இளையரை ஈர்க்கும் அனைத்து சமய நல்லிணக்கக் கட்டமைப்புகள்

அமெரிக்கா மீது 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து இன, சமய உறவுகள் பற்றி கவலைகொண்ட அப்போதைய பிரதமர் கோ சோக் டோங், சிங்கப்பூரில் அனைத்து சமய நன்னம்பிக்கைக் குழுக்களை 2002ல் அமைத்தார்.

இப்போது தீவு முழுவதும் 91 நன்னம்பிக்கைக் குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் 1,500க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

அந்தக் குழுவுக்கு 'அனைத்து இன, சமய நன்னம்பிக்கைக் குழுக்கள்' என்று முதலில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிறகு இந்த ஆண்டில் 'இன, சமய நல்லிணக்கக் குழுக்கள்' என்று அந்த கட்டமைப்புகள் குறிப்பிடப்படுகின்றன.

சிங்கப்பூரில் அனைத்து இன, சமயங்களுக்கு இடையில் நன்னம்பிக்கையை, நல்லுறவைப் பலப்படுத்த உதவுவது அந்தக் குழுக்களின் நோக்கமாக உள்ளது.

முன்னாள் மலாய் இளையர் அமைப்பின் தலைவராக இருந்த திரு அப்துல்லா ஷாஃபி, 63, அந்தக் கட்டமைப்புகள் முதன்முதலாக உருவாக்கப்பட்டபோது அதற்குத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

அவை தோற்றுவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆவதையொட்டி அண்மையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்டு ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சரான திரு கோ பேசினார்.

சாதாரண சிங்கப்பூரர்களும் சமூகத் தொண்டூழியர்களும் சமயத் தலைவர்களும் கலந்துறவாடி நன்னம்பிக்கையைப் பலப்படுத்துவதற்குத் தோதான அடிப்படைத் தளங்களை உருவாக்குவதே அப்போது தனது எண்ணமாக இருந்தது என்று திரு கோ குறிப்பிட்டார்.

அண்மையில் அந்தக் குழுக்களுக்குப் புத்துணர்வை அளிப்பதற்காக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சுடன் சேர்ந்து பல பரிந்துரைகளை ஒரு பணிக்குழு முன்வைத்தது.

அதன்படி, தேசிய அளவிலான செயல்திட்டங்களை உருவாக்குவது, கட்டமைப்புகளின் தன்மையைப் பலமுனைப்படுத்துவது, மேலும் பயிற்சிகள், வளங்கள், பங்காளித் துவ உறவுகள் மூலம் ஆற்றல் களைப் பெருக்குவது ஆகிய பலவும் அந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.

இதனிடையே, இளையர்களைக் கவர்ந்து ஈர்ப்பதே இந்தக் குழுக்கள் எதிர்நோக்கும் அடுத்த பெரிய சவால் என்று இந்த நன்னம்பிக்கைக் குழுக்களுக்குத் தலைமை தாங்கும் பலரும் தெரிவிக்கிறார்கள்.

அங் மோ கியோ, ஹவ்காங் நல்லிணக்கக் குழுவின் தலைவரான ஸ்ரீவர்தனன் வாசு பிள்ளை, 71, 'விருந்தினராக இருங்கள்' என்ற தத்ரூப மெய்நிகர் செயல்திட்டம் மூலம் மேலும் பல பதின்ம வயதினரைக் கவர முடிகிறது என்று தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமய நடைமுறைகள் பற்றி இளம் தலைமுறையினருக்குப் போதிக்க முடிகிறது. முதிய தலைமுறையினரும் இதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

மேரிமவுண்ட் நல்லிணக்கக் குழுவின் தலைவரான சந்திரமோகன் மருதன், 58, இளையரைத் தொடர்ந்து தனது குழு ஈடுபடுத்தும் என்று குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மேலும் பலரை ஈடுபடுத்தும் வகையில் பல்வேறு வழிபாட்டு இடங்களில் மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"இன நல்லிணக்கம் என்பது அதுவாக ஏற்பட்டுவிடாது. நன்னம்பிக்கையை ஏற்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்;

"வெவ்வேறு இன, சமயங்களுக்கு இடையில் ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு இருக்க வேண்டும்; பொதுவான வாய்ப்பு வசதிகளைப் பாதுகாக்க வேண் டும்," என்றார் திரு சந்திரமோகன்.

இதனிடையே, இயூ டீ நன்னம்பிக்கைக் குழுவின் தலைவரான டாக்டர் முருகேசன் சேது, 49, இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த நன்னம்பிக்கை பெருநடை நிகழ்ச்சி பற்றி கூறினார்.

அதில் கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்டவர்கள் மிகவும் ஊக்கம் தரும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாக டாக்டர் முருகேசன் சேது தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!