தமிழ் கற்பித்தலில் புத்தாக்கம், சுவாரசியம்

அனு‌‌‌ஷா செல்­வ­மணி

பொன்­மணி உத­ய­கு­மார்

கைப்­பா­வை­க­ளின் மூல­மும் நிழற்­பட பொம்­ம­லாட்ட வடி­வி­லும் பிள்­ளை­க­ளுக்­குத் தமிழ்க் கதை­க­ளைக் கொண்டு சேர்த்­து­வ­ரும் 46 வயது திரு­மதி கேச­வன் பிந்து, நேற்று நடை­பெற்ற தாய்­மொழி கருத்­த­ரங்­களில் கௌர­விக்­கப்­பட்­டார். கடந்த 14 ஆண்டு களாக இத்­து­றை­யில் பணி­யாற்­றும் அவர், தொழில்­நுட்­பம் மூல­மா­கப் பிள்­ளை­க­ளின் தமிழ்க் கற்­ற­லுக்­குப் பங்­க­ளிக்க விரும்­பு­கி­றார்.

விருது பெற்ற மற்­று­மொரு தமி­ழா­சி­ரி­யர் திரு­மதி பத்­மா­வதி குப்­பு­சாமி, 52, இதற்கு முன்பு

ஆங்­கி­ல­மொழி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்­த­வர்.

தமிழ்த் துறை­யில் பணி­பு­ரிய வேண்­டு­மென்ற ஆர்வத்தில் இத்துறைக்கு மாறினார். 'மகிழ்­வூட்­டும் கற்­றல்' எனும் உத்­தியை பின்­பற்­றும் திரு­மதி பத்­மா­வதி, மாண­வர்­க­ளின் தமிழ் கற்­றலை வகுப்­ப­றை­யில் மட்­டும் நிறுத்­தா­மல் விளை­யாட்டு மூல­மாக வெளிச் சூழல்­களுக்கும் கொண்டு செல்கி­றார். எட்டு ஆண்­டு­க­ளா­கப் பாலர் பள்ளி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்­து­வ­ரும் 40 வயது திரு­மதி நஸ்­‌ரீன் பானு சூராலி ஹபீப் முக­மது, விருது பெற்ற தமி­ழா­சி­ரி­யர்­களில் மற்­றொ­ரு­வர்.

பிள்­ளை­க­ளுக்­குப் பாடல் மூலம் தமிழ்­மொழி கற்­பிக்­கும் இவர், பாடங்­க­ளுக்­கான வளங்­கள் ஏதும் கிடைக்­க­வில்லை என்­றால், தாமே மாண­வர்­க­ளுக்­குப் பாடல்­களும் புத்­த­கங்­களும் எழு­து­வார்.

தமிழ் மொழி கற்­றலை எவ்­வாறு பிள்­ளை­க­ளுக்கு சுவையான தாக்கலாம் என நேற்று பகிர்ந்­து­கொள்ளப்பட்டது. தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ்மொழி சேவைப்­பிரி­வின் துணை நூல­க­ரான குமாரி சைனப், கதை சொல்­லும் பகிர்­வ­ரங்­கத்­தில் மெய்­நி­கர் வழி­யாக பிரேமா கோவிந்த் எழு­திய 'மாது­ளம் யாருக்கு' என்ற புத்­த­கத்தை சுவா­ர­சி­ய­மான முறை­யில் படித்துக் காட்டினார். கதை வழி மொழி வளம், சிந்­தனை வளம், போன்­ற­வற்றை வளர்க்­க­ லாம் என்று இவர் கூறுகிறார்.

நடி­க­ரும் தொகுப்­பா­ள­ரு­மான திரு ஜெயகணேஷ்

ஈஸ்­வ­ரன் தன் இரு மகன்­க­ளுக்­கும் தாம் தமிழ் கற்றுத்தரும் வழிமுறைகளைக் காணொ­ளி­கள் மூலம் பங்­கேற்­

பா­ளர்­க­ளி­டம் காண்­பித்­தார்.

திரைப்­பட பாடல்­கள், படங்­கள், வச­னங்­கள் போன்­ற­வற்றை பயன்­ப­டுத்­தி­யும் பிள்­ளை­க­ளுக்கு தமிழ் மொழியைக் கற்­பிக்­க­லாம் என்­பதை அவர் சுட்டிகாட்­டி­னார்.

பாலர் பள்ளி தமி­ழா­சி­ரி­யர்­

க­ளுக்­கான பகிர்வு அரங்­கத்­தில் தேசிய கல்­விக் கழ­கத்­தின் மூத்த கற்­பித்­தல் ஆய்­வா­ள­ரான திரு­வாட்டி குண­வ­தி­யம்­மாள் பாலர் பள்­ளி­களில் எந்த வகை­யான நட­

வ­டிக்­கை­களை ஆசி­ரி­யர்­கள் ஏற்­பாடு செய்­ய­லாம் என்­பதை விளக்­கி­னார். தனக்­குள் இருக்­கும் குழந்­தையை பிள்­ளை­க­ளுக்கு பாடம் கற்­பிக்­கும் போது வெளிக்­கொ­ண­ரும்­படி அவர் ஆசி­ரி­யர்­களைக் கேட்டுக்கொண்­டார்.

செய்­தித்­தாள்­களில் வரும் செய்­தி­களைக் கொண்டு பிள்­ளை­க­ளி­டம் உரை­யா­டல்­களை வளர்க்­க­லாம் என்­றும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!