அதிபரின் பாராட்டுகளைப் பெற்ற ஆசிரியர்கள்

பொன்­மணி உத­ய­கு­மார்

அதிகம் பேசப்படாத ஆனால் தேசத்தின் அன்றாட இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் ஊழியர்களை அங்கீகரிப்பதற்காக சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அறிமுகப்படுத்திய #செர்விங்எஸ்ஜி எனும் திட்டத்தின் நான்காம் அங்கத்தில் ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் ஒருவர் திருவாட்டி சங்கரி. கொவிட்-19 பெருந்­தொற்று நோய் முறி­ய­டிப்பு நட­வ­டிக்­கை­யின்­போது 6 வயது பாலர் பள்ளி மாண­வன் பள்­ளிக்குச் செல்ல முடி­யா­த­தா­லும் தன் நண்­பர்­க­ளைக் காண­மு­டி­யா­த­தா­லும் மன உளைச்­ச­லுக்கு ஆளாகி உல­கமே இருண்­டது போல் இயங்க முடி­யா­மல் தவித்­துக்­கொண்­டி­ருந்­தார். அவரை இந்­நி­லை­யி­லி­ருந்து மீட்­ப­தற்குப் பெற்­றோர் அவ­ரது ஆசி­ரி­ய­ரான 31 வயது திரு­வாட்டி சங்­க­ரி­யின் உத­வியை நாடி­யி­ருக்­கி­றார்­கள். கால் எலும்பு முறி­வி­னால் ஓய்­வில் இருந்த சங்­கரி, காணொளி தொடர்பு மூலம் மாண­வ­னி­டம் அன்­றா­டம் பேசி ஆறு­தல் கூறி­யிருக்­கி­றார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக என்ன பாதிப்பை எதிர்­நோக்­கி­னார்­கள் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் கேட்­ட­போது இந்­நி­கழ்வை சங்­கரி அவ­ரி­டம் பகிர்ந்­து­கொண்­டார். பிள்­ளை­க­ளின் உணர்­வு­க­ளுக்கு அதிக மதிப்­பை­யும் முக்­கி­யத்­து­வத்­தை­யும் அளிக்க வேண்­டும் என விரும்­பும் சங்­கரி, நெருக்­க­டி­நி­லை­யின்­போது பிள்­ளை­க­ளைக் கைவிட்­டு­வி­டக்­கூ­டாது எனும் கட­மை­யு­ணர்­வா­லும் அவர்­கள் மீது கொண்ட அக்­கறை

யாலும் அவர்­க­ளுக்கு எந்­த­வித பாதிப்­பும் நேர்ந்­து­வி­டக்­கூ­டாது என எண்ணி தன் உடல் வலி­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் பாடங்­களை நடத்த தொடர்ந்து ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார்.

இஸ்­தா­னா­வில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட மற்­றோர் ஆசி­ரி­ய­ரான 32 வயது திருவாட்டி ஷரோல் நித்யா எஸ். எம். தன­பதி, 13 ஆண்­டு­க­ளாக ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்து வரு­கி­றார். ஆசி­ரி­யர் பணி­யைத் தேர்ந்­தெ­டுத்­த­தற்கு மற்ற துறை­களைப் போல் இல்­லா­மல், பல்­வேறு பணி­க­ளைப் புரி­யும் பன்­மு­கத்­தன்­மையை ஆசி­ரி­யர் பணி கொண்­டி­ருப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். பிள்­ளை­க­ளுக்­குத் தான் பாடங்­கள் கற்­பிப்­பது ஒரு­பு­றம் இருக்க, தானும் பிள்­ளை­க­ளி­டத்­தில் பல­வற்றைக்

கற்­றுக்­கொள்ள முடி­கிறது என்­றும்

பகிர்ந்­து­கொண்­டார்.

கொவிட்-19 தொற்­றுக்­குப் பின்பு பள்ளி திரும்­பிய பிள்­ளை­கள் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்­கும் தங்­கள் ஆசி­ரி­யர்­களை அடை­யா­ளம் கண்­டு­கொள்ள முடி­யா­மல் போன­தாக அவர் கூறி­னார்.

இம்­மா­தி­ரி­யான சவால்­க­ளை நெருக்­க­டி­நி­லைக்­குப் பின்­பும் ஆசி­ரி­யர்­கள் எதிர்­நோக்­கி­யதை விவ­ரித்த அவர், எதிர்­கா­லத்­தில் கூடு­தல் தேவை­கள் இருக்­கும் பிள்­ளை­க­ளைப் பார்த்­துக்கொள்­ளும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு மேலும் ஆத­ரவு அளிக்­கப்­பட வேண்­டும் என விரும்­பு­கி­றார். அதோடு, இன்­னும் பலர் குழந்­தைப் பருவ ஆசி­ரி­யர்­கள் ஆக வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

அதி­ப­ரின் பாராட்­டு­க­ளைப் பெற்ற 32 ஆசி­ரி­யர்­களில் ஒரு­வ­ரான 28 வயது திருவாட்டி தஷ்கா அன் ஷாலினி ஹாட்ஜ் தற்­போது தற்­கா­லி­கத் தலை­மை­யா­சி­ரி­ய­ராக இருக்­கி­றார். கொவிட்-19 நெருக்கடி­ நி­லை­யின்­போது பாலர்­கள் வீட்­டில் அடைந்து கிடந்த நிலை­யில், தன் வகுப்­பில் நண்­பர்­க­ளு­டன் பிறந்­த­நாளை கொண்­டாட முடி­யா­மல் கவ­லைப்­பட்ட மாண­வ­னின் எதிர்­பார்ப்பு ஏமாற்­றத்­தில் முடிந்­து­விட கூடா­தென்­ப­தால் அவரை உற்­சா­கப்­ப­டுத்த, காணொளி தொடர்பு மூலம் வகுப்­பு­டன் சேர்ந்து பிறந்­த­நா­ளைக் கொண்­டாட தஷ்கா ஏற்­பாடு செய்­தார். ஆசி­ரி­ய­ராகத் தொடங்கி ஏழு ஆண்­டு­களில் தலைமை பொறுப்­புக்கு முன்­னேறி இருக்­கும் இவர் தலை­மைத்­து­வம் என்­பது அதி­கா­ரத்­து­வம் அல்ல, அது மற்­ற­வர்­க­ளுக்கு தாம் அளிக்­கும் சேவையைக் குறிக்­கிறது என நம்­பு­கி­றார். ஆசி­ரி­யர்­கள் மத்­தி­யில் பிள்­ளை­க­ளின் மேம்­பாட்­டுக்­கான குறிக்­கோள் இருக்க வேண்­டும் என்­றும் தலைமைப் பொறுப்­பில் உள்­ள­வர்­கள் அதற்கு வழி­வ­குக்க வேண்­டும் என்­றும் அவர் கருத்­து­ரைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!