பெரியோருக்கான கற்றலை மெருகேற்றும் புதிய தேசிய நிலையம்

மாதங்கி இளங்­கோ­வன்

பெரி­யோ­ருக்­கான கற்­றல் கழ­கம் (Institute of Adult Learning) பயிற்­சி­ய­ளிப்­ப­தற்கு மட்­டு­மல்­லா­மல் இனி பெரி­ய­வர்­க­ளின் உன்­ன­தக் கற்­ற­லுக்­கென ஒரு தேசிய நிலை­ய­மா­க­வும் (National Centre of Excellence for Adult Learning) செயல்­படும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் அறி­வித்­துள்­ளார். சிங்­கப்­பூ­ரர்­கள் போட்­டித்­தன்­மை­யு­ட­னும் காலத்­துக்­கேற்ற திறன்­க­ளு­ட­னும் விளங்க, தொடர்ந்து அவர்­க­ளுக்­குப் புதுத் திறன்­க­ளைக் கற்­றுத்­த­ரு­வ­தோடு பயிற்­சி­ய­ளிப்­பது மிக முக்­கி­யம்.

அப்­போ­து­தான், சிங்­கப்­பூ­ரர்­களால் தங்­கள் வாழ்­நாள் முழு­வ­தும் பணி­யின்­வழி சமு­தா­யத்­திற்­குத் தர­மா­கப் பங்­க­ளிக்க முடி­யும் என்­றார். புதுத் திறன்­களை உள்­வாங்கி வேலை­யில் இறங்­கும்­போது போது­மான வரு­மா­னம் ஈட்டி, தங்­க­ளை­யும் தங்­க­ளு­டைய குடும்­பத்­தா­ரை­யும் பரா­ம­ரித்து, குறிக்­கோ­ளோடு வேலை செய்­கி­றோம் என்ற உணர்­வை­யும் அடைய வாய்ப்பை உரு­வாக்­கிக்­கொள்ள முடி­யும்.

இரண்டு நாள் நடக்­கும் உல களா­விய வாழ்­நாள் கற்­ற­லுக்­கான உச்­ச­நிலை மாநாட்­டில் சிறப்­புரை ஆற்­றி­னார் அமைச்­சர் சான்.

பெரி­ய­வர்­க­ளின் உன்­ன­தக் கற்­ற­லுக்­குத் தேசிய நிலை­யத்தை உரு­வாக்­கு­வது உட்­பட சிங்­கப்­பூ­ரின் வாழ்­நாள் கற்­றல் திட்­டத்தை மேம்­படுத்­து­வ­தற்­கான சிங்­கப்­பூ­ரின் ஆறு முனை அணு­கு­மு­றையை அமைச்­சர் சான் விளக்­கி­னார்.

முத­லா­வ­தாக, சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளின் திறன்­க­ளைப் புரிந்­து­கொள்­ள­வும் மேலும் என்­னென்ன திறன்­கள் தேவை என்­பதை அடை­யா­ளம் காண­வும் இந்த அணு­கு­மு­றை­யின் கீழ் உதவி பெறு­வர்.

அடுத்து, புதுத் திறன்­க­ளுக்­கான தேவையை மேலும் சிறப்­பாக வெளிப்­ப­டுத்­த­வும் மதிப்­பி­ட­வும் நமது கட்­ட­மைப்பை மாற்­றி­ய­மைத்து வாய்ப்­பு­களை உரு­வாக்க வேண்­டும். மூன்­றா­வ­தாக, எதிர்­கா­லத்­தில் தேவைப்­படும் திறன்­க­ளைப் புரிந்து­கொள்­ள­வும் விரை­வா­கத் திறன்­களை வளர்த்­துக்­கொள்­ள­வும் தொழில்­நுட்­பத்தை முறை­யா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

பெரி­ய­வர்­க­ளுக்­கான கற்­றல் அணு­கு­மு­றை­கள் தொடர்­பில் ஆய்­வு­களை ஆழ­மாக்­கு­வதை நான்­கா­வது அம்­ச­மாக அவர் குறிப்­பிட்­டார்.

ஐந்­தா­வ­தாக, திறன் மேம்­பாட்­டி­லும் புதுத் திறன் பயிற்­சி­யி­லும் ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிப்­பவர்­கள் ஈடு­பட வேண்­டும்.

இறு­தி­யாக, தொழில்­து­றைக்­கும் கல்­வித்­து­றைக்­கும் இடையே உள்ள இணைப்பை மேலும் வலு­வாக்க வேண்­டும் என்­றார் அமைச்­சர் சான்.

கடந்த காலக் கற்­ற­லின் அடிப்­படை­யில் எதிர்­கா­லச் சவால்­க­ளைச் சந்­திக்க முடி­யாது என்­றார் அவர்.

"தற்­போ­தைய நிலை­யைக் காட்­டி­லும், ஊழி­யர்­க­ளுக்­குச் சரி­யான வாய்ப்­பு­களை அளிக்க வேண்­டும். அவர்­க­ளால் சமூ­கத்­தில் முன்­னேற முடி­யும். சமூக இணக்­கத்­திற்­கும் இது வழி­வ­குக்­கும்," என்­றார் அமைச்­சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!