பீட்ஸாக்களும் சமோசாக்களும் விநியோகம்

இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ் அமைப்பு, 200க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­க­ளின் உத­வி­யோடு தீபா­வ­ளியை முன்­னிட்டு 10,000 சமோ­சாக்­க­ளை­யும் 2000 பீட்ஸாக்­க­ளை­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­துள்­ளது. பீட்ஸா ஹட், அல்ட் பீட்ஸா ஆகிய பீஸா நிறுவனங்கள் இம்­மு­யற்­சிக்கு பீட்ஸாக்­களை தாரா­ள­மாக வழங்­கி­யுள்­ள­ன.

கோர்மெ ரெடி, எல்­ஜிடி வங்­கி­யும் அவற்­றின் ஆத­ரவை இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்­சுக்­குக் கொடுத்­த­ன.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள பல்­வேறு கட்­டட வேலை­யி­டங்­களில் பணி­யாற்­றும் 15,000 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் சாலை வேலை­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்­கும் தொண்­டூ­ழி­யர்­கள் தங்­க­ளின் வாக­னங்­களில் சமோ­சாக்­க­ளை­யும் பீட்ஸாக்­க­ளை­யும் கொண்டு சென்றனர்.

இந்த விநி­யோக முயற்­சி­யில் வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் திரு ஆல்­வின் டான் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­ட­தோடு அவ­ரும் தொண்­டூ­ழி­யர்­களைப் போல் வாக­னத்தை சொந்­த­மாக ஓட்டி, உணவை எடுத்­துக்­கொண்டு வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு விநி­யோ­கம் செய்­தார்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக மேற்­கொள்­ளப்­படும் இந்த விநி­யோக முயற்­சி­யின் மூலம் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் கடு­மை­யாக உழைப்­ப­தற்கு தொண்­டூ­ழி­யர்­கள் நன்றி தெரி­விப்­ப­தற்கு நல்ல வாய்ப்­பாக அமை­வ­தோடு இரு தரப்­புக்­கும் நல்­லு­றவு உரு­வாக வாய்ப்­ப­மை­கிறது.

தொண்­டூ­ழி­யர்­கள் இந்த முயற்­சிக்கு இரண்டு மாதங்­க­ளாக மும்­மு­ர­மாக ஏற்­பா­டு­க­ளைச் செய்­த­தா­கக் கூறி­னார் இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ் தொண்­டூ­ழிய அமைப்பை நிறு­விய தீபா சுவா­மி­நா­தன். உண­வைக் கொடுத்­த­போது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் முகம் மலர்­வ­தைக் கண்டு அள­வில்லா ஆனந்­தம் கிடைத்­த­தோடு இந்த அனு­ப­வம் தங்­க­ளின் மனதை உரு­கச் செய்­த­தென்று தொண்­டூ­ழி­யர்­கள் தெரி­வித்­த­னர்.

“இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ் சிறு சிறு வழி­களில் சமு­தா­யத்­திற்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் இடையே உள்ள இடை­வெ­ளி­யைக் குறைக்க விரும்­பு­கிறது. அவ்­வி­தத்­தில்­தான் இந்த தீபா­வளி விநி­யோக முயற்­சி­க்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு இம்­மா­தி­ரி­யான அனு­ப­வங்­க­ளின் வாயி­லா­கத் தொடர்ந்து இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­க­வும் அவர்­க­ளுக்­குத் தேவை­யான உத­வி­யை­யும் செய்ய உழைத்­துக்­கொண்டே இருக்­கும்,” என்­றார் தீபா சுவா­மி­நா­தன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!