை பேணு­வது எப்­படி, நாம் அனைவரும் எவ்­வாறு பங்­காற்றலாம் என்­பதைப் பற்றி கிரண் பதி­வேற்றி வருகிறார். புவி­யி­யல் பாடம் படிக்கவுள்ள இவர், மனி­தர்­க­ளுக்­கும் சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் இடையிலான சிக்­கலான உறவு பற்றி கற்க ஆவ­லு­டன் உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!