வெற்றிப் பயணத்திற்கு விடாமுயற்சியே துணை

பல வரு­டங்­க­ளுக்­கு­முன் வலைப்­பந்து விளை­யாட்­டா­ள­ராக இருந்த தன்­னு­டைய தாயா­ரைப் போலவே வலைப்­பந்­தில் சிறந்து விளங்­கு­கி­றார் சிஎச்­ஐஜே தோ பாயோ பள்­ளி­யில் உயர்­நிலை 2 பயி­லும் தான்யா.

"விறு­வி­றுப்­பான வலைப்­பந்து விளை­யாட்­டு­க­ளைப் பார்க்­கும்­போது எனக்­கும் அது­போல் ஆட வேண்­டும் என்ற உற்­சா­கம் பிறக்­கும். வலைப்­பந்து விளை­யா­டத் தொடங்­கிய பிறகு இந்த விளை­யாட்­டின் மீது எனக்கு ஆர்­வ­மும் மரி­யா­தை­யும் கூடி­விட்­டன," என்­கி­றார் தான்யா.

சில தினங்­க­ளுக்­கு­முன் ராஃபிள்ஸ் பெண்­கள் உயர்­நிலைப்­பள்­ளிக்­கும் சிஎச்­ஐஜே தோ பாயோ உயர்­நி­லைப் பள்­ளிக்­கும் நடந்த வலைப்­பந்து தெற்கு மண்டல 'சி' பிரிவு இறு­திச்­சுற்று போட்­டி­யில் தான்­யா­வும் அவ­ரது குழு­வும் விளை­யா­டி­னர். 31க்கு 23 எனும் புள்ளிக்கணக்கில் தான்­யா­வின் குழு வெற்றி வாகை சூடி­யது.

"அந்த காலத்­தில் பள்­ளி­யில் நான் விளை­யா­டிய அதே நிலை­யில், என் மகள் விளை­யா­டு­வ­தைக் காணும்­போது பெரு­மை­யாக இருக்­கிறது," என்று கூறி­னார் தான்­யா­வின் தாயார் திரு­மதி ஷாமினி குண­சீ­லன்.

"எங்­கள் மகள் கல்­விக்­கும் விளை­யாட்­டுக்­கும் தன் நேரத்­தைச் சம­மாக ஒதுக்க எங்­க­ளால் முடிந்த உத­வி­யைச் செய்­கி­றோம். இரண்­டி­லும் விடா­ முயற்­சி­யு­டன் ஈடு­பட நாங்­கள் அவளை ஊக்­கு­விக்­கி­றோம்," என்று கூறி­னார் தான்­யா­வின் தந்தை சிவ­கு­மார் மாடே­ரியா.

"போட்­டி­யில் கோல் ஷூட்­ட­ராக விளை­யா­டும் வாய்ப்பு கிடைத்­தது எனக்­கொரு மறக்­க­மு­டி­யாத பய­ணம். பல புள்­ளி­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­ற­போது நாங்­கள் அனு­ப­வித்த களைப்­புக்­கும் வலிக்­கும் பலன் கிடைத்­த­து­போல் இருந்­தது," என்று கூறி­னார் தான்யா.

"போட்­டி­யில் வெற்­றி­பெ­றக் குழு உணர்வு மிக முக்­கி­யம். பயிற்சி செய்­யும்­போது, பல சவால்­க­ளுக்­கி­டையே எங்­க­ளுக்­குள் நெருக்­க­மான உற­வு­களை வளர்த்­துக்­கொண்­டோம். ஒரு­வ­ரை­யொ­ரு­வர் உற்­சா­கப்­ப­டுத்­திக்­கொண்­டோம்," என்று தான்யா குறிப்­பிட்­டார்.

அதே பள்­ளி­யில் உயர்­நிலை 1ல் பயி­லும் சஹானா ஆனந்த், மூத்த விளை­யாட்­டா­ளர்­க­ளு­டன் விளை­யா­டு­வ­தில் தான் பெருமை கொள்­வ­தா­கக் கூறி­னார்.

'சி பிரிவு' குழு­வில் தன் பள்ளி­யைப் பிர­தி­நி­தித்து விளை­யா­டும் வாய்ப்பு உயர்­நிலை ஒன்­றாம் வகுப்­பைச் சேர்ந்த மாண­வி­யான தனக்கு அளிக்­கப்­பட்­ட­தில் பெரு­மி­தம் என்­றார் அவர்.

ஒன்­பது வய­தி­லி­ருந்தே வலைப்­பந்து விளை­யா­டி­வ­ரும் இவர், உயர்­நி­லைப் பள்­ளி­யி­லும் வலைப்­பந்து விளை­யாட வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் நேர­டிப் பள்ளி நுழை­வுச் சேர்க்­கைத் திட்­டத்­தின் மூலம் சிஎச்­ஐஜே உயர்­நி­லைப்­பள்­ளி­யின் வலைப்­பந்து அணி­யில் தனக்­கென ஓர் இடத்­தைப் பிடித்­தார்.

"என் பெற்­றோ­ரும் உற­வி­னர்­களும் நான் விளை­யா­டும் விளை­யாட்­டு­களில் பார்­வை­யா­ளர்­க­ளா­கக் கலந்­து­கொண்டு என்னை ஆத­ரிப்­பது என் மனதை நெகிழ வைக்­கிறது," என்­றார் சஹானா.

அடுத்த ஆண்­டுக்­கான போட்­டி­க­ளுக்கு இவ்­வாண்டு நவம்­பர் முதல் தங்கள் குழுவின் பயிற்சி தொடங்கிவிடும் என்று கூறிய சஹானா, எந்த விளை­யாட்­டாக இருந்­தா­லும் விளை­யாட்­டா­ளர்­கள் விடா­மு­யற்­சி­யைக் கைவி­டக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­து­கி­றார்.

செய்தி: காயத்­திரி காந்தி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!