‘கலைத்துறை பற்றிய மக்களின் எண்ணத்தை மாற்றுவேன்’

பொன்­மணி உத­ய­கு­மார்

திரைப்­ப­டத் தயா­ரிப்­பின் நுணுக்­கங்­கள் அனைத்­தை­யும் அறிய ஆர்­வம் கொண்ட 22 வயது அலீஷா ரணே அபி­ஜீத் (படம்), படப்­பி­டிப்பு, புகைப்­ப­டம் எடுத்­தல், திரைப்­பட ஒலிப்­ப­திவு போன்ற பல­த­ரப்­பட்ட அம்­சங்­களில் தன் திறன்­களை வளர்க்க விரும்பினார்.

அண்­மை­யில் நன்­யாங் நுண்­கலைக் கழ­கத்­தில் (நாஃபா) திரை ஊட­கத் துறை­யில் பட்­டம் பெற்ற இவர், 'நாஃபா சேர்­மன்' விரு­தை­யும் பெற்­றார்.

மாண­வர்­க­ளின் சாத­னை­க­ளை­யும் அர்ப்­ப­ணிப்­பை­யும் அங்­கீ­கரிக்­கும் விரு­து­களில் இது­வும் ஒன்­றா­கும்.

சிறு­வ­ய­தில் முக்­கி­ய­மான தருணங்­க­ளைத் தன் தாயார் காணொளி, புகைப்­ப­டங்­கள் மூலமும் பதி­விட்­ட­தைப் பார்த்து வளர்ந்த அலீ­ஷா­விற்கு இயல்­பாகவே புகைப்­ப­டங்­கள் மீதும் திரைப்­ப­டம் மீதும் ஆர்­வம் வளர்ந்­தது. ஏழு வய­தில் 'ஒலிம்­பஸ் ஃபில்ம்' புகைப்­ப­டக் கரு­வி­யைப் பரி­சா­கப் பெற்­றார்.

"நான் திரைப்­ப­டங்­களைப் போல புகைப்­ப­டம் எடுக்க ஆரம்­பித்­தேன். காலப்­போக்­கில், திரைப்­ப­டத் தயா­ரிப்பு என்­ப­தும் கலை வடி­வங்­களில் ஒன்று என்­றும் அது பார்ப்­ப­வ­ருக்கு இன்­பம் அளிக்­கக்­கூ­டி­யது என்பதும் எனக்­குப் புரிந்­தது. இந்தக் கலை வடி­வம் பல மாற்­றங்­க­ளைக் கண்­டி­ருந்­தா­லும் நான் அதில் நாட்­டம் குறை­யா­மல் இருக்­கி­றேன்," என்­றார் அலீஷா.

சிங்­கப்­பூர் இர­வு­நேர விழா 2021ல் பிராஸ் பாசா, புகிஸ் வட்­டா­ரத்­தின் தாவ­ரங்­கள் பற்றி ஆவ­ணப்­ப­டம் தயா­ரித்த அனுபவம் மாறுபட்ட ஒன்­றாக இருந்தது என்று அலீஷா பகிர்ந்­து­கொண்­டார்.

தொடர்ந்து திரைப்­ப­டம் தொடர்­பான தனது கலைத்­துறை அறிவை வளர்த்­துக்­கொண்ட அவர், கலைத்­துறை, கலைப்­படைப்பு­கள், கலை­ஞர்­கள் குறித்­துச் சமுதா­யத்­தின் பார்வை அடிப்­ப­டை­யில் 'யார் நீ' என்ற தலைப்­பில் மற்றோர் ஆவ­ணப்­படத்­தை­யும் தயா­ரித்­துள்­ளார்.

தனது படைப்­பு­களில் தனக்கு மிக­வும் பிடித்­த­மான படைப்பு இது என்­றார் அவர்.

'சண்டே டைம்ஸ்' வெளி­யிட்ட கருத்­தாய்வு முடி­வு­களில் சமு­தா­யத்­திற்கு அவசி­ய­மா­னவை என்று கரு­தப்­படும் வேலை­கள் குறித்து கேட்­கப்­பட்­ட­போது, கலை­ஞர்­கள் பார்க்­கும் வேலை­கள் சமு­தா­யத்­திற்கு அவ்வளவு அவ­சி­ய­மில்லை என 1000 பேரில் 71 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இது கலை மீது பேரார்­வம் கொண்­டுள்ள அலீ­ஷா­வின் சிந்­த­னை­யைப் பெரி­தும் தூண்டி­விட்­டது. இவரது படைப்­பிற்கு அது உந்­து­சக்­தி­யாக அமைந்­தது.

"கலை என்­பது அத்­தி­யா­வ­சி­யம் அன்று என்ற கருத்து பொது­வா­கவே நில­வு­வதை நான் அறி­வேன். ஆனால், வளர்ச்சி கண்ட நாடு­க­ளி­லும் இது­போன்ற சிந்­தனை இருப்பது எனக்கு அப்­போ­து­தான் தெரி­ய­வந்­தது," என்­றார் இவர்.

தன் கலைப்­ப­டைப்­பு­கள்­வழி எதிர்­கா­லத்­தில் இது­போன்ற எண்­ணங்­களில் மாற்­றம் கொண்­டு­வர வேண்­டும் என விரும்­பு­கி­றார்.

இவர் யூடி­யூப் ஊட­கத்­தில் தொழில் தொடங்­கிய பீட்­டர் மெக்­கின்­னொ­னின் படைப்­பு­க­ளைக்கண்டு திரைப்­ப­டத் துறை­யில் சாதிக்­கும் உற்­சா­கத்­தைப் பெற்­ற­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார்.

வருங்­கா­லத்­தில் தன் பய­ணத்தை இவர் திரும்­பிப் பார்க்­கை­யில் தனக்­குப் பெருமை அளிக்­கக்­கூ­டிய படைப்­பு­க­ளை­யும் மற்­ற­வர்­களுக்கு இன்­ப­ம­ளிக்­கும் படைப்­பு­க­ளை­யும் உரு­வாக்­க எண்­ணம் கொண்­டுள்­ள­தா­க­வும் அலீஷா குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!