அமைச்சர்: ஆசிரியர்களுக்குத் தொழில்நுட்பத் திறன் அவசியம்

ஆசி­ரி­யர்­கள், வாழ்நாள் முழு­வ­தி­லும் கற்றுக்­கொள்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் வலி­யு­றுத்­தி­னார்.

அறி­வைப் போதிக்­கும் ஆசி­ரி­யர்­கள் வகுப்­ப­றை­களில் தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்த தெரிந்­துவைத்திருக்­க­வேண்டும். வகுப்­ப­றைக்கு வெளியே பெற்றோர், தொழில்­து­றை­யி­னர் போன்ற பங்­கா­ளி­களு­டன் சேர்ந்து செயல்­ப­டக்கூடி­ய­வர்களாக அவர்­கள் இருக்க வேண்­டும் என்று அமைச்­சர் கூறி­னார்.

இந்தத் தேர்ச்­சி­கள் எல்­லாம் ஆசி­ரி­யர்­கள் வேலை­யைத் தொடங்­கும்­போது கற்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை என்­ப­தால் அவர்­கள் பணிக்காலம் முழு­வ­தும் தொடர்ந்து தங்­களை மேம்­ப­டுத்­திக்­கொண்டு வர­வேண்டும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

அதா­வது, ஆசி­ரி­யர்­கள் தாங்­களே வாழ்­நாள் முழு­வ­தும் கற்­றுக்­கொள்­ப­வர்­களாக இருக்க வேண்­டும் என்று திரு சான் குறிப்­பிட்­டார்.

அதே­வே­ளை­யில், ஆசி­ரி­யர்­க­ளுக்­குத் தலை­சி­றந்த தொழில்­நுட்ப ஆத­ரவு இருக்கும் என்­பதை அர­சாங்­கம் தொடர்ந்து உறு­திப்­ப­டுத்­தும் என்று அமைச்­சர் மேலும் தெரிவித்தார்.

கல்­வித்­து­றை­யின் தேவை­கள் மாறி­வரு­கின்­றன. அதைச் சமா­ளிக்­கும் வகை­யில் பயிற்சி ஆசி­ரி­யர்­க­ளைத் தேசிய கல்­விக் கழ­கம் எப்­படி உரு­வாக்கி வரு­கிறது என்று ஜாலான் புசார் குழுத்­தொ­குதி நாடாளுமன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி டெனிஸ் புவா நாடாளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார்.

அதற்கு அளித்த பதி­லில் அமைச்­சர் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

அறிவு, கல்வி ஆகி­ய­வற்­றின் தன்மை மாறி­வ­ரு­கிறது. இதன் கார­ண­மாக ஆசி­ரி­யர்­க­ளுக்­குத் தேவைப்­ப­டக்­கூ­டிய தேர்ச்சி­களும் மாறி வரு­கின்­றன.

"அறிவு மட்­டும் போதாது. அந்த அறிவைப் பயன்­ப­டுத்தி வலு­வான நன்னெ­றி­கள் அடிப்­ப­டை­யில் தெள்­ளத்தெளி­வான நல்ல முடி­வு­களை எடுக்க வேண்­டி­யது அதை­விட முக்­கி­ய­மா­னது.

"ஆகை­யால், நம்­மு­டைய ஆசி­ரி­யர்­களின் தேர்ச்­சி­கள் தொடர்ந்து பரி­ண­மித்து வர­வேண்­டும்," என்று அமைச்­சர் வலியுறுத்திக் கூறி­னார்.

அதி­கத் திறன் வாய்ந்த மாண­வர்­கள் தங்­க­ளு­டைய முழு ஆற்­றல் அள­வுக்கு மேம்­ப­டு­வ­தற்குக் கல்வி போத­னை­யா­ளர்­கள் உதவ வேண்­டும்.

சிறப்புத் தேவை உள்­ள­வர்­க­ளை­யும் அவர்கள் கவ­னித்­துக்­கொள்ள வேண்­டும். இவற்­றைப் பொறுத்­த­வரை தொழில்­நுட்­பம் ஆசிரியர்களுக்கு உதவ முடி­யும் என்று அமைச்­சர் கூறி­னார்.

தேர்ச்­சி­கள் மாற்­ற­ம­டை­யும், பரி­ண­மிக்கும் என்­றா­லும்­கூட ஆசி­ரி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கும் முறை போன்ற சில அடிப்­ப­டை­கள் மாற­மாட்டா என்று திரு சான் குறிப்­பிட்­டார்.

தேசிய கல்­விக் கழ­கம் கல்வி அமைச்­சு­டன் சேர்ந்து அணுக்­க­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது.

மாண­வர்­க­ளிடம் நல்ல குண­ந­லன்­களைப் பலப்­ப­டுத்­தும் வகை­யில் ஆசி­ரி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­தில் அதன் பாடத்­திட்­டம் ஒரு­மித்தகவ­னம் செலுத்து­கிறது என்­றும் திரு சான் குறிப்­பிட்­டார்.

ஆசி­ரி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை மட்டு­மின்றி அவர்­க­ளின் தரத்­தை­யும் உன்னத நிலைக்கு உயர்த்துவதில் அமைச்சு ஒரு­மித்தகவ­னம் செலுத்­து­கிறது என்று அமைச்சர் கூறினார்.

ஆசி­ரி­யர்­க­ளுக்குத் தொழில்­நுட்ப ஆதரவு இருக்­கிறது என்­ப­தை­யும் கல்வி அமைச்சு உறு­திப்­ப­டுத்­து­கிறது என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!