தொழில்நுட்பக் கருவிகளால் காவல்துறையின் பாதுகாப்புப் படையினருக்கு 50% நேரம் மிச்சம்

‘செக்­காம்’ எனப்­படும் காவல்­துறை பாது­காப்புப் படை­யின் முதன்­மை­யான பணி சிங்­கப்­பூர் மற்றும் வெளி­ நாட்டு அர­சி­யல் பிர­மு­கர்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­வ­தா­கும்.

தேசிய தின அணி­வ­குப்பு, அர­சி­யல் தலை­வர்­க­ளின் சந்­திப்பு போன்ற நிகழ்ச்­சி­கள் நடை­பெ­றும் இடங்­களை இந்­தப் படை­யி­னர் முழு­மை­யாகச் சோத­னை­யி­டு­வர்.

சோத­னை­களில் ஈடு­ப­டும்­போது நிலத்­த­டிச் சுரங்­கங்­கள், கால்­வாய்­கள் போன்­ற­வற்­றில் நீண்­ட­நே­ரம் பணி­பு­ரிய வேண்­டி­யுள்­ள­தால் உட­லுக்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வாயுக்­களை அவர்­கள் சுவா­சிக்க வாய்ப்­புள்­ளது.

அத்துடன், உயர்­கட்­டட மாடி­

க­ளி­லும் குளி­ரூட்டி குழாய்­க­ளின் மேல்­பு­ற­ம் போன்ற பகுதிகளிலும் சோத­னை­யில் ஈடுபடும்போது அங்­கி­ருந்து கீழே விழும் அபா­ய­மும் உள்­ள­தென படை­யி­னர் கூறுகின்ற னர்.

இத்­த­கைய அசம்­பா­வி­தங்­க­ளைத் தடுக்­க ‘ரிமோட் கண்ட்­ரோல்’ வாக­னங்­கள், ‘டிரோன்­கள்’ ஆகிய தொழில்­நுட்­பக் கரு­வி­க­ளை காவல்­துறை பாது­காப்­புப் படை பயன்­ப­டுத்தி வரு­கிறது.

இந்தக் கருவிகள் பயன்படுத்தப் படும் விதம் கடந்த வியாழக்கிழமை தோ பாயோவில் உள்ள காவல் துறை பாதுகாப்புப் படை நிலை யத்தில் செய்து காண்பிக்கப்பட்டது.

காவ­லர்­கள் ஓரி­டத்­தைச் சோத­னை­யி­டு­வ­தற்கு முன், அங்கு ஏதே­னும் சந்­தே­கத்­திற்­கு­ரிய பொருள்­கள் இருக்­கின்­ற­னவா என இக்­

க­ரு­வி­களில் பொருத்­தப்­பட்டு இருக்­கும் புகைப்­ப­டக் கரு­வி­க­ளின் வழி கண்­ட­றி­வர்.

இத­னால், சோத­னைப் பணி­

க­ளின் நேரம் 50 விழுக்­காட்­டுக்­கும் மேல் குறைந்­துள்­ள­தாக இப்­

ப­டை­யின் தலைமை அதி­கா­ரி­யும் காவல் துறை துணை கண்­கா­ணிப்­பா­ள­ரு­மான வின்ஸ்­டன் யிம் கூறி­னார்.

‘ரிமோட் கண்ட்­ரோல்’ வாக­னங்­ க­ளின் பயன்­பாடு சற்று நிபு­ணத்­து­வம் வாய்ந்தது என்­ப­தால், அதன் திறன்­க­ளைத் தொடர்ந்து மேம்­

ப­டுத்த முயன்று வரு­வ­தாக பாது­காப்­புப் படை தெரி­வித்­துள்­ளது.

உள்­து­றைக் குழு­வின் அறி

வி­யல், தொழில்­நுட்ப அமைப்புடன் இணைந்து இது­போன்ற தொழில்­நுட்­பக் கரு­வி­க­ளின் வழி காவல் துறை பாதுகாப்புப் படையினரின் பணிச்­சு­மை­யைக் குறைக்க முனை ­வ­தோடு அவர்­க­ளது பாது­காப்­பை­யும் ‘செக்­காம்’ உறுதி செய்ய முய­ல்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!