தடைக்கல்லைப் படிக்கல்லாக மாற்றினால் இலக்கை அடையலாம்

அனுஷா செல்­வ­மணி

கல்வி கற்க வயது ஒரு தடை­யில்லை என்­ப­தற்­கும் எந்த சவா­லை­யும் சமா­ளித்து தங்­கள் இலக்கை அடைவதில் முழுக் கவ­னத்­தை­யும் செலுத்தி வெற்றி பெற்ற இரு­வர் நேற்று சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் இவ்­வாண்டு பட்­ட­ம­ளிப்பு விழா­வில் பட்­டம் பெற்­ற­னர்.

கடந்த புதன்­கி­ழ­மை­யி­லி­ருந்து நேற்று வரை பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மண்­ட­பத்­தில் பட்­ட­ம­ளிப்புகள் நடை­பெற்­றன. பட்­டம் பெற்ற 2,800 பட்­ட­தா­ரி­கள் பெரும்­பா­லும், முது­கலை பட்­டம் பெற்­றார்­கள்.

சிறப்பு விருந்­தி­ன­ராக விழா­வில் கலந்­து­கொண்ட கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், "கல்­வி­யில் தேர்ச்சி பெறு­வ­தோடு மட்­டு­மல்­லா­மல் நமது சமூ­கத்­திற்­கும் நம்­மால் முடிந்த பங்­க­ளிப்பை ஆற்ற வேண்­டும்," என்று வலி­யு­றுத்­தி­னார்.

மனி­த­நே­யம், ந­டத்தை அறி­வி­யல் பள்­ளி­யில் பயின்று தமிழ் மொழி­யி­லும் இலக்­கி­யத்­தி­லும் இள­நிலை பட்­டம் பெற்­றார் 44 வய­தான திரு­மதி புவ­னேஸ்­வரி முரு­கன். தன் தாயா­ரு­ட­னும் இரண்டு மகள்­களு­ட­னும் வசிக்­கும் திரு­மதி புவ­னேஸ்­வரி, 2019ஆம் ஆண்­டில், தேர்­வு­கள் தொடங்­கு­வ­தற்கு இரண்டு நாள்­கள் இருக்­கை­யில், தம் கண­வரை இழந்­தார்.

தற்­போது பீட்டி உயர்­நி­லைப் பள்­ளி­யில் தமிழ் ஆசி­ரி­ய­ரா­கப் பணிபுரி­யும் இவர், இதற்கு முன்­னர் எட்டு ஆண்­டு­க­ளாக நிதித் துறை­யில், மென்­பொ­ருள் சோதனை ஆய்­வா­ள­ராக இருந்­தார்.

மாண­வர்­க­ளுக்கு தமிழ்­மொழி மீதான ஆர்­வத்­தைத் தூண்­டு­வது தமிழ் ஆசி­ரி­யர்­கள் என்று கூறும் திரு­மதி புவ­னேஸ்­வரி, 10 ஆண்டு­களுக்கு முன்பே தொடக்­கப் பள்­ளி­களில் மாண­வர்­க­ளுக்கு வாசிப்பு தொண்­டூ­ழி­ய­ராக இருந்து வந்­தார்.

திரு­மதி புவ­னேஸ்­வரி முழு­நேர வேலை பார்த்­துக்­கொண்டே சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ்­மொழி, இலக்­கி­யம் பட்­டப் படிப்­பில் சேர்ந்­தார். வேலை ஒருபுறம், படிப்பு மறு­பு­றம் என, அவர் தம் கண­வ­ரின் ஆத­ர­வோடு இரண்­டை­யும் சமா­ளித்து வந்­தார். "என் கண­வர் என்­னு­டைய தமிழ்­மொழி ஆர்­வத்­தைக் கண்டு, இந்­தப் படிப்­பில் சேர பரிந்­து­ரைக்­கா­மல் இருந்­தி­ருந்­தால், நான் இவ்­வ­ளவு தூரம் பய­ணித்­தி­ருக்க மாட்­டேன்," என்­றார் திரு­மதி புவ­னேஸ்­வரி.

கண­வ­ரின் திடீர் மறைவு அவரை புரட்­டிப் போட்­டி­ருந்­தா­லும், திரு­மதி புவ­னேஸ்­வரி துவண்­டு­போ­க­வில்லை. தன் வாழ்க்­கை­யில் ஏற்­பட்ட இந்தப் பேரி­ழப்பு, தன்­னு­டைய படிப்­புக்கு ஒரு தடையாக இருந்­து­விடக்கூடாது என்று விடா­மு­யற்சி­யு­டன் கல்­வி­யில் கவ­னம் செலுத்தி நேற்று பட்­டம் பெற்­றார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் 20 ஆண்­டு­க­ளுக்கு மேலாக அதி­காரி­யாகப் பணிபுரி­யும் 41 வயது திரு த.சீதா­த­ரன், உள­வி­ய­லில் இள­நிலை பட்­டம் பெற்­றார். நிபு­ணத்­துவ வாரண்ட் அதி­காரி பயிற்­சிக் கழ­கத்­தில் தலைமை பயிற்சி அதி­காரி­யாக உள்ள இவர், தம் கல்­விப் பய­ணத்தை பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பட்­ட­யம் பெற்­ற­வு­டன் நிறுத்­தி­னார்.

படை­யில் சேவை புரிந்த தமது 17வது ஆண்­டில், திரு சீதா­த­ர­னுக்கு இள­நிலை பட்டப் படிப்­புக்­கான சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் உபகார சம்பளம் வழங்கப்பட்டது. கடை­சி­யாக படித்­தது 20 ஆண்டு­க­ளுக்கு முன் என்­ப­தால், அவ­ருக்கு இந்த திடீர் மாற்­றம் ஒரு பெரிய சவா­லாக இருந்­தது. அவர் படித்த காலத்தை ஒப்­பிடு­கை­யில், கற்­றல்­முறை இப்­பொழுது வெகு­வாக மாறி­யுள்­ளது என்­ற அவர், இப்­போது கல்­வி­யில் சுய கற்­றல் அதி­கம் இருப்­ப­தும், தொழில்­நுட்­பத்தை ஒட்டி பாடங்­கள் நடத்­தப்­ப­டு­வ­தும் தாம் கண்ட பெரிய மாற்­றம் என்றார்.

"வயது குறைந்­த­வர்­களும் என் வய­தில் இருக்­கும் பெரி­ய­வர்­களும் வாழ்க்­கை­யில் ஒரு நோக்­கத்­தை­யும் இலக்­கை­யும் வைத்­துக்­கொள்ள வேண்­டும். நாம் சாதிக்க நேர­மும் வய­தும் ஒரு தடைக்­கல் அல்ல," என்­கி­றார் சீதா­த­ர­ன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!