‘மிஸ்டர் மிட்நயிட்’ தொடரில் உள்ளூர் கலைஞர் வடி பிவிஎஸ்எஸ் 

இளையர்களை, குறிப்பாக மாணவர்களை 1990களிலிருந்து 2000கள் வரை கவர்ந்த ‘மிஸ்டர் மிட்நயிட்’ திகில் புத்தக தொடர் இப்போது தொலைக்காட்சித் தொடராக தயாரிக்கப்பட்டு, அக்டோபர் 24ஆம் தேதி ‘நெட்ஃபிலிக்ஸ்’ தளத்தில் வெளியாக உள்ளது. இத்தொடரில் பலர் கண்டு ரசித்துள்ள உள்ளூர் கலைஞர் திரு வடிவழகன் (வடி பிவிஎஸ்எஸ்), 48, நடித்துள்ளார். ‘மேயர் டஃபா’ என்ற கதாபாத்திரத்தில் அவரை இந்தத் தொடரில் காணலாம்.

ஆங்கில கதாபாத்திரங்களில் நடித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதாகவும் இது மாதிரியான நல்ல வாய்ப்பை தவறவிட கூடாதென்ற சிந்தனையிலும் இந்த கதாபாத்திரத்திற்கு நடிப்புத் தேர்வுக்கான அழைப்பு வந்தபோது, திரு வடி சென்றிருக்கிறார். தேர்வின்போது இவரது நடிப்பை கண்ட திரைத்தொடர் குழு உடனடியாக இவருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்த இந்த படப்பிடிப்பை பற்றி பகிர்ந்து கொண்ட இவர், திரை தொடருக்காக பாத்தாமில் பிரமாண்டமான திரைப்பட மேடை அமைப்புகள் (sets) உருவாக்கப்பட்டதாகவும் visual effects சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

உதாரணத்திற்கு, தொடரில் வரும் ஒரு காட்சிக்காக 500 கலைஞர்கள் திரட்டப்பட்டதாகவும் கூறினார். அக்கட்சியின்போது ஒரு பெரிய திரையில் தொடர் சார்ந்த இவரது சுவோரோட்டியை கண்ட திரு வடி சுவோரிட்டியின் அளவை கண்டு பிரமித்திருக்கிறார். திரைத்தொடருக்காக மேடைகள் (sets) அமைக்கப்பட்ட இடத்தில் இதற்கு முன்பு ஹாலிவுட் திரைப்படங்களின் படப்பிடிப்பும் நடந்து இருக்கின்றன என்று அவர் கூறினார்.

படப்பிடிப்பின்போது, கலைஞர்களை படக்குழுவினர் நன்றாக பார்த்துக் கொண்டதாகவும், கொவிட்-19 கிருமி தொற்றின்போது படப்பிடிப்பு நடைப்பெற்றதால், இவர்களுக்கென தனியாக ஒரு குமிழி, அதாவது பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்தி பரமாரித்ததாகவும் திரு வடி பகிர்ந்து கொண்டார். இருப்பினும், ஒரு மாத காலம் நீடித்த இப்படப்பிடிப்பு முடிவுக்கு வந்தபோது, திரு வடி உட்பட சில கலைஞர்கள் கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிப்படைந்திருக்கின்றனர்.

இது மாதிரியான தாமதங்களால் தொடரின் வெளியிடு சற்று தாமதம் அடைந்திருக்கிறது என்று சொன்னார். தீபாவளி அன்று இந்த திரை தொடர் வெளியாக உள்ளது. ஆனால், இது தற்செயலான ஒன்றாக இருக்கும் என்று திரு வடி கூறினார்.

படப்பிடிப்பின்போது அவர் எதிர்நோக்கிய சவால்கள் என்னவென்று கேள்வி கேட்டபோது, “என் மனைவியைவிட்டு ஒரு மாதம் பிரிந்திருந்ததே எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்று அன்புடன் நினைவு கூர்ந்தார்.

ஆசிய நடிகர்களுடன் வெளியூர் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இந்தத் தொடரில் ‘மிஸ்டர் மிட்நயிட்’ புத்தங்கங்களைப் போலவே ஆசிய கோணத்திலிருந்து, பல கதை புள்ளிகள் அமைந்திருக்கும். “ஆசிய கோணத்தில், ஆசிய கதாபாத்திரங்களையும் பின்னணியையும் கொண்டு கதை சொல்லப்படுவது அண்மையில் அதிகரித்துள்ளது. இது மாதிரியான கதைகளுக்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. ஆகையால், இன்னும் அதிகமான கதைகள் இவ்வாறு உருவாக வேண்டும்,” என்ற கருத்தைத் திரு வடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!